Store
  Store
  Store
  Store
  Store
  Store

மந்திர வழியில் மன நிம்மதி


பொதுவாக நாம் மந்திரங்களை உச்சரிக்கும் போது ஓம் என்று தொடங்கி நமோ என்றோ நம என்றோ முடிப்போம்

  அது ஏன் அப்படி துவங்கி முடிக்க வேண்டும் என பலமுறை யோசித்திருப்போம்

 அதற்கான விளக்கங்களை நம் சாஸ்திரங்கள் என்னவென்று சொல்கின்றன என்று பார்போம்
  
        நமோ என்ற வார்த்தைக்கு காலில் விழுந்து வணங்குகிறேன் என்பது பொருளாகும். 

   நம்மை விட பெரியவர்கள் கால்களிலும் மகான்கள் கால்களின் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது விஷேசமானது. 

   இவையெல்லாவற்றையும் விட பகவானின் பாதத்தில் விழுவது மகா விஷேசமாகும். 

  பகவானை விட அவனின் நாமத்திற்கு அதிக சக்தி உள்ளது என்பது நமது நம்பிக்கை மட்டுமல்ல அனுபவ உண்மையாகும். 

  கடவுளின் திருப்பெயரை மானசீகமாக விழுந்து வணங்குவதே நமோ என்ற வார்த்தையின் பக்திபூர்வ உண்மையாகும்.

   தன்னை விட உயர்ந்த ஒன்றின் முன்னால் சரணடையும் போது தன்னுடைய திறமை, சக்தி, புத்தி எல்லாவற்றையுமே அந்த உயர்ந்த ஒன்றின் முன்னால் சமர்பித்து நான், எனது என்ற அகங்காரத்தை பஸ்பமாக்க முடிகிறது.

  பகவானை கண்ணெதிரே கண்டு சரணடைவதற்கு சமமானது இதுவாகும். 

   ஓம் என்ற வார்த்தை பிரணவ மந்திரம் என்று எல்லோருக்கும் தெரியும்.

   இந்த மந்திர ஒலி அதிர்வு பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள இறை சக்தியை உச்சரிக்கும் இடத்திற்கு ஆதர்ஷணம் செய்கிறது.

  நாம் எந்த தேவதையை விரும்பி உபாசனை செய்கிறோமோ அந்த தேவதையின் சக்தி ஓம் என்ற மந்திரத்தின் வழியாக நமக்குள் பாய்கிறது.

  உதாரணமாக ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது நாராயணா என்ற சத்தத்திற்கான இறை சக்தி நமக்கு அருகில் வருகிறது. 

  அதை நாம் சரணடையும் போது நமது விருப்பங்கள் நிறைவேறுகின்றன.  அல்லது கிடைப்பதற்கரிய மன நிம்மதி கிடைக்கிறது.



Contact Form

Name

Email *

Message *