Store
  Store
  Store
  Store
  Store
  Store

குருஜியின் பதிலால் கூடிய திருமணம் !


      ஜிலாதேவி இணையதள வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம் நமது குருஜி அவர்கள் ஜோதிட ரீதியாக வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருவதை நன்கு அறிவீர்கள் நானும் அவரிடம் 28.11.2011 அன்று பிராமண சமூதாயத்தை சேர்ந்த நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பெண்ணை காதலிப்பதாகவும் அவளை திருமணம் செய்து கொள்வதா? வேண்டாமா என்று? கேள்வி ஒன்று கேட்டிருந்தேன் (அந்த கேள்வியையும் அதற்கான குருஜியின் பதிலையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்) அதற்கு வணக்கத்திற்குரிய குருஜி அவர்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் நல்ல பதிலை சொல்லியிருந்தார்கள்

அவரது பதில் கலங்கி கிடந்த எனது மன குட்டையை தெளிவடைய செய்தது காதலிப்பது பாவம் அதிலும் வேற்று ஜாதி பெண்ணை காதலிப்பது மாக பாவாம் என்ற நம்பிக்கையை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் நான் விதியா இறைவனின் திருவிளையாடலா என்று என்னால் அறுதியிட்டு சொல்லமுடியவில்லை ஆனாலும் காதலை பாவம் என்று நம்பிய நானே காதலில் வீழ்ந்தேன்

நான் காதலித்த பெண் இன்ன ஜாதியை சேர்ந்தவள் அவள் குடும்ப பின்னணி இது என்பதெல்லாம் எனக்கு முதலில் தெரியாது நான் வேலை செய்யும் அலுவலகத்திலேயே அவளும் வேலை செய்தாள் அவளை பார்த்த உடனேயே என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது அந்த சிலிர்ப்பு வேர்விட்டு வளர்ந்து கிளை பரப்பி நின்ற போது அது தான் காதல் என்று புரிந்து கொண்டேன் எனக்குள் உதயமான காதல் எண்ணத்தை அவளிடம் வெளிப்படுத்தினேன் அவளும் தனக்குள்ளும் அப்படி ஒரு ரசாயன மாற்றம் இருப்பதை உணர்ந்து என் காதலை ஏற்றுக்கொண்டாள்

அதன் பிறகு தான் திருமணத்திற்கு தடையாகவுள்ள மற்ற விஷயங்கள் எங்கள் கண்களுக்கு தென்பட ஆரம்பித்தது நாங்கள் திருமணம் செய்து கொள்வது சரியா தவறா என்றும் நடைமுறைக்கு ஒத்து வருமா என்றும் பல நண்பர்களிடம் ஆலோசனை கேட்டோம்

அவளிடம் சிலர் பிராமண ஜாதியில் மடி ஆச்சாரம் அது இது என்று பார்ப்பார்கள் நாளுக்கொரு விரதமும் மணிக்கொரு சடங்கையும் செய்வார்கள் உன்னால் அவைகளை புரிந்து கொள்ளவும் முடியாது மனம் ஒன்றி கலந்து கொள்ளவும் முடியாது எனவே இருவரும் திருமணம் செய்வதை நன்றாக யோசித்து செய்யுங்கள் என்றார்கள்

என்னிடமோ நீ மாமிசம் என்பதை தொட்டும் அறியாதவன் வெங்காயம் பூண்டு கூட உன் ஆச்சாரத்திற்கு ஆகாது அந்த பெண்ணோ கருவாடு மீன் இல்லாமல் சாப்பிட முடியாதவள் புலியும் மானும் ஒரே உணவை உண்ண முடியாது எனவே தாம்பத்திய வாழ்வை துவங்கும் முன்பு பல முறை ஆலோசனை செய் என்றார்கள்

வேறு சிலரோ நீங்கள் இருவரும் திருமணம் செய்யாலாம் ஆனால் திருமணத்திற்கு பிறகு உங்கள் இருவரையுமே உறைவினர்கள் அனைவரும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் நல்லது கெட்டதுகளில் சகஜமாக கலந்து கொள்ள முடியாது உங்கள் வாழ்க்கையை சிரமத்துடன் நகர்த்தி விட்டாலும் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் வாழ்வை இந்த கலப்பு மணம் கேள்விக்குறியாக்கும் எனவே நடைமுறைக்கு ஒவ்வாத திருமண வாழ்வை தவிர்ப்பது நலம் என்று சொன்னார்கள்

மது குடித்தவனும் கஞ்சா அடித்தவனும் தான் சுயநினைவு இல்லாமல் தடுமாறுவார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் உண்மையில் நானும் இந்த விஷயத்தில் பலருடைய ஆலோசனை கேட்டு குழம்பி வெதும்பி மயங்கி சுயநினைவை இழந்து ஒரு நடை பிணம் போல ஆகி விட்டேன்

இந்த நிலையில் தான் யோகி ஸ்ரீ ராமானந்த குரு சலனமே இல்லாத தெளிவான ஒரு வழியை எனக்கு காட்டினார் ஆயிரம் யானை பலம் வந்தவன் போல் நான் ஆகிவிட்டேன் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் எவ்வளவு சோதனை நேரிட்டாலும் நம்பியவளை கைபிடித்தே தீருவது என்ற முடிவுக்கே வந்தது விட்டேன்

இந்த நிலையில் என் வீட்டாரின் கவனத்திற்கு என் காதல் விஷயத்தை எடுத்து செல்ல ஒரு உபாயம் கண்டுபிடித்தேன் என் கேள்விக்கு குருஜி சொன்ன பதிலை பிரிண்ட் எடுத்து என் தந்தையாரிடம் காண்பித்தேன் முதலில் ஆடி போய்விட்டார் அதன் பிறகு சற்று நிதானபட்டவராக இந்த பதில் சொன்ன குருஜியை நான் பார்க்க வேண்டும் ஏற்பாடு செய் என்று சொன்னார் எனக்கு சந்தோசம் தாங்க வில்லை எப்படியும் குருஜியை சந்திக்க வாய்ப்பு பெற வேண்டும் என்று குருஜியின் தொலைபேசி எண்ணுக்கு பல முறை தொடர்பு கொண்டேன் அவரோடு என்னால் பேச முடியவில்லை

அதிஷ்ட வசமாக ஒரு நாள் மாலை குருஜியோடு பேசுவதற்கான வாய்ப்பு அமைந்தது மூச்சி விடாமல் எல்லா விசயத்தையும் கொட்டி தீர்த்த நான் உங்களை சந்திக்க எப்படியும் வாய்ப்பு தாருங்கள் என்று மன்றாடினேன்

டிசம்பர் மாதம் கடேசி ஞாயிறு அன்று திருச்சி அந்தநல்லூரில் உள்ள ஸ்ரீபுரம் வேத பாட சாலைக்கு வருகிறேன் அங்கே உன் தந்தையாரை அழைத்து வா பேசலாம் என்றார் எனக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆகிவிட்டது நான் தேடிபோன தெய்வம் என்னையே தேடி வருகிறது என்றால் என்னை விட பாக்கியசாலி யார் இருப்பார்

குருஜி குறிப்பிட்ட நாளில் என் தாய் தந்தையாரோடு அவரை சென்று தரிசித்தேன் எனது தகப்பனாருக்கு எவ்வளவோ விஷயங்களை குருஜி எடுத்து சொன்னார் அத்தனையும் மவுனமாக கேட்ட என் தந்தையார் பெரியவர்களின் விருப்பம் இது எனும் போது அதை ஈஸ்வர சங்கல்ப்பமாகவே நான் கருதுகிறேன் பகவான் விட்டவழியில் எல்லாம் நடக்கட்டும் நான் தடை சொல்லவில்லை என்று சொன்னார்

ஒரு நிமிடம் உலகமே என்னை சுற்றி வருவது போல் ஆகிவிட்டது சந்தோசத்தை எப்படி வெளிக்காட்டுவது என்று எனக்கு தெரியாமல் அழுதேன் இறைவனின் கருணையை நினைத்து அழுவதை தவிர வேறு என்ன ஒரு எளியவனால் செய்ய முடியும்

இறைவனின் திருவுள்ளத்தாலும் குருஜியின் அனுகிரகத்தாலும் நான் விரும்பிய பெண்ணை தைமாதத்தில் கரம் பிடிக்க நிச்சவிக்க பட்டுவிட்டது இந்த சந்தோசத்தை எனக்குள் மட்டுமே அடக்கி வைக்க நான் விரும்பவில்லை உஜிலாதேவியின் அனைத்து வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன் விரைவில் என் திருமண தேதியை உங்களிடம் தெரிவிப்பேன் வாசகர்கள் அனைவரும் எங்களை ஆசிர்வதிக்க அன்புடன் வேண்டுகிறேன்
சோமநாதன்,திருச்சி

   வாசகர் சோமநாதன் அவர்களின் திருமணம் நல்ல முறையில் நடக்க இறைவனை பிராத்திக்கிறேன்.

Contact Form

Name

Email *

Message *