Store
  Store
  Store
  Store
  Store
  Store

பூர்வீக சொத்து யாருக்கு கிடைக்கும்...?


    னது தகப்பனார் மிக கடினமான உழைப்பாளி காலையில் ஐந்து மணிக்கு கண் விழித்ததிலிருந்து இரவு உறங்க போகும் நேரம் வரை ஓடி கொண்டே இருப்பார் எனக்கு விவரம் தெரிந்து தலைவலி தாங்கமுடியாத ஜுரம் என்றால் தான் அவரை வீட்டில் பார்க்க முடியும் இப்படி பட்ட உழைப்பாளியிடம் சொத்து சுகம் சேர்வதில் ஆச்சரியம் இல்லை எனது தாத்தாவின் பூர்விக சொத்தும் அப்பாவின் சொந்த சம்பாத்திய சொத்தும் என்று ஏராளமான சொத்துபத்துக்கள் எங்களுக்கு உண்டு 

1970 ம் வருடமே எங்கள் தென்னதோப்பு மூலம் கிடைக்கும் வருவாய் மாதம் 5000 ரூபாயை தாண்டும் இது தவிர ரைஸ்மில் மாவு மில் எண்ணெய் மில் இவைகளிலிருந்து கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்றே எங்களுக்கு தெரியாது ஜவுளிக்கடை நகைக்கடை என்ற கடைகளும் உண்டு வீட்டில் எப்போதுமே ஐம்பது பசுமாடுகளுக்கு மேல் இருக்கும் அவைகளை பராமரிக்கவும் வீட்டு வேலைகளை கவனிக்கவும் இருபதுக்கு மேல் வேலையாட்கள் வீட்டில் உண்டு 


எங்கள் சமயலறையின் அடுப்பு அனைவதே இல்லை சொந்த பந்தங்கள் வீட்டில் உள்ளவர்கள் தீடிர் விருந்தினர்கள் என்று யாரவது வந்து கொண்டே இருப்பார்கள் சமையல் நடந்து கொண்டே இருக்கும் எங்கள் ஊரில் உள்ள பெரியவர்கள் சிவலிங்க தேவர் வீட்டுக்கு போனால் சாமத்தில் கூட இலை போட்டு சாப்பிடலாம் என்று சொல்லும் அளவிற்கு எங்கள் வீட்டு கூடத்தில் விருந்து நடந்து கொண்டே இருக்கும் 

அப்பா ஏழை பணக்காரன் சொந்தகாரன் அந்நியன் என்று வேற்றுமை பாராட்டமாட்டார் தன்னால் முடிந்த உதவியை செய்து கொண்டே இருப்பார் பல நேரங்களில் யாருக்கு என்ன உதவி செய்தோம் என்பது கூட அவருக்கு நினைவில் இருக்காது உபகாரம் பெற்றவர்கள் நினைவு படுத்தினால் உண்டு இப்படி பட்ட என் தந்தையார் ஒரு நாள் இரைவில் உறங்க போனவர் கண் விழிக்கவே இல்லை எங்களை எல்லாம் அனாதைகளாக்கி விட்டு நிம்மதியாக கண்ணை மூடிவிட்டார் 

அப்பாவிற்கு பிறகு அண்ணாதான் அனைத்து நிர்வாகத்தையும் கவனிக்க துவங்கினார் அப்போது தான் எங்களுக்கு ஒரு பயங்கரமான உண்மை தெரிந்தது எங்கள் தந்தையார் எந்த அளவு கடினமாக சம்பாதித்திருந்தாரோ அதே அளவு கடனும் பட்டிருக்கிறார் என்பது தெரிந்து ஆடி போய்விட்டோம் நானும் அண்ணாவும் சேர்ந்து முடிவு செய்து கடன்களை அடைக்க சில சொத்துக்களை விற்பது என்று தீர்மானித்தோம் 


எந்த முகூர்த்ததில் இப்படி ஒரு தீர்மானம் எடுத்தோமோ தெரியவில்லை அன்று முதல் எங்கள் சொத்துக்கள் ஒவ்வொன்றும் கைவிட்டே போக ஆரம்பித்தது கோடிஸ்வரனின் மகன்களான நாங்கள் விவரம் தெரியாமல் வளர்ந்ததனால் பலரால் ஏமாற்றவும் பட்டோம் இதனாலும் சொத்துக்களை இழந்தோம் கடேசியில் மிச்சமிருந்த ஒரே ஒரு தென்னந்தோப்பை விற்று பணத்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊரை விட்டு பரதேசிகள் போல் சென்னைக்கு வந்து சேர்ந்தோம் 

பல்லாவரத்தில் தோல்தொழில்சாலை ஒன்றை ஆரம்பித்தோம் அதுவும் நஷ்டமாகி கையிலிருந்த பணம் எல்லாம் பறிபோய்விட்டது நானும் என் அண்ணனும் திக்கற்றவர்களாக சென்னை வீதியில் திரிந்தோம் எங்கள் சொந்த வீட்டின் நீள அகலம் நாலாயிரம் சதுரடிக்கு மேல் ஆனால் வாடகை கொடுக்க கூட வழியில்லாமல் ஒரு தகர குடிசையில் மனைவி மக்களோடு பசி பட்டினியை மறைத்துக்கொண்டு கெளரவத்துக்காக போராடினோம் 

இந்த நிலையில் என் அண்ணனை தொழுநோய் தாக்கியது அதை அவமானகரமாக கருதிய அவர் தூக்கு போட்டுக்கொண்டு செத்துபோனார் அண்ணியும் அண்ணனின் இரண்டு பெண்குழந்தையும் என் மனைவியும் என் ஒரே மகளும் செய்வதறியாது தவித்தோம் அவர்களுக்கு பசியாற ஒரு பிடி சாதம் கொடுக்க கூட என்னால் முடியவில்லை ஊருக்கெல்லாம் விருந்து வைத்தவரின் பிள்ளைகள் சோற்றுக்கு வழியில்லாமல் தத்தளித்தோம் 


இந்த நிலையில் என் தகப்பனாரிடம் எதோ உதவி பெற்ற ஒருவரை சந்தித்தேன் அவரிடம் என் ஏழ்மையை சொல்ல வெட்கப்பட்டு மெளனமாக இருந்தேன் அவர் அதை புரிந்து கொண்டு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார் எண்பதுகளின் முடிவில் அந்த தொகை மிகவும் பெரியது கடேசி முயற்சியாக இதை வைத்து தொழில் செய்வோம் இதிலும் தோற்று விட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என்று முடிவு செய்து ராமாபுரம் பகுதியில் பழைய இரும்பு கடை ஆரம்பித்தேன் 

கடவுளுன் அருளோ என் தகப்பனாரின் தொண்டின் பயனோ தெரியவில்லை வியாபாரம் நன்றாக வளர ஆரம்பித்தது ஒரு கடை என்றிருந்தது இரண்டானது கார் ஒன்று வாங்கி வாடகைக்கு விட்டேன் அதுவும் பெருகியது சென்னையில் சொந்த வீடு கட்டினேன் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தேன் இன்று என் அண்ணன் குழந்தைகள் இருவரும் டாக்டர்கள் அமெரிக்காவில் குடும்பத்தோடு இருக்கிறார்கள் என் குழந்தையும் பொறியாளருக்கு படித்து நல்ல கணவனோடு சுகமாக வாழ்கிறாள் உண்மையை சொல்வது என்றால் இன்று தமிழ்நாட்டில் அதிகமாக வருமான வரி கட்டும் நூறு பேரில் நானும் ஒருவனாக இருப்பேன் 


இருந்தாலும் என் தகப்பனாரின் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய தென்னந்தோப்பை மீண்டும் நான் வாங்க ஆசை பட்டேன் என்ன காரணமோ தெரியவில்லை அதை வாங்க முடியவில்லை அது மட்டுமல்ல என் பூர்விக சொத்துக்கள் என்று இருந்ததை எதையுமே என்னால் மீட்டெடுக்க முடியவில்லை எனக்குள் தீராத ஒரு ஆசை உண்டு அது என் தகப்பனாரின் சம்பாத்தியத்தில் உருவான ஒரு அடி நிலைத்தையாவது அவர் நினைவாக நான் பெற வேண்டும் என்பது அது மட்டும் எத்தனை முயற்சி செய்தும் இதுவரை நடைபெறவே இல்லை 

சுவாமி என் ஜாதகத்தை சற்று கவனமாக பாருங்கள் அதில் நான் பூர்விக சொத்துக்களில் ஒன்றையாவது பெற முடியுமா? என்ற யோகம் இருக்கிறதா? என்பதை பார்த்து சொல்லுங்கள் உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் அதை என் தந்தையாரின் பதிலாகவே எடுத்துக்கொண்டு அமைதி அடைவேன் தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

முத்துசாமி தேவர் சென்னை 



   ங்கள் கடிதத்தை படிக்கும் போது சோக ரசம் ததும்புகின்ற ஒரு இலக்கியத்தை படிப்பது போன்ற உணர்வு வருகிறது யானை விழுந்தாலும் குதிரை மட்டம் என்பது போல் கொடிய வறுமை சூழ்ந்த போதும் உழைக்க வேண்டும் முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு அயராது பாடுபட்டு இருக்கிறீர்களே அந்த உழைப்பிற்கு அந்த நம்பிக்கைக்கு முதலில் என் வணக்கம் 

இறைவன் சில நேரங்களில் சிலரை சிரிக்க வைக்கிறான் சில நேரங்களில் அழசெய்கிறான் அது ஏன் எதற்காக என்று சாதாரன மனித மூளைக்கு தெரிவதில்லை அது தெரிந்து விட்டால் நாமும் கடவுளாகி விடுவோம் கடவுளின் எண்ணில் அடங்காத விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என அமைதி பட்டுக்கொள்வது தான் மன சாந்திக்கு சிறந்த வழி 

உங்கள் ஜாதகத்தை மிக கவனத்தோடு பரிசீலினை செய்து பார்த்தேன் அதில் வருகின்ற விவரங்கள் அனைத்தையும் மறைக்காமல் சொல்லிவிடுவது தான் சரி என்று கருதுகிறேன் 

பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் அதிபதிகளை ஆறாம் இடத்து அதிபதியால் பார்க்க பட்டால் அவனின் மூதாதையரின் சொத்துக்கள் தந்தை விழியில் உள்ள உறவுகளால் இழந்து போகும் சூழல் உருவாகும் அதே போலவே நான்கு மற்றும் பன்னிரெண்டாம் அதிபதிகளை பாவ கிரகங்கள் பார்த்தால் தாய்வழி உறவினரால் சொத்துக்கள் அழிந்து விடும் துரதிஷ்ட வசமாக உங்கள் ஜாதகத்தில் இந்த இரண்டு அமைப்புகளும் வலுவாக இருக்கிறது 

நீங்கள் பெரிய மனதோடு சொத்துக்கள் போனதற்கு உறவினர்கள் காரணம் என்பதை சொல்லாமல் விட்டாலும் அது தான் நடைபெற்றது என்பதை உங்கள் ஜாதகம் தெளிவாக காட்டுகிறது குற்றவாளி இன்னார் என்று தெரிந்தும் அவர்களை காட்டிக்கொடுக்காமல் கோபம் பாராட்டாமல் மன்னிக்கும் உங்கள் சுபாவம் மிக பெரியது அதற்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

மேலும் உங்கள் ஜாதகப்படி பூர்விக சொத்துக்கள் சர்வ நாசம் அடையும் என்றே ஜாதக அலங்காரம் ஜாதக சாராவளி போன்ற நூல்கள் கூறுகின்றன அவற்றின் அடிப்படையிலும் என் அனுபவத்தின் மூலமும் உங்களுக்கு சொல்வது என்னவென்றால் தந்தையாரின் சொத்துக்களை திரும்ப பெரும் எண்ணத்தை விட்டு விட்டு உங்கள் தந்தை பெயரில் அறகட்டளை துவங்கி ஏழைகளுக்கு முடிந்ததை செய்யுங்கள் அதன் மூலம் உங்கள் மூதாதையரின் ஆசிர்வாதம் எப்போதும் தொடரும்.


Contact Form

Name

Email *

Message *