( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தலைவனை நம்புகிறவன் நாத்திகன் அல்ல !


  • டவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஜாதகத்தில் குருசண்டாள யோகம் என்ற யோகம் இருக்கும் என்று சொல்கிறார்கள் குரு சண்டாள யோகம் என்றால் என்ன? நாத்திகர்கள் அனைவரின் ஜாதகத்திலும் இந்த யோகம் கண்டிப்பாக இருக்குமா? 

சந்தோஷ்,நாகர்கோவில் ஒரு ஜாதகத்தில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்று இருந்தால் அந்த ஜாதகம் குருசண்டாள யோகமுடைய ஜாதகம் என்று அழைக்கப்படுகிறது அதாவது குரு ஜீவகாரகன் அதே நேரம் ராகு மரணகாரகன் இதை இன்னொரு விதத்திலும் சொல்லலாம் குரு என்பது தெய்விக சக்திகளை குறிக்கும் கிரகமாகும் ராகுவோ அசுர சக்தியின் அடையாளமாக காட்டப்படும் கிரகமாகும் 

குருவின் பொது குணம் ஜீவன் அதாவது உயிர் சாத்வீக எண்ணம் ஆத்ம சிந்தனை மத போதனை சமூக தொண்டு போன்றதாகும் ராகுவின் பொது குணம் போதை வஸ்துக்களின் ஈடுபாடு பேய் பிசாசுகள் துர்தேவதைகள் போன்றவற்றை நேசித்தல் மாமிசம் விஷம் விபச்சாரம் நம்பிக்கை இன்மை போன்றதாகும் 

ஒரே வீட்டில் ஆச்சாரமுடைய ஒருவனும் ஒழுக்கம் கெட்ட ஒருவனும் இருந்தால் அந்த வீடு எப்படி போர்களமாக இருக்குமோ அதே போலதான் ராகு மற்றும் குருவின் செயற்கை பெற்ற ஜாதகனின் மனோ நிலை இருக்கும் அவன் மனது ஒருபுறம் நியாய தர்மங்களை சிந்திக்கும் இன்னொரு புறம் அவைகளால் என்ன்ன பலன் எல்லாவற்றையும் மூட்டை கட்டி பரண் மீது போட்டு விட்டு உடம்பில் தெம்பு இருக்கும் வரை ஆடு என்று போதனை செய்யும் இரண்டிருக்கும் இடையில் அகப்பட்டு கொண்டவனின் கதி எப்படி இருக்கும் சற்று சிந்தித்து பாருங்கள் 

அவன் அறிவு கடினமான விஷயங்கள் எதையும் சிந்திக்க மறுக்கும் தனக்கு புரியவில்லை தன்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக அனைத்து தரப்பிலும் சந்தேகப்பட வைக்கும் இந்த சந்தேகம் கடவுளை மட்டும் தாக்காது தன்னை சுற்றி இருக்கும் எல்லாவற்றையுமே தாக்க ஆரம்பிக்கும் உலகத்தில் உள்ள அனைவருமே தன்னை போல் இருந்தால் தான் தனக்கு பாதகாப்பு என்று கருதி மற்றவர்களை தனது வழிக்கு இழுத்து கொள்ள சாம,பேத,தான தண்டங்களை பிரயோகம் செய்ய வைக்கும் தனது இழுப்புக்குள் வர மறுக்கும் மனிதர்களையும் கருத்துக்களையும் பரிகாசமாக பேசி இழிவு படுத்தி தன்சட்டை காலரை தானே தூக்கி விட்டு கொள்ளும் 

குருவும் ராகுவும் ஒரே வீட்டில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் தான் நாட்டில் மத கலவரங்கள் சமூக விரோத சக்திகளின் அத்து மீறல்கள் இயற்க்கை சீற்றங்கள் உள்நாட்டு குழப்பம்கள் அதிகமாக இருக்கும் நீங்களே பஞ்சாங்கத்தை எடுத்து வைத்து கொண்டு ராகு குரு சேர்ந்திருக்கும் காலத்தின் வருடத்தை குறித்து கொண்டு அந்த வருடத்தில் இத்தகைய அசம்பாவிதத்தை அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா என்பதை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் இக்கிரக சேர்க்கையின் கொடுமை என்னவென்று தெளிவாக தெரியும் 

குருசண்டாள யோகம் என்பது இத்தகைய கீழ்மை நிலையை குறிப்பது ஆகுமே தவிர ஒட்டு மொத்தமாக நாத்திகர் அனைவரையும் இந்த யோகம் உடையவர்கள் என்று சொல்ல முடியாது காரணம் குருசண்டாள யோகம் கொண்டவர்கள் கடவுளை மட்டுமல்ல தனிமனித ஒழுக்கத்தையும் நம்பாதவர்கள் ஆகும் பல நாத்திகர்கள் கடவுளை புறக்கணித்தாலும் தனிமனித ஒழுக்கத்தை புறக்கணிக்காமல் நேர்மையுடன் வாழ்கிறார்கள் அப்படி பலரையும் நான் பார்த்திருக்கிறேன் 

பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை நாத்திகர்கள் என்று நாம் அழைக்கிறோம் அப்படி அழைப்பது முற்றிலும் சரி என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை நாத்திகம் என்ற வார்த்தை எதுவுமே இல்லை என்ற பொருள் படும் அதாவது நம்பிக்கை தன்னம்பிக்கை எதிர்பார்ப்பு இப்படி எதுவுமே இல்லை என்று சொல்வதுதான் முழுமையான நாத்திகம் ஆகும் தன்மீதும் தனக்கு வழ்க்காட்டும் எதோ ஒரு தலைவரின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் எவரையும் நாத்திக வாதிகள் என்று சொல்லிவிட முடியாது அவர்கள் அனைவருமே குருசண்டாள யோகம் உடையவர்கள் என்று கூறவும் ஜாதக ரீதியில் ஆதாரம் இல்லை.


+ comments + 5 comments

தெளிவான பதில்,

இப்படி உள்ளவர்களுக்கு பரிகாரம் போன்று எதாவது செய்தால், கடவுள் நம்பிக்கை வருமா ?

அல்லது எதாவது தனது சொந்த அனுபவம் மூலம் தானாக கடவுள் மீது நம்பிக்கை வருமா ?

இல்லை வராமல் இறுதி வரைக்கும் அப்படி தான் இருப்பார்களா?

இதற்கும் பதில் தரவேண்டும் குருஜி...

ஏன் இதை கேட்கிறேன் என்றால் ..

(என் நண்பன் ஒருவன் இருக்கிறான், அவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, நீங்கள் மேலை கூறிய அனைத்து குணமும் அவனிடம் உண்டு,

சில நேரம் கடவுளை பற்றியும் , என் அனுபவத்தில் நடந்த அருபுததையும் கூறுவேன், அப்போது அனைத்தையும் கேட்டுக்கொண்டு , சரி ஒத்துகிறேன் கடவுள் இருக்கார் அப்படினு சொலுவான் ஆனா நன் கும்புடமாட்டேன், அப்படினு சொலிட்டு போய்டுவான்.
சரி நீ ஒத்துகிட்டியை அதுவே பெரிய விஷயம்னு மனதில் நினைத்துகொண்டேன்.

இந்த விஷயம் நடந்த இரண்டாவது நாளை மீண்டும் வேதாளம் முருங்கமரம் ஏறியது போல பழையபடி வாதாட ஆரம்பிச்சிடுவான். )

அதனால் எனது இந்த கேள்விக்கும் பதில் கூற வேண்டும் குருஜி...

என் ஜாதகத்தில் குரு, ராகு, சனி 7 வது இடத்தில் உள்ளது. எனது ராசி ரிஷபம், லக்கனம் கும்பம் விவாகரத்து ஆனவன். பிறந்த நாள் 09 / 10 / 1979 நேராம் 3 : 30 pm இடம் சங்ககிரி, தமிழ்நாடு. தற்போது கணினி பொறி வல்லுனனாக வேலை பார்த்து வருகிறான். வேலை இழக்கும் நிலைக்கு தள்ளபடும் நிலை உள்ளது. என் நிலை மாற தங்களுடை அறிஉரை என்ன என்பதை தாயூசெய்து தெரிவிக்க வேண்டுறான்

-விமலாதித்தன்

kuru mangala yogam enral enna

Please remove my question if not ready to answer
-vimalathithan

Please


Next Post Next Post Home
 
Back to Top