Store
  Store
  Store
  Store
  Store
  Store

எனக்கு நானே குழி வெட்டுவேன்...?


  • தற்கால வாழ்க்கை முறைக்கு இலக்கியங்களால் துணை செய்ய முடியுமா? 

இலக்கியம் என்றவுடன் அது கம்பனும் காளிதாசனும் சொன்ன விஷயங்கள் அவைகள் இக்கால நடைமுறைக்கு எப்படி ஒத்துவரக்கூடும் என்று மட்டுமே நம்மில் பலர் நினைக்கிறார்கள் இலக்கியம் என்பது பழங்கால சங்கதிகள் மட்டுமல்ல மேலும் அதை இலக்கியவாதிகள் மட்டும் தான் உருவாக்க வேண்டும் என்ற நியதியும் கிடையாது புகழ்பெற்ற இலக்கியங்கள் எல்லாமே தாங்கள் ஒரு இலக்கிய கர்த்தா என்ற எண்ணமே இல்லாத மனிதர்களால் உருவாக்கப்பட்டதே தவிர இலக்கியவாதிகளால் உருவானவைகள் அல்ல 

ஒரு நல்ல விஷயத்தை சொல்லுவதற்கு கவிஞனோ கலைஞனோ தேவையே இல்லை மரத்தடியில் கிளி ஜோசியம் பார்ப்பவன் கூட சொல்ல முடியும் சொல்லுகின்ற விஷயம் ஆழமாக இருக்க வேண்டும் அழகாக இருக்கவேண்டும் அவ்வளவு தான் அதன் நியதி அதன் பெயர் தான் இலக்கியம் என்பது 


தற்காலம் என்றவுடன் அது என்னவோ கெட்டுபோய்விட்டது அவசரகதியில் சென்று கொண்டிருக்கிறது திருத்தவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது என்றெல்லாம் கருத்துக்கள் நிலவுகின்றன இந்த கருத்துகள் இன்று நேற்று உருவானவைகள் அல்ல ஆயிரகணக்கான வருடங்களாகவே இது பேசப்பட்டு வருகிறது வள்ளுவனும் இளங்கோவும் வாழ்ந்த காலத்தில் கூட இந்த கருத்து இருந்தது இன்னும் இது அவ்வளவு சீக்கிரம் மறைந்து போகாது 

அந்த காலத்தில் மட்டும் எல்லோரும் வள்ளுவன் சொன்னப்படி பாரதி பாடியபடி நடந்தார்களா என்ன எல்லோரும் அவைகளை படித்தார்கள் அதில் யாரோ ஒருவர் மட்டும் தான் வள்ளுவன் நல்ல சங்கதிகளை இரெண்டே வரியில் சொல்லியிருக்கிறாரே அதன் படி வாழ்ந்து பார்க்கலாமே என்று முயற்சி செய்திருப்பார் அவர்கள் தான் இன்று மாமனிதராக சரித்திரத்தில் நிற்கிறார்கள் இன்றும் அப்படி சிலர் இருக்கலாம் அவர்கள் வருங்கால சரித்திரத்தில் நிச்சயம் இடம் பெறுவார்கள் பிறந்தவர்கள் அனைவரையும் சரித்திரத்தில் இடம்பெற வைத்து விட்டால் சரித்திரம் என்பது மதிப்பில்லாத பொக்கிசமாகி விடும் எனவே இலக்கியம் எக்காலத்திலும் எதோ ஒரு மனித வாழ்விற்கு துணை செய்து கொண்டு தான் இருக்கிறது 


  • குருஜி நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டால் இலக்கியம் படிப்பதில் லட்சத்தில் ஒருவர் தான் அதை நடைமுறை படுத்தி பார்க்கிறாரா மற்றவர்கள் அனைவரும் வீண் கெளரவத்திற்காக மட்டும் தான் இலக்கிய பக்கம் நடமாடுகிறார்களா? 

அதில் சந்தேகம் இல்லை இலக்கிய மேடைகளிலும் கூட்டங்களிலும் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது அதில் எத்தனை பேர் அங்கு பேசப்படுகின்ற அற்புதமான கருத்துகளை கவனிக்கிறார்கள் கவனிப்பது இருக்கட்டும் இலக்கியத்தை பேசுகின்ற எத்தனை பேர் அது வாழ்க்கையை செப்பனிடுகின்ற சரியான கருவி என்று நம்புகிறார்கள் யாருமே இல்லை என்று தான் சொல்லவேண்டும் பேசுபவன் எவ்வளவு அழகான வார்த்தைகளை என்னால் அடுக்கடுக்காக சொல்ல முடிகிறது பார் எனது திறமைக்கு இணையாக யாரும் இல்லை என்ற மனோபாவத்தில் தான் பேசுகிறார்கள் கேட்க வந்தவனோ நான் கேட்க வந்த விஷயமே இவ்வளவு உயர்தரமானது என்றால் நான் எத்தகைய உயர்ந்த மனிதனாக இருப்பேன் என்னை நீ மதிக்க வேண்டாமா என்ற எண்ணத்தில் தான் வருகிறார்கள் 

அரிச்சந்திரா நாடகம் காந்தி பிறப்பதற்கு பல ஆயிர வருடங்கள் முன்பும் மேடையேற்றப்பட்டிருக்கிறது இன்று வரை பல ஆயிர முறைகளும் மேடையேறி வருகிறது ஆனால் அந்த நாடகத்தை பார்த்து ஒரே ஒரு மகாத்தமா காந்தி தான் உருவாகி இருக்கிறாரே தவிர அவருக்கு முன்பும் அவருக்கு பின்பும் யாருமே உருவாகவில்லை இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பலருடைய காதுகளில் இலக்கியம் தவறாமல் வந்து விழுகிறது ஆனால் அதை யாரோ ஒருவருடைய இதையம் மட்டும் தான் கேட்கிறது


கேட்பவன் குறைவு புரிந்து கொள்பவன் மிக குறைவு என்பதற்காக இலக்கியங்களை காற்றில் பறக்க விட்டுவிட முடியாது இலக்கியம் என்பது சமூதாய வாழ்வுக்கும் தனிமனித வாழ்வுக்கும் மிகவும் அவசியமானது காரணம் மனித நாகரீகத்தில் மூல வித்தே இலக்கியத்தில் இருந்து தான் பிறக்கிறது என்று அடித்து சொல்லலாம் 
  • தனிமனித வாழ்வுக்கு இலக்கியங்களால் எந்த அளவு உதவி செய்ய முடியும்?
ஒளவையார் அறம் செய்ய விரும்பு என்றார் இதன் பொருள் தர்மம் செய்வதற்கு விருப்பம் மட்டும் படு தர்மம் செய்யாதே என்பது அல்ல அறம் செய்ய நினைத்தும் செய்ய முடியாத துர்பாக்கிய சாலிகள் நிறைய பேர் இருப்பார்கள் அவர்கள் இடத்தில் நீ அறம் செய்ய விரும்புகிறாயா உன்னால் செய்ய முடிய வில்லையா கவலையை விடு அதற்காக வருத்த படாதே நம்மால் முடியவில்லையே என்று தளர்ந்து போய் உட்கார்ந்து விடாதே எழுந்து சென்று வேலையை பார் வேலை பார்க்கும் போதே தர்மங்களை அறச்செயல்களை செய்வதற்கு விருப்பபடு அந்த விருப்பம் மனதிற்குள் ஊற ஊற செயல்வடிவம் படுத்துவதற்கு வழிபிறக்கும் என்ற பொருளில் தான் அறம் செய்ய விரும்பு என்று பாடுகிறார் 

எல்லா தரப்பு மனிதனும் பெருமைப்பட தக்க காரியங்களையே செய்ய விரும்புகிறான் ஆனால் அவனுக்கு எது பெருமையானது எது சிறுமையானது என்பது புரியவில்லை இப்படி குழம்பி போய் நிற்பவனிடம் பெருமையான காரியம் எது தெரியமா உன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது தான் பெருமை என்று இலக்கியம் சொல்கிறது ஐயோ அப்படியா நானோ எதுவும் இல்லாத ஏழை என்னிடம் கொடுப்பதற்கு உயிரை தவிர எதுவும் கிடையாது நான் எப்படி தானம் செய்து பெருமை அடைய முடியும் என்று எவனாவது வருத்தபட்டால் அவனிடமும் இலக்கியம் வந்து கலங்காதே தானம் செய்வதை விட பெருமை மிக்க காரியம் ஒன்று இருக்கிறது எந்த நிலையிலும் யாரிடமும் யாசகமாக எதையும் பெறாமல் வறுமையிலும் செம்மையாக வாழ்வதே மிக பெரிய பெருமை என்று ஆறுதல் சொல்கிறது 

ஆக இலக்கியம் என்பது ஆகாச கோட்டை கட்டும் கற்பனை வாதிகளின் கூடாரம் அல்ல மனத்தால் தளர்வுற்று தாழ்ச்சி பெற்று தெம்பில்லாமல் சுருண்டு கிடக்கும் எளிய மனிதனை தூக்கி நிறுத்தி அப்பனே உன்னால் வாழமுடியும் உன்னாலும் மற்றவர்களை வாழவைக்க முடியும் என்று ஊக்கம் தருவது தான் இலக்கியம் இத்தகைய இலக்கியத்தின் அருட்பணியை ஒவ்வொரு தனி மனிதனும் இன்று வரை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறான் 

தனக்கென்று சொல்லிக்கொள்ள உறவுகள் இல்லையே ஆறுதல் படுத்துவதற்கு கரங்கள் இல்லையே ஆசுவாசமாக சாய்ந்து கொள்ள தோள்கள் இல்லையே நான் வாழ்ந்தென்ன பலன் செத்து போவதே சுகமென்று தற்கொலைக்கு நடப்பவனை கூட வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடுவரை பிள்ளை கடைசி வரை யாரோ என்று உறவின் நிலையாமையை எடுத்து கூறி மரண எண்ணத்தை தடுத்து நிறுத்தி விடும் ஒரு சாதாரண சினிமா பாடல் இலக்கியம் புத்தக வடிவில் தான் வரவேண்டும் என்பது இல்லை கேளிக்கை விருந்தளிக்கும் சினிமாவில் இருந்து கூட வரலாம் இலக்கியத்தை சொல்ல பெரிய மேதாவிகள் தான் வரவேண்டும் என்பதும் இல்லை வீதி ஓரத்தில் தெருக்கூத்தில் கட்டியகாரனாக வரும் ஒரு சாதாரண நடிகன் கூட 


திண்ணையிலே தூங்கி கிட்டு

சீர்திருத்தம் பேசி கிட்டு
சிரிப்பாய் சிரிக்கும் அண்ணாச்சி
உன் அடுப்பன் கரை என்னாச்சி 


என்று பாடி சோம்பேறி தனத்தால் வருகின்ற வறுமையை பொட்டில் அடித்தார் போல சொல்லி விளங்க வைத்து விடுகிறார் எனவே இலக்கியம் எந்த வடிவில் வந்தாலும் யார் வழியில் வந்தாலும் தனிமனிதனுக்கு உதவி கொண்டே தான் இருக்கிறது 
  • நீங்கள் சொல்வது முற்றிலும் சரி ஆனால் இன்றைய நடைமுறை வாழ்வில் இலக்கியம் என்பது புறக்கணிக்கப்படுவதாக இருக்கிறதே அது மாறுமா? 

ஒரு சமூதாயம் ஒட்டு மொத்தமாக அழிந்து போகும் போது அது பணத்தை மட்டுமே பிரதானமாக கருதி ஓட ஆரம்பிக்கும் தமிழ் சமூகவும் இன்று அப்படி தான் ஓடி கொண்டிருக்கிறது தமிழனக்கு தன்னை பற்றிய பெருமை இல்லை தன்னை நம்புகின்ற துணிச்சலும் இல்லை அவன் தனது அழகான வாழ்வை குழி தோண்டி புதைத்து விட்டு வேறொருவன் போல் வாழ ஆசைபடுகிறான் பாய்ந்து இரையை பிடிக்க வேண்டிய சிறுத்தை முயலை போல தாவி ஓட நினைத்தால் சாக வேண்டியதை தவிர வேறு வழி இல்லை 

தமிழனும் ஆடையால் மாறி வருகிறான் உணவால் மாறி வருகிறான் தன அடையாளத்தால் மாறி வருகிறான் ஆக மொத்தம் கடேசியில் தனது அடையாளங்கள் அனைத்திற்கும் சமாதி கட்டி விட்டு அனாதையாக முகவரி இல்லாதவனாக தெரு தெருவாக அலைய போகிறான் உன் நிலை கீழ்மை அடைந்து விடும் உன்னை திருத்தி கொள் என்று யாராவது புத்தி சொல்ல வந்தால் அவர்களை பரிகாசம் செய்கிறான் பாவிகள் என்று புறக்கணிக்கிறான் தான் புதைகுழியில் கிடக்கிறோம் என்று அவனே உணராதவரை அவனை காப்பாற்ற யாராலும் முடியாது ஆனால் இலக்கியகத்தால் அது முடியும் இலக்கியம் அதை நடத்தி காட்டும்.

பேட்டி - கே,குணசேகர் மலேசியாContact Form

Name

Email *

Message *