Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆவிகளோடு என் முதல் சந்திப்பு !


   விகளை பார்ப்பதற்கு கருவிகள் எதாவது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா அல்லது அதற்கான முயற்சிகளை இதுவரை யாரவது செய்திருக்கிறார்களா?
நீலகண்ட குருக்கள், பத்மநாபபுரம்

                  விகளை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் பலரிடம் இருக்கிறது ஆவி பூதம் பிசாசு இவைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அவைகளை பார்க்க வேண்டுமென்று ஆவல் படுவது இயற்கையானது ஏனென்றால் ஆவி என்பது கண்ணுக்கு தெரியாதது மறைபொருளாக இருப்பது புரிந்துகொள்ள முடியாத ரகசியங்கள் நிரம்பியது என்பதனால் அனைவருக்கும் இந்த ஆர்வம் இருக்கிறது 


நான் மிகவும் சிறியவனாக இருந்த போது பேய் பிசாசுகளில் மீது அதிகப்படியான பயம் எனக்கு உண்டு இருட்டான அறையிலோ தனிமையான பகுதியிலோ இருப்பதற்கு மிகவும் அச்சப்படுவேன் சுவாமி பெயரை சொன்னால் பேய்கள் அண்டாது என்று எனக்கு போதிக்கப்பட்டு இருந்தாலும் கூட பேயை பார்த்த அதிர்ச்சியில் கடவுள் பெயரை சொல்ல மறந்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணியும் நடுக்கம் வரும் இத்தகைய மனோபாவம் எனக்கு மட்டும் அல்ல என் வயதை ஒத்த சிறியவர்கள் அனைவருக்குமே வரும் என்ற உண்மை இப்போது தெரிகிறது

இந்த நிலையில் என் பிள்ளைபிராய காதனாயகனாக இருந்த அந்தோணி ராஜ் அண்ணன் ஒரு முறை நான் ஆவியோடு பேசப்போகிறேன் நீயும் வருகிறாயா என்று என்னை கேட்டார் பயமும் அச்சமும் உள்ளுக்குள் இருந்தாலும் ஆர்வம் என்பது அதிகமாக இருந்ததினால் அவரோடு போக சம்மதித்தேன்

அந்தோணி ராஜ் அண்ணன் என்னை தங்கமணி என்பவருடைய வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனார் எங்கள் ஊரில் தங்கமணி என்பவர் மிகவும் புகழ்பெற்றவர் என்னை போன்ற சிறுவர்களுக்கு அவர் ஒரு அதிசய பேழை விபூதி குங்குமம் பன்னீர் சந்தனம் போன்றவைகளை தயாரித்து விற்பனை செய்வது அவர் தொழில் என்றாலும் கெளதாரி பிடித்தல் முயல் வளர்த்தல் நாய்குட்டிக்கு பந்து விளையாட கற்று கொடுத்தல் என்பவைகள் தான் அவரது நித்திய பொழுது இதனால் தான் சிறுவர்கள் மத்தியில் அவருக்கு பேரும் புகழும்


அவர் வீட்டின் நடுக்கூடத்தில் பெரிய ஜமுக்காளம் விரிக்கப்பட்டு இருந்தது அதில் விபூதி குங்குமம் வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களும் சதுரமான பெரிய அட்டையும் வைக்கபட்டிருந்தது அந்த அட்டையில் ஏபிசிடி யும் ஜீரோ முதல் ஒன்பது வரையிலான எண்களும் எழுதப்பட்டிருந்தன

அந்த இடத்தில் நான் அந்தோணி ராஜ் அண்ணன் தங்கமணி உட்பட வேறு இரண்டு பெரியவர்களும் இருந்தார்கள் அந்த கூட்டத்தில் மிகவும் சின்னபையன் நான் தான் பையன் பயந்துவிட போகிறான் அவனை ஏன் கூட்டி வந்தாய் வீட்டில் கொண்டு விட்டுவிடு என்று தங்கமணி சொன்னார் இவனுக்கு தைரியம் எப்போது வருவது இப்போதிருந்தே பழக்கப்படட்டும் என்று அந்தோணி ராஜ் அண்ணன் சொன்னதை அவர் அரைமனதோடு ஏற்று கொண்டார்

அட்டையின் மீது சில்வர் டம்ளரை கவிழ்த்து வைத்து எதிரும் புதிருமாக இருவர் அமர்ந்து ஆள்காட்டி விரல்களால் டம்ளரை தொட்டு ஆவியோடு பேசும் வேலை ஆரம்பமானது டம்ளர் குறுக்கும் நெடுக்குமாக அசுர கதியில் நகர்ந்தது ஓடியது ஆவிகள் அதை நகர்த்துவதாக அவர்கள் பேசி கொண்டு இருந்தாலும் எனக்கு என்னவோ அவர்கள் நகர்த்துவதாகத்தான் தோன்றியதே தவிர வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை இதனாலேயே ஆரம்பத்தில் இருந்த பயம் விலகி அந்த வயதுக்கே உரிய ஜாலியோடு பார்த்துகொண்டு இருந்தேன் 


அன்று அவர்கள் பேசிய முறை ஒய்ஜா போர்டு மூலம் ஆவிகளோடு பேசுமுறையாகும் இது தவிர ஆட்டோ ரயிட்டிங் மயக்க நிலை பேச்சு என்று வேறு முறைகளும் ஆவிகளோடு பேச இருக்கிறது இவைகளை பின்னாட்களில் தெரிந்து கொண்டேன் அவைகளில் போதிய பயிற்சியும் தெளிவும் பிறகு எனக்கு கிடைத்தது அதன் மூலம் பல ஆவிகளோடு பேசுகின்ற வாய்ப்பு எனக்கு அமைந்தது

இதை பலர் நம்ப மாட்டார்கள் ஆவிகளோடு பேசுவதெல்லாம் சுத்த ஹம்பக் மீடியத்தின் மனோபாவப்படிதான் ஆவிகளின் பேச்சுக்கள் அமையும் என்று அவர்கள் சொல்கிறார்கள் ஆரம்ப காலகட்டங்களில் நானும் அப்படிதான் சொல்லிவந்தேன் நம்பியும் வந்தேன் ஆனால் காலம் செல்ல செல்ல அதிலுள்ள உண்மையும் நுட்பமும் தெரிய ஆரம்பித்தது

ஆவிகளோடு பேச ஆரம்பிக்கும் ஆரம்ப கட்டத்திலேயே அவைகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை அடுத்த கட்டமாக பிறக்க ஆரம்பித்து விடுகிறது அந்த நிலையில் சில ஆவிகளை பார்க்கவும் முடியும் அப்படி பார்க்கும் போது இதுவரை ஆவிகளை பார்த்ததாக பலர் சொல்வதில் உள்ள குறைப்பாடுகள் தெரிய ஆரம்பிக்கிறது அதாவது ஆவிகளை கண்டதாக கூறுபவர்கள் அவைகள் மிக பயங்கரமான தோற்றமுடையது என்று சொல்லி வருகிறார்கள் ஆனால் பல ஆவிகள் அப்படி இல்லை


என்னை பொறுத்தவரை ஆவிகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒரே வேற்றுமை அவைகளுக்கு உடம்பு இல்லை நமக்கு இருக்கிறது அவ்வளவு தான் மற்றப்படி அவைகளும் நம்மை போல பல நேரங்களில் அப்பாவிகளாகவே இருக்கிறது மனிதனுக்கு உள்ள பயம் தான் ஆவிகளை கொடியவைகளாக காட்டுகிறதே தவிர பல ஆவிகள் நிஜமாகவே கொடியவைகள் அல்ல

ஆவிகளை பார்க்க வேண்டும் அவைகளோடு பேச வேண்டும் என்று ஆசைப்படுவது சாதாரண மக்கள் தான் விஞ்ஞானிகளுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கைகளே ஆசைகளே கிடையாது என்று பலர் கருதி வருகிறார்கள் ஆனால் உண்மை நிலை வேறுவிதமாக இருக்கிறது பல விஞ்ஞானிகளும் விஞ்ஞான ஆர்வலர்களும் கட்புலனாகாத சக்திகளின் மீது நம்பிக்கையும் ஆர்வமும் வைத்திருக்கிறார்கள் அந்த நம்பிக்கைகளை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று அன்று முதல் இன்று வரை உழைத்தும் வருகிறார்கள்

தனி ஒரு மனிதனாக நின்று மிக அதிகமான விஞ்ஞான கருவிகளை கண்டுபிடித்து உலகுக்கு தந்தவர் சர்.தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார் இவர் தமது வாழ்வின் கடேசி காலத்தில் ஆவிகளை சாதாரண மனித கண்களால் பார்க்க கூடிய கருவிகளை கண்டுபிடிக்க ஆர்வம் கொண்டவராக இருந்தார் 1920 ஆம் வருடம் தனது எழுபத்து மூன்றாவது வயதில் எடிசன் இறப்பிற்கு பிறகு ஆத்மா வாழ்கிறது என்பது உண்மையானால் அந்த ஆத்மாவிற்கு பிறவி கால நினைவுகளும் அறிவும் பிற உணர்வுகளும் நிச்சயம் இருக்கும் இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள நாம் ஆசைபடுவது போலவே அவர்களும் நம்மோடு தொடர்பு கொள்ள கண்டிப்பாக விரும்புவார்கள் ஆனால் ஆவிகளோடு தொடர்பு கொள்ளக்கூடிய கருவிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்க படவில்லை விஞ்ஞானம் வளர்ந்து கொண்டு வருவதனால் அத்தகைய கருவிகள் நிச்சயம் உருவாக்கப்படும் என்று ஒரு கட்டுரையில் எழுதினர்

எடிசன் அவர்களே அதே வருடத்தில் ஆவிகளோடு பேசுவதற்கான electronic voice phenomena என்ற கருவியை கண்டுபிடித்ததாகவும் எதோ ஒரு காரணத்திற்க்காக மறைத்து வைத்துவிட்டதாகவும் பலர் சொல்கிறார்கள் அது உண்மையோ பொய்யோ நமக்கு தெரியாது எடிசனின் எழுத்துக்களில் இருந்து அவருக்கு அப்படி ஒரு கருவி கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது தெரியவருகிறது எடிசன் போலவே இன்றும் பலர் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்கள் உழைப்பு நிச்சயம் ஒரு நாள் வென்றே தீரும் அன்று நாத்திகம் பேசுகின்ற நாக்குகள் யோசனை செய்தால் சரி.


Contact Form

Name

Email *

Message *