Store
  Store
  Store
  Store
  Store
  Store

அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா?



  ன்று எங்குப்பார்த்தாலும் ராசிக்கல் மோகம் தலைவிரித்தாடுகிறது இந்த மோகத்தைப் பயன் படுத்தி பல போலி நிறுவனங்களும் நபர்களும் பல லட்சம் ரூபாய்க்களை அருவடை செய்கிறார்கள் மக்களுக்கு ராசிக்கல்லைப் பற்றி அதிகம் தெரியாததனால் தாங்கள் ஏமாற்றப்படுவது தெரியாமலே ஏமாந்துப் போகிறார்கள்

  அந்த நிலை மாற வேண்டும் ஓரளவாவது விழிப்புணர்வு ஏற்பட்டு சாஸ்திரத்தின் உண்மைதன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக என் அனுபவத்தில் நான்கண்ட உண்மைகளை ஒளிவு மறைவு இல்லாமல் வாசகர்களிடம் பகிற்து கொள்கிறேன்


  அதிர்ஷ்ட கற்கள் என்று சொல்லப்படுபவைகள் நவரத்தினக் கற்களே ஆகும்.  மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம்,  வைரம் நீலம், கோமேதகம், வைடூயம் ஆகிய கற்களை நவக்கிரகங்களின் அம்சமாக வேதங்கள் சொல்லுகின்றன.   எனவே வேதகாலத்தில் இருந்தே கிரகங்களின் பரிகாரத்திற்காக நவரத்தினங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த இருப்பதை அறிய முடிகிறது.

  ரத்தினங்களைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன.  அவைகளில் மிக முக்கிய சிக்கல் ரத்தினங்கள் நல்லதா, போலியானதா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலரிடம் இல்லாததே ஆகும்.  இதைப் பயன்படுததி போலி ரத்தினங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.  எனவே ரத்தினங்ளைப் பரிசோதனை செய்யும் எளிய முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


  மாணிக்கம் கல்லை பாலில் போட்டால் பாலில் சிவப்பு நிறம் படரவேண்டும்.  நுரையுள்ள பாலில் முத்தைப் போட்டால் அது மிதக்க வேண்டும்.  பவளம் பாலில் விழுந்தவுடன் பால் சிவப்பாக மாறவேண்டும்.  நல்ல மரகதத்தை குதிரையின் மூக்கின் அருகே கொண்டு சென்றால் அது தும்ம வேண்டும். 

  சந்தனம் அரைக்கும் கல்லின் மீது புஷ்ப ராகத்தை வைத்தால் தாமரைப் பூவின் வாசம் வரவேண்டும்.  வைரத்தின் கீழ் பகுதியின் விரல் வைத்தால் விரலில் பிம்பம் மேல்புறத்தில் தெரியக்கூடாது.  பசும்பாலில் நீலக்கல்லைப் போட்டால் பால் நீல நிறமாக மாறவேண்டும்.    

  பசும் பாலில் கோமேகத்தைப் போட்டால் பால் கோமியத்தின் வண்ணத்தைப் பெறவேண்டும்.  இருட்டில் வைடூயத்தை வைத்தால் அது பூனைக்கண் போல் ஜொலிக்க வேண்டும்.  


  அடுத்த சிக்கல் இயற்கை ரத்தினங்களை வாங்குவதா, செயற்கை ரத்தினங்கள் வாங்குவதா என்பது தான் அது.  இயற்கை ரத்தினங்கள் அணிவது தான் நியாயப்படி சரியான பரிகாரம் ஆகும். 

  ஆனால் அதன் விலை அதிகம் என்பதால் சாதாரண மனிதர்கள் வாங்க இயலாது.  அதனால் செயற்கை ரத்தினங்களை அணிந்து கொள்ளலாம். என சிலர் சொல்கிறார்கள் ஆனால் அது முழுமையான பலனை தராது  ஓரளவு பலன் தரும்.  ரத்தினக் கல் பரிகாரம் என்பது ஜாதகப்படி கிரக நிலைகள் நல்லவிதமாக அமைந்திருக்கும் நாளில் செய்வதால் தான் நல்ல பலனைத் தரும் அல்லது பலன் தராது.  தீய விளைவுகளைக் கூட ஏற்படுத்தி விடலாம்



Contact Form

Name

Email *

Message *