Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒரு ரகசியம் சொல்லட்டுமா...?


  • ரு முக்கிய விஷயத்தில் முடிவெடுப்பதற்கு அறிவை பயன்படுத்துவது அனுபவத்தை பயன்படுத்துவது இரண்டில் எது சரி?
அஸ்வின் குமார்.குடியாத்தம் 




   ஒரு மனிதனுடைய வெற்றி தோல்விகளில் அறிவு மற்றும் அனுபவத்தின் பங்களிப்பு இடத்துக்கு ஏற்றவாறு மாறுபாடுகள் கொண்டே இருக்கிறது அறிவு சொல்வது தான் சரி என்று செய்கின்ற காரியங்கள் பல தோல்வி அடைந்திருக்கின்றன அதே போலவே அனுபவத்தை அடிப்படையாக கொண்ட காரியங்களும் தோல்விகளை சந்தித்திருக்கின்றன இதை வைத்து பார்க்கும் போது எதை எந்த காரியத்திற்கு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வதே வெற்றியின் திறவுகோல் என்று தோன்றும் 

தக்க சமயத்தில் தக்கவைகளை பயன்படுத்துவதற்கு பலருக்கு தெரிவதில்லை அதற்கு காரணம் செய்யபோகும் செயல்களில் ஒரு மனிதன் எத்தகைய நாட்டம் கொண்டுள்ளான் என்பதை பொறுத்தே செயல்களின் முடிவு அமைகிறது உதாரணமாக தன்னை நேரடியாக பாதிக்கும் செயல்களை செய்யும் போது மனிதன் பரபரப்பும் பதட்டமும் அடைகிறான் இதனால் அவனது முடிவுகளில் தடுமாற்றம் வருகிறது 

ஆகவே வெற்றிகரமான செயல்களை செய்ய விரும்புவர்களால் முதலில் பதட்டங்களை கைவிட வேண்டும் நிதானமாக அவசரமே இல்லமல் சாதக பாதக அம்சங்களை சிந்தனை செய்து காரியத்தில் ஈடுபட வேண்டும் அப்படி ஈடுபட்ட பிறகு விளைவுகளை பற்றி கவலைப்பட கூடாது அதனால் தான் வள்ளுவர் எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கு என்று சொன்னார் 

நாம் புயன்படுத்துவது அறிவோ அனுபவமோ அதை பற்றி கவலை இல்லை ஆனால் பயன்படுத்துவதை நிதானமாக ஆராய்ந்து செய்தால் செய்வது அனைத்துமே வெற்றியாக முடியும் இது தான் பலர் வாழ்வில் வெற்றி பெற்றதன் உண்மை ரகசியம்




Contact Form

Name

Email *

Message *