Store
  Store
  Store
  Store
  Store
  Store

காதலிக்காதவள் கஷ்டப்படுவாள் !


   ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் உங்கள் பதிவுகளை சில மாதங்களாக வாசித்து வருகிறேன் நீங்கள் எழுதுவதில் சில விஷயங்கள் எனக்கு புரியும் பல புரியாது நிச்சயம் அதற்கு நீங்கள் காரணம் அல்ல என் அறிவு குறைபாடுதான் காரணம் ஜோதிடம் மதம் அரசியல் என்று எவ்வளவோ எழுதுகிறீர்கள் சில நேரம் எனக்கு பிரமிப்பாகவும் இருக்கும் இப்படியெல்லாம் கூட கருத்துக்கள் இருக்கிறதா என்று தோன்றும் அப்படி தோன்றும் போதே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்ற ஆசை வரும்

நீங்கள் பெரியவர் பயனுள்ள அனுபவங்கள் பலவற்றை பெற்றவர் உங்களிடத்தில் சிறுபிள்ளை தனமாக கேள்வி கேட்க கூடாது அது தவறு என்று மனதில் ஒரு பகுதியில் எச்சரிக்கை மணி அடிக்கும் இருந்தாலும் ஆசையை அடக்க முடியவில்லை என்பதனால் கடேசியில் உங்களிடம் கேட்டே விடுவது என்று முடிவு செய்து இந்த மடலை எழுதுகிறேன்

எனது பிறந்த தேதி போன்ற விபரங்கள் எதுவும் தெளிவாக தெரியாது சான்றிதழ்களில் உள்ள தேதிகள் எதுவும் சரியில்லை என்று எனது தாயார் சொல்லிவிட்டார் அவருக்கும் நான் பிறந்த தேதி மறந்துவிட்டது அதனால் நான் கேட்க போகும் இந்த கேள்விக்கு ஜோதிட ரீதியான பதிலை சொல்லாமல் உங்கள் மனதில் பட்ட பதிலை தெளிவாக சொல்லிவிடுங்கள் அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை தெய்வ வாக்காகவே எடுத்துக்கொள்கிறேன்

ஐயா நான் மூன்று வருடமாக ஒரு பெண்ணை காதலித்தேன் காதலித்தேன் என்று சொல்வதை விட மானசீகமாக அவளுடன் வாழ்க்கை நடத்தினேன் என்று சொல்லலாம் அவளும் என்னை காதலித்தாள் கடேசியில் சரியான காரணங்கள் எதுவும் சொல்லாமல் பெற்றோர்கள் பார்த்த மணமகனை திருமணம் செய்து கொண்டாள் அதற்கு அவள் சொல்லுகின்ற எல்லா காரணங்களும் கற்பனையாக தெரிகிறதே தவிர உண்மையானதாக தெரியவில்லை

என்னை அவள் திருமணம் செய்யாமல் போனதற்கு அவள் வீட்டாரின் எதிர்ப்பு ஒரு காரணம் என்றாலும் எனக்கு சரியான வேலை இல்லை குடும்ப பின்னணி இல்லை எல்லாவற்றுக்கும் மேலாக சொந்த வீடு சொத்து சுகம் ஒன்றும் இல்லை என்பதாகத்தான் இருக்கும் என்று என் மனதில் படுகிறது

அவள் இல்லை என்றாலும் அவளது நினைப்பு என்னை விட்டு அகலவே இல்லை பல நேரங்களில் தற்கொலை செய்து கொள்ள எண்ணம் வருகிறது என்னையே நம்பி உள்ள தாயாரையும் தம்பியையும் நினைத்து அந்த எண்ணத்தை அப்புறத்தள்ளுகிறேன் இருந்தாலும் நான் சாதரண மனிதன் தானே இயலாமையும் இழப்பும் என்னை பாடாய் படுத்துகிறது இரவில் உறக்கம் இல்லாமல் சரிவர உண்ண முடியாமல் தவிக்கிறேன் யாரோடும் சிரித்து பேச முடியவில்லை எப்போதும் அவள் நினைவு என்னை வாட்டி வதைக்கிறது

ஆனாலும் நிஜம் எனது கண்ணெதிரே தெளிவாகத்தெரிகிறது அவள் இல்லை இனி அவள் கிடைக்க மாட்டாள் அவள் இல்லாமல் தான் நான் வாழ்ந்தாக வேண்டும் அதற்கு அவளை மறக்க வேண்டும் என்பது நன்றாக புரிகிறது ஆனாலும் என்னால் நிஜத்தை ஜீரணிக்க முடியவில்லை அவள் என்னை ஏமாற்றி போய் வருடம் ஒன்றாகி விட்டாலும் நேற்றுதான் நடந்தது போல் மனது ரத்தகண்ணீர் வடிக்கிறது

ஐயா இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன் ஆனால் அவைகளெல்லாம் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கும் என்பதனால் எழுதவில்லை அவளை நான் மறக்க வேண்டும் அவள் என்னை பிரிந்ததற்கு பணம் தான் காரணம் என்றால் அந்த பணத்தை நான் எப்படியும் பெற வேண்டும் அதற்கு என்ன வழி கண்கள் இருந்தும் குருடனை போல் வழி தெரியாமல் தவிர்க்கும் இந்த ஏழைக்கு வழிகாட்டுங்கள் காலமெல்லாம் உங்களுக்கு நன்றிகடன் பட்டவனாக இருப்பேன்

சங்கரலிங்கம் திருநெல்வேலி


    ரு மனிதனுக்கு முப்பது வயதுக்குள் கம்யூனிச சிந்தனை வரவில்லை என்றால் அவன் சோம்பேறி முப்பது வயதுக்கு மேலும் அவன் கம்யூனிஸ்ட்டாக இருந்தால் அவன் முட்டாள் என்று சொல்வார்கள் இதை நான் இங்கு அரசியல் அர்த்தங்களுக்காக சொல்லவில்லை வயதுக்கு ஏற்ற குணமும் செயலும் மனிதனுக்கு இருக்க வேண்டும் என்பதக்காகவே சொல்கிறேன் குழந்தை வயதில் விளையாட வேண்டும் வாலிப வயதில் காதல் போன்ற உணர்வுகளுக்கு ஆட்பட வேண்டும் வயோதிக வயதில் இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி கொள்ள வேண்டும் இது தான் சராசரி வாழ்க்கை முறை

குழந்தை பிராயத்தில் விளையாட முடியவில்லை என்று வாலிப வயதில் விளையாடக் கூடாது வாலிபத்தில் காதலிக்க முடியாத போது வயோதிகத்தில் காதலிக்க போனால் அது அறிவீனம் இதை போன்று தான் நமது வாழ்வில் வரும் எல்லா சம்பவங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்

நீங்கள் காதல் வசப்பட்டதை குற்றம் என்று நான் சொல்ல வில்லை நீங்கள் விரும்பியவள் உங்களை விட்டு விட்டு போன பிறகும் அதுவும் எந்த வித நியாயமும் இல்லாத காரணங்களுக்காக கைவிட்ட பிறகு அவளையே நினைத்து கொண்டு வாழ்க்கையை வீணடிப்பது முட்டாள் தனம் இந்த முட்டாள் தனத்தையே தொடர்ந்து நான் செய்கிறேன் என்று பெருமையாக சொல்லிக்கொண்டு திரிவது வடிகட்டிய பைத்திய காரத்தனம்

உங்கள் காதலி நியமான காரணதிற்காகவே உங்களை கைவிட்டு விட்டாள் என்றே வைத்து கொள்வோம் ஆனாலும் இன்று அவள் வேறொருவனின் மனைவி அடுத்தவன் மனைவியை நினைத்து கொண்டிருப்பது பெரிய பாவம் முதலில் அவளை உங்கள் காதலி என்று நினைப்பதை கைவிடுங்கள் தானாக உங்களது சோகம் குறைய துவங்கி விடும்

நாம் நினைத்து கொண்டிருக்கிறேம் கடவுள் அர்த்தமே இல்லாமல் நமது வாழ்வில் பல சோதனைகளை தருகிறான் என்று இந்த எண்ணம் தவருதலானது அவன் தருகின்ற இன்பமாக இருக்கட்டும் துன்பமாக இருக்கட்டும் அனைத்துக்கு பின்னாலும் ஆழமான அர்த்த புஷ்டியான காரணம் இருக்கும் அது இப்போது நமக்கு தெரியாது காலம் செல்ல செல்ல தானாக புரியும்

உங்களது சோகத்தை நினைத்து எனக்கு கோபம் வந்தாலும் நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு வார்த்தை என் மனதை ஆறுதலடைய செய்கிறது என்னையே நம்பி இருக்கும் தாயாரை தம்பியை நினைக்கிறேன் என்று சொல்லி உள்ளீர்கள் அந்த ஒரு வார்த்தையிலேயே உங்களுக்குள் மறைந்து கிடைக்கும் வேகத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது

ஒரு பிரச்சனையை முடிக்க வேண்டுமென்றால் வேறொரு பெரிய பிரச்சனையை உருவாக்க வேண்டுமென்று எனது சிஷ்யர் திரு வி.வி.சந்தானம் சொல்வார் அது விளயாட்டு அல்ல வாழ்க்கை சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ள நினைக்கும் ஒவ்வொருவனும் கைகொள்ள வேண்டிய ஆயுதமாகும்

உங்களது துயரத்தை மறக்க தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை வெளியூருக்கு மாற்றுங்கள் அல்லது வெளியூரில் வேறு வேலையை ஏற்படுத்தி கொள்ளுங்கள் முழு கவனத்தையும் ஆர்வத்தையும் வேலையில் வையுங்கள் கால நேரம் பாராமல் கடினமாக பாடுபடுங்கள் கிடைக்கும் பணத்தை குறைவாக செலவழித்து சேமிப்பில் கவனம் செலுத்துங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தவுடன் அதை இரட்டிப்பாக்க சொந்தமாக எதாவது தொழில் செய்யுங்கள் தானாக உங்களது செல்வமும் செல்வாக்கும் வளரும் உங்களை இழந்ததற்காக அந்த பெண் கூட நாளை வருத்தப்படலாம்.


Contact Form

Name

Email *

Message *