Store
  Store
  Store
  Store
  Store
  Store

தலைவர்கள் திருந்த வரம் தா...!
ருடம் தோறும் வாசல் திறந்து 
வரவேற்கும் மாலே மணிவண்ணா உந்தன் 
பாதம் பணிந்து பாமாலை தொடுத்து 
சாதம் கேட்கும் சவலை குழந்தையாக 
வரம்சில கேட்கிறேன் வழங்கி அருள்செய் 
கரங்கள் கறைபட்ட கண்ணில்லா தலைவர்கள் 
மனங்கள் திருந்தி வாழ வேண்டும் 
இனங்கள் மொழிகள் இன்னும்பல சண்டைகள் 
இப்போதே ஒயவேண்டும் இந்நாடு உயரவேண்டும் 
அப்பாவை அம்மாவை அநாதை ஆக்கும் 
பிள்ளைகள் வேண்டாம் பிறக்கும் எல்லோரும் 
உன்னை நினைக்கும் உத்தம மணியாக 
என்னாளும் வாழ இனிய வரம் தா...! 

Contact Form

Name

Email *

Message *