( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பேசாத குழந்தைகள் பிறப்பது ஏன்?


  ணக்கத்திற்குரிய குருஜி அவர்களுக்கு சேலத்தில் இருந்து மாலாதேவி எழுதுவது உங்கள் வலைதளத்தை சில மாதங்களாக தொடர்ந்து படித்து வருகிறேன் பல விஷயங்கள் எனக்கு வியப்பாகவும் பயனுள்ளதாகவும் சொல்கீர்கள் அதற்காக எனது நன்றிகள் ஐயா எனக்கு திருமணம் முடிந்து எழுவருடத்திற்கு பிறகே ஒரு பெண்குழந்தை பிறந்தது வெகுநாட்கள் காத்திருந்து பிறந்த குழந்தை என்பதனால் அளவுக்கதிகமான பாசத்தோடு வளர்த்தோம் குழந்தைக்கு இரண்டு வயது பூர்த்தியான பிறகுதான் அவளால் பேசவும் முடியாது கேட்கவும் முடியாது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம் என் கணவர் வாழ்க்கையில் வெறுப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார்

பார்க்காத வைத்தியம் இல்லை வணங்காத தெய்வம் இல்லை எங்களது அழுகுரல் மட்டும் தெய்வத்தின் காதிலும் விழவில்லை விஞ்ஞானத்தின் செவிகளும் அதை கேட்கவில்லை எனது மகள் பேச மாட்டாள் அவளது மழலை குரலை இனி கேட்கமுடியாது என்ற எண்ணத்தில் எனது கணவர் நடைபிணமாகவே ஆகி விட்டார் பெண்ணான என்னால் கூட இதை ஓரளவு தாங்கி கொள்ள முடிகிறது ஆனால் என் கணவரால் இந்த உண்மையை ஜீரணிக்கவே முடியவில்லை

என் குழந்தையின் எதிர்காலத்திற்காக இல்லை என்றாலும் என் கணவரின் ஏக்கத்திற்காவது அவள் பேச வேண்டும் என்று நினைக்கிறேன் என் மகளின் ஜாதகப்படி அவள் பேசுவாளா? அதற்க்கான வாய்ப்பு உண்டா என்பதை கூறுமாறு அன்போடு வேண்டுகிறேன் உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன்
மாலாதேவி, சேலம்


   பாசம் என்பது பெண்களுக்கு தான் அதிகம் ஆண்களுக்கு குறைவு என்றும் பெண்மையின் மனம் தான் மென்மையானது ஆணின் மனமோ வன்மையானது என்று சொல்லப்படுகின்ற கருத்தை நான் எப்போதும் ஏற்றுக்கொண்டது கிடையாது ஆணுக்குள் பெண்மையும் பெண்மைக்குள் ஆண்மையும் உறங்கி கொண்டிருக்கிறது என்றே பலமுறை வாதாடி இருக்கிறேன் என் கூற்றுக்கு சரியான ஆதாரமாக உங்கள் கடிதம் அமைந்துள்ளது அதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்

ஒரு குழந்தை எப்படி பிறக்கிறது என்று நமக்கு தெரியும் ஏறக்குறைய மூன்னுறூ நாட்கள் கருவறை வாசம் புரிந்தே எல்லோரும் பிறக்கிறோம் இது அனைவரும் அறிந்த சங்கதி ஆனால் குழந்தை ஏன் பிறக்கிறது என்று நமக்கு தெரியுமா? நிச்சயம் தெரியாது அப்படி தெரிந்து விட்டால் சாதாரண மனிதர்களாகிய நாம் கடவுளாகி விடுவோம் இதே போன்றுதான் மனிதர்களான நமக்கு துன்பம் ஏன் வருகிறது எதற்காக கஷ்டத்தை அனுபவிக்கிறோம் என்று உடனடியாக தெரிவதில்லை இதனால் துன்பம் வரும் நாளில் அறியாமையால் கடவுளை திட்டுகிறோம்

உங்களுக்கும் கடவுள் இப்படி ஒரு வேதனையை ஏன் கொடுத்துள்ளார் என்பது எனக்கு விளங்கவில்லை ஆனால் கண்ணுக்கு தெரியாத விவரிக்க முடியாத எதாவது ஒரு நன்மை அதில் இருக்கும் அது இப்போது நமக்கு தெரியவில்லை என்றாலும் காலம் போக போக தெரியும் என்று நினைக்கிறேன்

துயரங்கள் வருவதற்கு முன்பு அதுவராமல் இருக்க என்னென்ன தடைகளை போடலாம் என்று சிந்திக்கலாம் அதை அண்டவிடாமல் போராடி பார்க்கலாம் ஆனால் துயரம் வந்த பிறகு அதை நினைத்து தொடர்ச்சியாக வருத்தப்படுவது புத்திசாலிக்கு அழகல்ல வந்த துயரத்தில் இருந்து எப்படி விடுபடலாம் என்று யோசிப்பது தான் சரியான வழிமுறை

உங்கள் குழந்தையின் ஜாதகத்தை ஒரு முறைக்கு பல முறை ஆராய்ந்து பார்த்தேன் ஒரு ஜாதகத்தில் இரண்டு மற்றும் மூன்று ஆகிய வீடுகளுக்குரிய கிரகங்கள் ஆறு எட்டு பனிரெண்டு ஆகிய இடங்களில் இருந்தாலும் அந்த இடத்தின் அதிபதிகளை தீய கோள்கள் பார்த்தாலும் ஜாதகன் பேசாமலும் கேட்காமலும் இருப்பான் என்றும் அந்த ரோகத்தில் இருந்து விடுதலை அடைய முடியாது என்றும் பல ஜோதிட நூல்கள் கூறுகின்றன

துரதிஷ்டவசமாக உங்கள் அன்பு மகளின் ஜாதகம் நான் மேலே சொன்னப்படி அமைந்துள்ளது அதனால் குழந்தை இந்த தன்மையிலிருந்து விடுதலை அடைவது மிகவும் கடினம் ஆனாலும் கடவுள் ஒரு ஜன்னலை மூடினால் வேறொரு கதவை திறப்பான் என்பது விதி எனவே உங்கள் குழந்தையிடம் உள்ள வேறு திறன்களை வளர்க்க முயற்சி செய்யுங்கள் அதன் எதிர்காலத்திற்கு உதவும்

நன்றாக பேசத் தெரிந்த பல பேர் வாழமுடியாமலும் திண்டாடுவதையும் பேசவே முடியாதவர்கள் வெற்றியாளர்களாக பவனி வருவதையும் நான் பார்த்திருக்கிறேன் கடவுளை நம்புங்கள் அவன் கைவிட மாட்டான்
+ comments + 5 comments

Anonymous
02:38

@குருஜி
நெஞ்சை உருகும் திடுக்கிடும் செய்தியை இணையத்தில் படித்தேன் குருஜி அந்த செய்தியை அப்படியே கண்ணீருடன் உங்களுக்கு தருகிறேன் குருஜி...

வேலூர் : டிராக்டர் மோதி நான்கு குரங்குகள் இறந்தன. பேண்ட், வாத்தியம் முழங்க, வாண வேடிக்கையுடன், உடல் அடக்கம் செய்ய வேண்டும், என, விபத்து ஏற்படுத்தியவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த நெடும்புலியில் உள்ள வாரச்சந்தை நடக்கும் மைதானத்தில், நேற்று முன் தினம் (டிச.,1) மதியம், 3 மணிக்கு ஒரு ஆண் குரங்கு, ஒரு பெண் குரங்கு, இரு குட்டி குரங்குகள் விளையாடி கொண்டிருந்தன. தாய் குரங்கு ஒன்று, அந்த பகுதியில் இருந்த சாலையை கடக்க முயன்ற போது எதிரே சண்முக சுந்தரம் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் குரங்கு மீது மோதியது. இதில், குரங்கு சம்பவ இடத்தில் இறந்தது.மோதிய வேகத்தில் டிராக்டர் வேகமாக சென்று விட்டது. இதை பார்த்த மற்ற குரங்குகள் அழுது தீர்த்தன. பின், ஒரு பெரிய குரங்கு, இரு குட்டி குரங்குகள் அதே போல வாகனம் வரும் நேரம் பார்த்து சாலையை கடந்து, தற்கொலை செய்து கொண்டன.
நேற்று இரவு ஊர் பஞ்சாயத்து கூடியது. குரங்கை டிராக்டரில் ஏற்றி கொன்றதை, சண்முக சுந்தரம் என்பவர் ஒப்புக் கொண்டதால், சண்முக சுந்தரத்தை கண்டித்தும், இறந்த நான்கு குரங்குகளை பேண்ட் வாத்தியம், வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று புதைக்க வேண்டும் என்றும், இதற்காகும் செலவை சண்முகசுந்தரமே ஏற்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.
இதை சண்முகசுந்தரம் ஏற்றுக் கொண்டார். நேற்று காலை, 11 மணிக்கு இறந்த நான்கு குரங்குகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. பொது மக்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து அழுது புலம்பினர். பின்னர் நான்கு குரங்குகளையும் ஒரே பாடையில் வைத்து பேண்ட், வாத்தியம் முழங்க வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக கொண்டு சென்று சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்தனர். இதற்கு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவானது.

படிப்பதற்கே மிகவும் கஷ்டமாக உள்ளது. அந்த தாயின் மனம் தங்கள் பதிலை படித்த பிறகு என்ன பாடு படும் என்பதனை நினைத்து பார்க்க முடியவில்லை.எல்லாம் வல்ல இறைவன் அந்த பெற்றோருக்கு ஒரு நல்ல வழி காட்டுவான் என்று நம்புகின்றேன்.

15:13

குருஜி அவர்களுக்கு வணக்கம்,
பாசமுள்ள ஒரு தாயின் கடிதம் படித்தேன் என்பதை விட உருகினேன். குருஜி எப்போதும் சரியாகத்தான் பதில் சொல்வார் என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை. இருந்தாலும் ஒரு தாழ்மையான கேள்வி எத்தனை விஞ்ஞானம் வந்தாலும் இறைவன் என்று ஒருவன் இருக்கிறன் அல்லவா? எதாவது மந்திரங்கள் அல்லது தெய்வ வேண்டுதல்களால் மாற்ற முடியுமா? என்று கேட்க வேண்டும் என்று ஒரு சின்ன ஆதங்கம். நானும் ஒரு அம்மா குழந்தையின் பேச்சுக்காக இறைவனை வேண்டுகிறேன்.எல்லாம் நன்றாகவே நடக்கும்.

My heart aches reading the plea of the grieving mother. Let us all pray that there should be some solution for the mental agony of the parents. Prayers of all well-meaning people who read this blog would not go waste.

I understand that babies born deaf cannot even speak. For this, there is now a remedy called cochlear implant. Dr Mohan Kameeswaran in Chennai may be contacted. I have read that he was successful in some children getting their voices. For info, this is from wikipedia:

"A cochlear implant (CI) is a surgically implanted electronic device that provides a sense of sound to a person who is profoundly deaf or severely hard of hearing. The cochlear implant is often referred to as a bionic ear. As of December 2010, approximately 219,000 people worldwide have received cochlear implants...."

Anonymous
20:55

By follow through Agathiyar jeeva nadi, there will be a solution for this problems by Siddhars.By doing charity continuoulsy will help change any difficultites by the god and siddhars.


Next Post Next Post Home
 
Back to Top