Store
  Store
  Store
  Store
  Store
  Store

போனவர் போனால் கோடி புண்ணியம்


    லைஞர் கருணாநிதியின் ஆட்சிகாலத்தில் அவரது குடும்பத்தினர் தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் தங்களது ஆதிக்க பலத்தால் பல முறைகேடுகளை நடத்திய போது சிலர் சொன்னார்கள் கலைஞர் வந்தால் அவரது குடும்பம் அராஜகத்தில் ஈடுபடும் ஜெயலலிதா அம்மையார் வந்தால் அவரது தோழி சசிகலாவின் குடும்பத்தினர் அராஜகத்தில் ஈடுபடுவார்கள் எனவே இருவருக்கும் அதாவது கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் புடவை வேஷ்டி மட்டுமே வித்தியாசம் மற்றப்படி எந்த வித்தியாசமும் கிடையாது என்றார்கள் 

அப்படி சொல்லியதை தவறு என்று எந்த நடுநிலையாளனும் சொல்லமாட்டான் காரணம் அம்மையார் அவர்கள் ஆட்சிக்கு வரும் காலகட்டங்களில் மன்னார்குடி காரர்களின் கைகள் மேலோங்குவதும் அவர்களால் பலவித முறைகேடுகள் மாநில முழுவதும் நடைபெறுவதும் புனுகு பூசி மறைக்க முடியாத காயங்களாகும் சசிகலாவின் குடும்பத்தாரின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள் மட்டும் அல்ல அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் தான் 

எம்ஜியார் காலத்தில் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களும் அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா தலைமை பொறுப்பிற்கு வரவேண்டுமென்று உண்மையாக உழைத்தவர்களும் மற்றும் உள்ள சில கட்சி விசுவாசிகளும் சசிகலாவின் செயல்பாடுகளால் மனமுடைந்து மூலையில் போய் ஒதுங்கி விட்டார்கள் மற்றும் பலர் இவர்களின் ஆதிக்க போக்கால் கட்சியை விட்டே வெளியேறி விட்டார்கள் 

ஜெயலலிதாவிடம் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி எங்கோ ஒரு மூலையில் முகவரி இல்லாமல் கிடந்த தனது குடும்பத்தை தமிழக அரசாங்கத்தையே ஆட்டி படைக்கும் அளவிற்கு வளர்த்து விட்டார் சசிகலா அதுமட்டும் அல்ல அனைத்து ஜாதியினரும் சமமாக உள்ள அதிமுக்காவில் தன் சொந்த ஜாதிக்காரர்களின் செல்வாக்கு ஓங்கி இருக்கும் படி அவர் பார்த்தும் கொண்டார் கட்சியை பொறுத்தமட்டிலும் சரி ஆட்சியை பொறுத்தமட்டிலும் சரி ஜெயலலிதா என்பவர் அலங்கார பொம்மையாக இருந்தாரே ஒழிய தன்னை சுற்றி இருக்கும் துதிபாடிகளின் கூட்டத்தால் செயல்பட முடியாத தலைவராகத்தான் இருந்தார் 

இந்த நிலைமை அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் தெரியும் தமிழக முழுவதும் உள்ள அவர்கள் மனம் கொதித்து தங்களுக்குள் புழுங்கி கொண்டிருந்தார்களே தவிர தங்களது அதிர்ப்தியை வெளியிட முடியாத அளவிற்கு ஊமைகளாக ஆக்கப்பட்டு கிடந்தார்கள் யாரவது ஒருவர் தப்பித்தவறி அம்மையாரின் கவனத்திற்கு சசிகலாவின் முறைகேடான போக்கை கொண்டு சென்றால் அவர்கள் செயல்படுவதற்கு முன்பே தடுக்கபட்டார்கள் அல்லது கட்டம் கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்றாவது ஒருநாள் தங்களது பெருமூச்சிக்கு ஆறுதல் கிடைக்காதா என்று ஏங்கி தவமிருந்தார்கள் 

அவர்களின் தவம் இப்போது நிறைவேறி இருக்கிறது என்று சொல்லலாம் ஆனாலும் சசிகலாவின் வெளியேற்றம் நிரந்தரமானதா அல்லது திட்டமிடப்பட்ட ஒரு சதி நாடகமா என்று இன்னும் பல அதிமுக தொண்டார்களுக்கு சந்தேகமும் பயமும் இருந்து வருகிறது மாநிலமுழுவதும் உள்ள எம்ஜியார் விசுவாசிகளும் ஜெயலலிதா விசுவாசிகளும் இது நாடகமாக இருக்க கூடாது நிஜமாக தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள் 

அவர்களின் பயத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை கடந்த காலங்களில் சசிகலா வெளியேற்றப்பட்டும் பின்பு சத்தடி இல்லாமல் உள்ளுக்குள் நுழைக்கப்பட்டதும் நடந்திருக்கிறது அதே போலவே மீண்டும் தொடர்ந்தால் தங்களது கட்சி கரையான் அரித்த மரக்கொம்பாக ஒடிந்து விடும் என்று அவர்கள் கருதுகிறார்கள் 

செல்வி ஜெயலலிதாவிற்கு மக்கள் இப்போது கொடுத்திருக்கும் வாய்ப்பு மகத்தானது ஊழல் நிறைந்த முறைகேடுகள் மலிந்த சுயநலம் மட்டுமே செயல்பட்ட ஒரு அரசாங்கத்தை தூக்கி எரிந்து நல்லாட்சி நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில் மக்களால் கொடுக்கப்பட்ட இந்த வாய்ப்பை ஜெயலலிதா நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டால் நாளைய தலைமுறை அவரை மிக சிறந்த தலைவர் என்று போற்றி பாராட்டும் 

ஜெயலலிதாவும் கலைஞரை போல் தன்னை பற்றி மட்டுமே கவலைப்பட்டு தன்னை சூழ்ந்திருக்கும் சுயநல கூட்டத்திற்கு தலை வணங்கி செயல்பட்டால் ஒரு சராசரி அரசியல் வாதியாக மட்டுமல்ல அவமான சின்னமாகவும் கருதபடுவார் எம்ஜியார் அமைச்சரவையில் மந்திரியாக இருந்த திரு.கே.காளிமுத்து என்பவர் கறந்த பால் மடிசேராது கருவாடு மீனாகாது கருணாநிதி திருந்த மாட்டார் என்று சொல்வார் அதே போல தூக்கி எறியப்பட்ட சசிகலா மீண்டும் கட்சிக்குள் வராமல் இருந்தால் ஜெயலலிதாவின் செல்வாக்கு களங்கம் இல்லாமல் இருக்கும் மாறாக மீண்டும் அவர் வரவேற்க பட்டால் சர்வ நிச்சயமாக தமிழகத்தில் மீண்டும் ஒரு அலங்கோல ஆட்சியே தொடரும்

ஜெயலலிதா அம்மையாருக்கு தனிப்பட்ட குடும்பம் இல்லை பற்று பாச தளைகள் இல்லை தமிழக மக்களையே தனது சொந்தங்களாக குடும்பமாக கருதி நாட்டு முன்னேற்றத்திற்கு எவ்வளவோ செய்ய வாய்ப்பும் வசதியும் அவருக்கு இருக்கிறது இறைவன் கொடுத்திருக்கும் இந்த நல்ல சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்தி கொண்டால் ஒரு பெண் காமராஜரை போல் அவர் மக்களால் பார்க்க படுவார் இல்லை என்றால் இவரும் சம்பல் பள்ளத்தாக்கின் பிரதிநிதியாகவே கருதபடுவார்.

Contact Form

Name

Email *

Message *