Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஏழரை சனிக்கு என்ன தானம்...?


  • ழரை சனி காலத்தில் தானம் கொடுப்பது சிறந்தது என்று கருதுகிறார்களே அப்படியானால் என்னென்ன தானங்கள் கொடுக்கலாம் ஜோதிடப்படி விளக்கம் தாருங்கள் 
ரமேஷ்.கனடா "மாஷாஸ்ச தைலம் விமலேந்த்திர நீலம்
திலா குளுத்தா ஹி மஹீச லோஹம்!
ஸதஷிணாம் சேதி வதந்தி தாநிம்
துஷ்டாய தாநம் ரவி நந்தனாய !!என்று ஒரு வடமொழி சுலோகம் இருக்கிறது அதில் சனிஸ்வரனை திருப்தி படுத்த தைலம் அதாவது நல்லெண்ணெய் தூய்மையான நீல கல்,எள்,உளுந்து பூமி இரும்பு ஆகியவற்றை தானமாக அளிக்கலாம் 

மேலும் கருமை நிற ஆடு கருமைநிற பசு எருமை மாடு ஆகியவற்றையும் தானமாக கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது 

இவைகளில் நம்மால் முடிந்தது நமது பொருளாதார சூழலுக்கு ஏற்றது என்று மட்டும் தானம் கொடுத்தால் போதுமானது சக்திக்கு மீறி கொடுப்பது தானம் அல்ல ஆடம்பரம்

இதை மனதில் வைத்து தானம் கொடுக்க வேண்டும் என்னை கேட்டால் வறுமையில் இருப்பவர்கள் சனிக்கிழமை ஆஞ்சிநேயர் கோவிலுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் தானமாக கொடுப்பது மிக சிறந்தது என்பேன்.


Contact Form

Name

Email *

Message *