Store
  Store
  Store
  Store
  Store
  Store

காதலில் சாதிக்கும் ஜாதகம்


  ன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களை போன்ற மாஹாமனிதரிடம் இத்தகைய கேள்வி கேட்பது பெரிய தவறு ஆனாலும் என் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதனால் கேட்டே ஆகவேண்டிய சூழலில் இருக்கிறேன் தயவு செய்து என் தவறுக்கு மன்னித்து நல்ல வழி காட்டுமாறு பணிவோடு வேண்டுகிறேன் 

பிறப்பால் நான் பிராமணன் ஆனாலும் இரண்டு வருடமாக தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பெண் ஒருத்தியை காதலிக்கிறேன் அவள் மிகவும் நல்லவள் மிக உயர்ந்த குணம் படைத்தவள் அதிகமாக படிக்கவில்லை என்றாலும் அறிவானவள் அவள் அறிவு கூர்மை தான் என்னை கவர்ந்தது 

நான் முப்பது வயதை தொட்டுவிட்டதாலும் நல்லவேலை கிடைத்துவிட்டதாலும் பெண்பார்க்க வீட்டில் ஆரம்பித்து விட்டார்கள் என் விஷயத்தை எப்படி அவர்களிடம் தெரிவிப்பது என்றே புரியவில்லை அப்பா மிக கண்டிப்பாக மடி ஆச்சாரம் பார்ப்பவர் என் காதலை ஏற்று கொள்வதற்கு எத்தனையோ தடைகள் அவருக்கு உண்டு அம்மா எதுவும் சொல்லமாட்டாள் என்றாலும் கூட அப்பாவை மீறுவதற்கு அவ்வளவு தைரியம் போதாது இதனால் பெற்றோர்கள் சம்மதித்து என் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை குறைவாக இருக்கிறது 

ஜாதியை தாண்டி வீட்டாரை எதிர்த்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் நல்ல முறையில் வாழ்ந்தது இல்லை வீணாக விஷபரிட்சை செய்து வாழ்வை பாழ்படுத்தாதே என்று சில நண்பர்கள் புத்தி சொல்கிறார்கள் சில பேர் வாழ்வில் நடைபெற்ற நிஜங்களையும் எடுத்து காட்டுகிறார்கள் 

ஆனாலும் என் மனது என்னை நம்பிய அவளை கைவிடுவதற்கு சித்தமாக இல்லை எப்படியும் இணைந்து வாழ்வது என்று முடிவு செய்துவிட்டேன் ஆனாலும் நான் சாராசரியான மனிதன் எனது முடிவு சரியானது தானா தவறாக போய்விடுமா என்று நினைத்து குழம்புகிறேன் அச்சப்படுகிறேன் இதனால் செயலில் இறங்க தயங்குகிறேன் 

ஐயா என் பார்வையில் எல்லாம் உணர்ந்தவர் நீங்கள் இப்போது நான் என்ன முடிவு எடுக்க வேண்டும் காதலியை கைவிடுவதா பெற்றோர்களை புறக்கணிப்பதா எது செய்தால் நன்றாக இருக்கும் என்று மறைக்காமல் சொல்லுங்கள் நீங்கள் சொல்வது எதுவாக இருந்தாலும் தெய்வ வாக்காக எடுத்து கொள்கிறேன் 
சோமநாதன்,திருச்சி 



    ங்களது தந்தையார் காலகாலமாக பின்பற்ற பட்டுவரும் சாஸ்திர சம்பிராதயங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர் அவரிடம் திடீர் என்று ஒரு நாள் காலையில் உங்களது நம்பிக்கை ஆதாரமற்றது உடனடியாக நீங்கள் கைவிட வேண்டும் என்று சொன்னால் அவரால் நிச்சயம் அதை ஏற்று கொள்ள முடியாது 

நமது தமிழ் சமூகம் வளர்ந்து விட்டது என்று நாம் பேசிக்கொண்டாலும் ஜாதி பாகுபாடெல்லாம் மறைந்து விட்டது என்று சபையில் மார்தட்டி கொண்டாலும் நிச்சயம் அது உண்மை இல்லை என்பது நமக்கு தெரியும் அலுவலகத்தில் அண்டைவீட்டு உறவில் கடன் கொடுத்து வாங்குவதில் கூட ஜாதி இருப்பதை காணமுடிகிறது அதை மறுத்தால் கண்ணை மூடிக்கொண்டு நான் குருடன் என்று சொல்வது போலாகிவிடும் கிராமத்தில் தான் இன்னும் ஜாதி இருக்கிறது நகரத்தில் இல்லை என்று சொல்வது கூட நாகரீக பொய் தான் இந்தியாவின் மூலை முடுக்குகள் அனைத்திலுமே இன்னும் ஜாதி செழுமையோடு இருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக பார்க்கிறோம் வேண்டுமானால் அதன் வீரியம் குறைந்திருக்கிறது என்று சொல்லலாம் 

எனவே உங்களது பெற்றோர்கள் கலப்பு மணம் புரிவதை ஏற்று கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது வீணான கால விரையம் ஒரு வேளை அதிஷ்டவசமாக அது நடந்தால் இறைவனுக்கு நன்றி அதே போல கலப்பு மணம் காதல் மணம் செய்தவர்கள் அனைவரும் துன்பபடுவார்கள் என்று உங்கள் நண்பர்கள் சொல்வதை முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது எனக்கு தெரிந்த எத்தனையோ காதல் மண தம்பதிகள் சந்தோசமாக வாழ்வதை நான் நேருக்கு நேராக பார்க்கிறேன் 

மேலும் உங்கள் ஜாதகத்தில் புதனுக்கு இரண்டாவது இடத்தில் கேது இருக்கிறது பொதுவாக ஒரு ஜாதகத்தில் புதனுக்கு ஒன்று இரண்டு ஐந்து ஒன்பது ஆகிய இடங்களில் கேது இருந்தால் அவர்கள் காதல் வசப்படுவார்கள் என்று கெளசிக நாடி சொல்கிறது அத்தோடு அப்படி இருக்கும் கேதுவை குருவோ சுக்கிரனோ பார்த்தால் காதல் திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது உங்கள் ஜாதக கட்டத்தில் கேதுவை குரு பார்க்கிறது எனவே உங்களுக்கு காதல் திருமணம் தான் நடக்கும் அதுவும் நல்ல படியாக வாழ்நாள் முழுவதும் தொடரும் என்று உறுதியாக சொல்லலாம் 

மேலும் நீங்கள் விரும்பும் பெண்ணின் ஜாதகத்தை கணித்து பார்க்கும் போது அவளும் தனது பெற்றோர்களின் எதிர்ப்பை சம்பாதித்து திருமணம் செய்து கொள்வாள் என்ற ஒரே ஒரு குறையை தவிர வேறு எந்த குறையையும் ஜாதகத்தை வைத்து அவள் மீது சொல்ல முடியாது குணத்திலும் நல்லவள் ஐஸ்வர்யம் மக்கட்பேறு தீர்க்க ஆயுள் பதிவிரதா தன்மை போன்றவற்றிலும் மிக சிறந்தவள் ஆவாள் 

நான் மட்டும் உங்கள் தகப்பனாக இருந்தால் அவள் வீட்டு வாசலில் தவம் கிடந்தாவது இந்த பெண்ணை உனக்கு மண முடித்து வைப்பேன் தைரியமாக திருமணத்திற்கு நாள்குறி நல்ல வாழ்வை ஆயிரம் எதிர்ப்பு வந்தாலும் துவங்கு கடவுள் அருளால் நாளாவட்டத்தில் பிரிந்த உறவுகள் தேடி வரும் என் ஆசிர்வாதம் எப்போதும் உன் கூடவே இருக்கும் நாராயணன் நல்லது செய்வான்.


Contact Form

Name

Email *

Message *