( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இவனுக்கு இணையாக யாரும் இல்லை !


   கவான் மாஹாவிஷ்ணு பல்வேறு அவதாரங்கள் எடுத்திருந்தாலும் குறிப்பாக பத்து அவதாரங்கள் சிறப்பித்து கூறப்படுகின்றன அவற்றில் மிக முக்கியமாக ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பரிபூரண அவதாரம் என்று போற்றப்படுகிறது அறத்தின் வடிவான ஸ்ரீ ராமனை விட ஸ்ரீ கிருஷ்ணன் எப்படி உயர்ந்தவனாக கருதப்பட முடியும் 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை யாரோடும் ஒப்பிட முடியாது இமயமலை எப்படி என்றும் இமயமலையோ அதே போலவே ஸ்ரீ கிருஷ்ணன் என்றும் கிருஷ்ணன் தான் அவனுக்கு நிகர் எவருமே கிடையாது கிருஷ்ணனை நீங்கள் கடவுளாக அவதாரபுருசனாக பார்க்க வேண்டாம் எலும்பும் சதையும் உள்ள சாதாரண மனிதனாக அவனை நீங்கள் பார்த்தால் கூட அவனுக்கு இணையான ஒரு மனிதன் கூட இது வரை உலகத்தில் பிறக்கவே இல்லை 


கிருஷ்ணன் பழையகால ஆசாமி அவனது கருத்துக்கள் கட்டுப்பட்டி தனமாக பழம் பஞ்சாங்கள் என்று எவரும் ஒதுக்கி விட முடியாது அவன் மிக தொன்மை காலத்தில் வாழ்ந்தவனாக இருந்தாலும் கூட அவனது வாழ்வு அவனது வாக்கு நமது சமகாலத்தையும் தாண்டி வருங்காலத்தாலும் நிறப் பபடுமா என்ற கேள்வி குறியோடு நிற்பதாகும் கண்ணனை முழுமையாக புரிந்து கொள்வதற்கு கூட இன்று வரை நம்மால் இயலாது வரும் ஆயிரம் ஆண்டுகளில் அவனது இயல்பு கால்பங்கு மனிதனுக்கு விளங்கினால் கூட அது மிகப்பெரும் அதிசயம் 

கோவர்த்தன கிரியை குடையாக பிடித்து ஆயர்களை காத்த கோபாலன் அவதாரங்களில் சிறந்த அவதாரம் பரிபூரணமான அவதாரம் என்று கூறுவதற்கு காரணம் இருக்கிறது மஹாவிஷ்ணு பரசுராம அவதாரத்தில் கோபக்கனலாக தகித்தார் வாமன திருவிக்ரம நரசிம்ம அவதாரங்களை அறிவுக் கண் கொண்டு ஆய்ந்து பார்த்தால் உலகத்தோடு ஒட்டிவராத எதோ ஒரு குறை தெளிவாகத்தெரியும் ஸ்ரீ ராம அவதாரத்தில் அவன் குறைவற்ற நிறை மனிதனை போல தெரிந்தாலும் சந்திரனில் களங்கம் இருப்பது போல சிற்சில குறைகள் அவனிடம் தென்பட்டன அதனால் தான் அவன் இராமச்சந்திரன் என்று அழைக்கபட்டான் 

ஆயிரம் சமாதானம் சொன்னாலும் வாலியை மறைந்திருந்து தாக்கியது ராமனுக்கு களங்கம் தான் சீத்தா இல்லாத போது அவள் பிரிவை எண்ணி வருந்தியதும் அவள் முகம் போல் தெரிந்த மலர்களையும் அவள் விழிகள் போல் தெரிந்த மான்களின் கண்களையும் கண்டு பிரிவு துயரத்தில் வருந்தியது சராசரி மனிதனுக்கு சரியே தவிர சாதனை படைக்கும் அவதார புருசனுக்கு அது சரியல்ல 


கிருஷ்ணன் பிறந்தது ஒரு இடம் வளர்ந்தது ஒரு இடம் என்றாலும் கூட அதற்கு அவன் வருந்தியது இல்லை குழந்தை எப்படி ஆடவேண்டுமோ அப்படியெல்லாம் ஆடிகளித்தவன் அவனை மற்றவர்கள் போற்றியபோதும் சரி தூற்றிய போதும் சரி இரண்டையும் சிரித்த முகத்தோடே ஏற்றுக்கொண்டான் 

தன்னை தாக்கவரும் எதிரியை கூட கோபம் கொண்டு அவன் விழ்த்தியது இல்லை சிரித்து கொண்டே இருப்பான் அவன் சிரிப்பின் முன்னால் எதிரி தானாக வீழ்ந்து விடுவான் தனக்கு அபாயம் வந்தபோதும் தன்னை நம்பியவர்களுக்கு அபாயம் வந்தபோதும் சிரித்த முகம் மாறாமல் இருந்தானே தவிர பதற்றத்தோடு எப்போதும் அவன் காணப்பட்டது இல்லை தீர்க்கவே முடியாது என்று மற்றவர்கள் எல்லாம் புறமுதுகு காட்டிய போது கூட மலர்ந்த முகம் மாறமல் சிக்கலை தீர்ப்பதற்கு கிருஷ்ணனை விட்டால் யாருமே கிடையாது 

யுத்த களத்தில் ஆயிர கணக்கான உயிர்கள் பலியான போது ரத்த வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியபோது சம்மந்தமே இல்லாமல் சலனமே இல்லாமல் ஒரு சாட்சியாக நின்று கொண்டு எப்படி புன்முறுவல் பூத்தானோ அதே போல தான் வேடன் ஒருவன் தன மீது அம்பு எரிந்து உடலை சாய்த்த போது புன்னகை உடனே இருந்தான் சிரித்து கொண்டே பிறந்தவன் சிரித்து கொண்டே மரணத்தை வரவேற்ப்பது எவ்வளவு பெரிய அற்புதம் 


ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்வில் துயரங்கள் வந்தாலும் அவன் துன்பபட வில்லை சிரித்த முகத்தோடு சந்தோசங்களை எப்படி வரவேற்றனோ அப்படியே துயரத்தையும் வரவேற்றான் கிருஷ்ணனிடம் கோபம் இல்லை கிருஷ்ணனிடம் துயரம் இல்லை கிருஷ்ணனிடம் ஆசை இல்லை கிருஷ்ணனிடம் மோகம் இல்லை கிருஷ்ணனிடம் உயர்வு தாழ்வு என்ற பாகுபாடு இல்லை ஆடுமேய்க்கும் இடையர்களோடு எப்படி பழகினானோ அப்படியே நாடு மேய்க்கும் அரசர்களோடும் பழகினான் 

கிருஷ்ணன் அவதாரங்களில் மட்டும் பரிபூரணமானவன் அல்ல மனிதர்களிலும் அவன் தான் பரிபூரணமானவன் அதனால் தான் அவன் புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறான் இந்த உலகில் இது வரை பிறந்த ஞானிகளை விட கிருஷ்ணன் தான் தலை சிறந்த ஞானி அவன் ஒருவனே உண்மையான தேவன் தேவ குமாரன் இறை தூதன் மற்றவர்கள் அனைவரும் அரைகுரையானவர்களே 

ஏசு நாதரின் ஓவியங்களை பார்த்திருக்கிறோம் அவைகள் மிகவும் அழகானவைகள் என்பதில் சந்தேகம் இல்லை அவர் முகத்தில் அமைதி தழுவும் சாந்தம் நிலவும் சத்தியம் ஜொலிக்கும் ஆனால் அவைகலுக்குள்ளே ஒரு சோகம் இருக்கும் அதை ஆழ்ந்து பார்க்கும் போது நமக்கு வாழ்க்கையின் மீது விரக்தி வருமே தவிர தைரியம் தன்னம்பிக்கை மன துணிச்சல் போராட்ட குணம் வராது  


மிகப்பெரும் ஞானியான கெளதம புத்தரும் இனம் புரியாத நுணுக்கமான மாஹா சூன்யமான ஒரு நிலைக்கு மனிதன் போகவேண்டிய வழியை சொல்கிறாரே தவிர ஆனந்தமயமான வாழ்க்கைக்கு வழி சொல்லவில்லை அவர் உபதேசங்கள் அச்சத்தை ஏற்படுத்தி வைராக்கியத்தை தருகிறதே தவிர இயல்பான ஞான வைராக்கியத்தை தரவில்லை 

அகிம்சையின் வடிவமான மகாவீரரும் உடலை துன்பபடுத்தி மனதை செம்மை படுத்த சொல்கிறாரே தவிர ஸ்ரீ கிருஷ்ணனை போல் உடலையும் மனதையும் ஆனந்த சாகரத்தில் நிலைநிறுத்த வழிகாட்ட வில்லை உயிர்களை வதைப்பது ஹிம்சை என்றால் தன் உடலை வதைப்பதும் அதே போன்ற ஹிம்சை தானே என்பதை மகாவீரர் உணரவே இல்லை 

வேறு சிலரோ அதை செய்யாதே இதை செய்யாதே இப்படி செய்தால் மறுவுலகம் உனக்கு கிடைக்காது இன்னின்ன காரியங்களை செய்தால் சொர்க்கத்தில் உனக்கு பாலும் தேனும் கிடைக்கும் என்று வேறு உலக வாழ்க்கையை பற்றி கூறுகிறார்களே தவிர இந்த உலக வாழ்க்கையை செம்மையாக்கி கொள்ளும் வழிவகையை காட்டவில்லை 


ஒரு மனித ஆத்மா யாருக்கும் இடைஞ்சல் இல்லாத நற்காரியங்களை செய்து இவ்வுலக வாழ்வை இனிமை படுத்தி கொள்ளவும் வேண்டும் மறு உலக வாழ்வு என்னும் இறைவனின் திருவடி நிழலை பெறுவதற்கு தன்னை நல்ல எண்ணங்களாலும் தூய்மை படுத்தி கொள்ள வேண்டும் அதை விட்டு விட்டு மறு உலக வாழ்வை மட்டுமே பிரதானமாக கருதி செயல்படுவோமானால் அந்த வாழ்க்கை ரத்த சோகை பிடித்ததாக நோய்வாய் பட்டதாக சுரணை அற்றதாக இரக்கமே இல்லாததாக இருக்குமே தவிர உயிரோட்டம் உடையதாக இருக்காது 

அதனால் தான் கிருஷ்ணன் உடலையும் மனதையும் தனது பரிபூரண கல்யாண குணங்களோடு சம்மந்தம் படுத்த சொல்கிறான் நீ ஆசையை அடக்கவேண்டும் என்று ஓடினால் அது உனக்கு முன்னால் ஓடி உன் எதிரே பூதம் போல் நின்று வழிமறிக்கும் எனவே ஆசையோடு உனது போராட்டத்தை நடத்தாமல் எல்லாவற்றையும் என்னிடத்தில் அற்பணிக்க கற்றுக்கொள் ஆசையை வெல்ல அதுவே சுலப வழி என்கிறான் 

நான் கொண்டது தான் சரியான வழி எனது கருத்து தான் உண்மையானது நான் கண்டது தான் சத்தியம் அதை தான் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் அப்படி அவர்கள் பின்பற்ற மறுத்தால் நான் சொல்வதை நம்ப தயங்கினால் என் கருத்தை குறை என்று வாதிட்டால் அவர்கள் சாத்தனின் மைந்தர்கள் இந்த உலகில் வாழ தகுதி இல்லாதவர்கள் என்று மற்றவர்களை கட்டாயப்படுத்த மாற்ற முயற்சித்தால் இந்த உலகம் செங்குருதியை சேமிக்கும் கிடங்காக இருக்குமே தவிர அமைதி பூங்காவாக ஆனந்த கீதம் முழங்கும் சொர்க்கமாக இருக்காது 


எனவே முதலில் உன்னை மாற்று உனக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை மாற்று இந்த உலகத்தில் காணுகின்ற உயிர்கள் எல்லாமே பொருட்கள் அனைத்துமே ஸ்ரீ கிருஷ்ணனின் அம்சமே என்பதை உணர்ந்து கொள் தன்னை மாற்றாமல் தான் மாறாமல் மற்றவர்களை மாற்ற நினைப்பவன் மாறும்படி சொல்பவன் அறிவுடையவன் ஆக மாட்டான் என்று ஸ்ரீ கிருஷ்ணன் அமுத மொழி தருகிறான் 

கீதையை ஒரு முறை படித்து பாருங்கள் மறுமுறை படித்து ஆழமாக சிந்தனை செய்யுங்கள் இன்னொரு முறை படித்து அதன் வழியில் சிறிது நடந்து பாருங்கள் அப்போது தெரியும் கிருஷ்ணன் மட்டுமே பரிபூரணமானவன் என்பதன் ரகசியம் நான் சொல்கிறேன் நம்பினால் நம்புங்கள் இந்த உலகம் வெகுவிரைவில் கிருஷ்ணனை உணர்ந்து அவன் வழியில் திரும்ப போகிறது காரணம் இந்த உலக முழுவதும் போட்டி பொறாமை நிறைந்து விட்டது துயரகாற்று சுவாசிக்க முடியாமல் மனிதனை மூச்சி திணற வைக்கிறது மனிதனுக்கு மனிதன் வைக்கின்ற பாசம் மறைந்து பொருளே பிரதானம் என்ற நிலை உலக மக்கள் அனைவரையும் அச்சம் கொள்ள வைத்து கொண்டிருக்கிறது 

மனிதன் மனிதனாக வாழ்ந்து பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட ஆரம்பித்து விட்டான் மனிதனை மனிதனாக வாழவைக்கும் மந்திர கோல் ஸ்ரீ கிருஷ்ணனிடம் மட்டுமே இருக்கிறது அதனால் தான் அவன் பரிபூரணமான அவதாரம் பரிபூரணமான ஞானி பரிபூரணமான மனிதன்.


+ comments + 9 comments

இறைவனை பற்றி அருமையான சொற்கள் சொன்னிர்கள் ஐயா.... அனாலும் எனக்கு இதில் ஓரளவே திருப்திதான்.

அவனின் பெருமைகளை முழுவதும் சொல்ல எவரால் முடியும்? அதை முழுதும் அறிந்து கொள்ள எவருக்கு ஞானம் உள்ளது?

எதோ நமக்கு இருக்கும் ஒரு சிறு அறிவை கொண்டு, அவனுக்கு பக்தி செய்கிறோம். அவன் புகழ் பாடுகிறோம்.

அனால், அந்த பரமாத்மா, நம் ஜட அறிவுக்கு அப்பாற்பட்டவன்.

அர்ஜுன! தேவர்களும் முனிவர்களும் என் வைபவத்தை அறிய முடியாது. என்னென்றால் எல்லாவிதத்திலும் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் முதலானவன் நானே. என்று கூறுகிறான்.


அப்படி பெரும் தேவர்களும் , சப்த ரிஷிகளும் அறிய முடியாத ஈடு இணையற்ற , அந்த பரமாத்மனை நம்மை போல சாமானிய மனிதர்களால் அறிய முடியுமா என்ன?


இருந்தாலும்... உங்களை போல பெரியவர்கள், அவன் புகழ் பாடுவது, அவன் பெருமை பேசுவது எல்லாம் , எங்களை போல சிறியவர்களுக்கு மேலும் மேலும், அறிவை உண்டாகுகிறது. அவனிடம் பக்தி செய்ய தூண்டுகிறது.

உங்கள் சேவைகளுக்கு எமது நன்றிகள். வணக்கம்.

04:21

Guruji,
Very good article.Thanks for increasing the faith on Lord Krishna by giving practical incidents.Please keep writing more article on Krishna leelai which is unheard of for us.

Regards
Sriram

மிகவும் அருமை குருஜி, வெகு நாட்களுக்கு பிறகு மஹா விஷ்ணு பற்றி எழுதியுள்ளிர்கள், மனது நிறைவுடன் படிக்க முடிந்தது,

பகவான் விஷ்ணு, ராம அவதாரத்தில் தன்னை ஒரு முழு மனிதனாக மட்டும் தான் வாழ்ந்து காட்டினர், அதில் அவர் தன்னை விஷ்ணு வாங்கவும், கடவுளாகவும் கட்டிக்கொள்ளவில்லை. அதனால் தான் மனித வாழ்க்கை நடைமுறையில் சாத்தியம் இல்லாத எதையும் அவர் செய்யவில்லை , எனவே அவரிடம் சிறு சிறு குறைகள் ஏற்பட்டு இருக்கலாம்,

அனால் கிருஷ்ணா அவதாரம் அப்படி இல்லை, கடவுளே நேரடியாக பூமிக்கு வந்தால் என்ன என்ன அதிசயம் அனைத்தும் நடக்குமோ அது அதனையும் நடத்தி காட்டி, இது நிரந்தரம், இது மாயை என்று புரியவைத்து, தனது முழு சக்தியையும் குழந்தையாக இருக்கும் போதே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார், பகவத் கீதை என்னும் அருபுதத்தை தந்தார்.

மிக்க நன்றி குருஜி ..

raja ganesh
12:51

dear sir,

krishna is supreme. but krshna has so many different avatar and vishnu is one of the avatar.it is clearly stated in bhagavad gita.

for reference some of the text i have found in the internet.

..


The Blessed Lord said: Yes, I will tell you of My splendorous manifestations, but only of those which are prominent, O Arjuna, for My opulence is limitless.

Chapter 10, Verse 20.
I am the Self, O Gudakesa, seated in the hearts of all creatures. I am the beginning, the middle and the end of all beings.

Chapter 10, Verse 21.
Of the Adityas I am Visnu, of lights I am the radiant sun, I am Marici of the Maruts, and among the stars I am the moon.

krishna is seated as vishnu in every one heart!!!

the name of Krishna is always given more importance than the name Vishnu

Krishna and Vishnu are actually the same person, but when God is understood intimately He is called Krishna. And when He is understood formally, He is called Vishnu

It is a fact that if one wants to attain admittance into topmost spiritual planet, Goloka Vrindavan, that one must be devoted to Lord Vishnu in His original from of Lord Krishna

hare krishna!

Anonymous
01:44

நீங்கள் இஸ்லாம் பதிவுகளை படிக்க என்று கொடுத்துவிட்டு இஸ்லாத்தை பற்றி ஒன்றும் அறியாதவர் போல எழுதிஇருக்கிறீர்கள். தயவு செய்து இப்படியான போக்கை மாற்றி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.மேலும் இஸ்லாத்தை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். ஏனெனில் நீங்கள் இஸ்லாத்தை அறிந்து கொண்டால் நீங்கள் அதை ஏற்று கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு மருசெயயதவர்கள் என்றும் எனக்கு தெரியும்.மிக்க நன்றி.

@Anonymous: Ungal karuthukkalai nan amothikkuren.. Thanks

Anonymous
00:39

v

Anonymous
00:39

v

Anonymous
00:39

h


Next Post Next Post Home
 
Back to Top