Store
  Store
  Store
  Store
  Store
  Store

சொந்த தொழில் செய்யும் ஜாதகம்.

  • னது கணவருக்கு 45 வயது ஆகிறது அவருக்கு இதுவரை எந்த வேலையும் நிரந்தரமாக அமையமாட்டேன் என்கிறது மூன்று மாதம் 6 மாதத்திற்கு மேல் எதிலும் அவரால் நிரந்தரமாக அமர முடியவில்லை இத்தனை வயதாகியும் வாழ்வில் செட்டில் ஆக முடியவில்லை என்று அவர் மிகவும் வருத்தப்படுகிறார் அவருக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும் 


ராஜலக்ஷ்மி ,dubai



  டை இல்லாத மனிதன் அரை மனிதன் என்று பழமொழி உண்டு ஆடை இல்லாதவன் அரை மனிதனோ முழு மனிதனோ அதை பற்றி சமூதாயம் வருத்தப்படுவதில்லை ஆனால் வேலை இல்லாத மனிதனை மனிதனாகவே இந்த சமூதாயம் மதிப்பது இல்லை சோம்பேறி தனமாக திரிபவனை மதிக்க வில்லை என்றால் அதை பற்றி கவலை பட வேண்டிய அவசியம் இல்லை ஆனால் ஆயிரம் முயற்சித்தும் வேலை கிடைக்காமல் தானாக வேலையை உருவாக்கி கொண்டு செயல்பட்டு தோல்வி அடைந்தாலும் அவனையும் இந்த சமூகம் மதிக்காத போது நமக்கு வருத்தமாக இருக்கிறது 

உங்கள் கணவர் நல்ல திறைமைசாலி தான் உழைப்பதற்கு அஞ்சாதவர் தான் ஆனால் எதை எந்த இடத்தில் பேசவேண்டும் என்ற விவரம் தெரியாதவராக இருக்கிறார் அதனாலேயே வேலை இடத்தில் பிரச்சனைகள் உருவாகி வெளியேற வேண்டிய சூழ்நிலை வருகிறது இதை அவரது ஜாதகம் தெளிவாக காட்டுகிறது மேலும் அவரது உத்தியோக அமைப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது எனவே அவருக்கு இனியும் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு 

ஆனால் அவரது தொழில்ஸ்தானம் மிக சிறப்பான முறையில் உள்ளது இந்த காலகட்டத்தில் சிறிய அளவிலேனும் ஒரு சுய தொழில் துவங்குவது மிகவும் நல்லது அது மிக விரைவில் பெரிய அளவில் வளரும் தொழில் நல்ல படியாக நடக்க அது துவங்கியவுடன் எனக்கு சொல்லுங்கள் மகாலஷ்மி அஞ்சனம் செய்து தருகிறேன் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.



Contact Form

Name

Email *

Message *