( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தரித்திர யோகம் என்றால் என்ன...?


  • ராஜ யோகம் கஜகேசரி யோகம் பர்வதயோகம் என்று பலவிதமான யோகங்கள் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்கிறார்கள் அவர்களே தரித்திர யோகம் என்று ஒரு யோகம் இருப்பதாகவும் சொல்கிறார்கள் தரித்திர யோகம் என்றால் என்ன என்பதை தயவு செய்து விளக்கவும் 

லஷ்மிநாராயணன்,கனடா  ரித்திரம் என்ற வார்த்தையை கேட்டவுடன் அது முழுமையான வறுமையை குறிக்கும் சொல் என்று நமக்கு தெரியும் மனிதனாக பிறந்தவன் எவனுமே தரித்திரத்தை விரும்பமாட்டான் காரணம் பசியோடும் பட்டினியோடும் வாழுகின்ற வாழ்க்கை யாருக்கும் பிடிப்பதில்லை ஒரு முழ கோவணத்துக்கு கூட வழி இல்லாதவன் தரித்திரன் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் ஜோதிட சாஸ்திரம் தரித்திரத்தை அந்த நோக்கில் பார்க்கவில்லை 

பொதுவாக ஜென்ம லக்கினம் மகரம் அல்லது கும்பமாக இருந்து அதில் சந்திரன் இருந்தால் அதற்கு பதினோராம் இடத்தில் குரு நின்றால் அந்த ஜாதகம் தரித்திர யோகா ஜாதகம் என்றும் கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பதினோராம் இடத்தில் குருவும் லக்கினத்திலேயே சனி இருந்தாலும் அதுவும் தரித்திர யோக ஜாதகம் என்று அழைக்கப்படுகிறது 

இப்படி பட்ட ஜாதக அமைப்புகளை எனது அனுபவத்தில் பலருக்கு இருக்க பார்த்திருக்கிறேன் அனால் அவர்களில் யாரும் வறுமை பிடியில் இருக்க வில்லை மாறாக நல்ல வசதிகளோடு இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள் உதாரணமாக நாற்பது ஏக்கர் நிலமும் பருத்தி வியாபாரமும் செய்கின்ற ஒருவரின் ஜாதகத்தில் இந்த தரித்திர யோகம் இருப்பதை கண்டு வியந்து இருக்கிறேன் 

இதன் அடிப்படையில் தரித்திர யோகம் என்று ஜாதக நூல்கள் சொல்வதற்கும் வறுமைக்கும் சம்மந்தம் இல்லை என்ற முடிவுக்கு நான் வந்த போது வேறொரு உண்மை தெளிவாக தெரிந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது 

நான் பார்த்த தரித்திர யோக ஜாதகர்கள் அனைவரும் ஒரு பொதுவான குணாம்சத்தில் இருப்பதை என்னால் அறிய முடிந்தது அதாவது தன்னிடம் எவ்வளவு சொத்து பத்துக்கள் இருந்தாலும் அவற்றால் அவர்கள் திருப்தி அடையவில்லை தன்னிடம் இருப்பது போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற ஆசை நிரம்பியவர்களாக அவர்களை கண்டிருக்கிறேன் எவ்வளவு இருந்தாலும் அவ்வளவும் போதாது மேலும் வேண்டும் என்று ஆசைபடுபவன் ஒருநாளும் சந்தோசமாக வாழமாட்டான் உண்மையில் அவன்தான் தரித்திரன் ஆவான் இந்த உண்மையை தான் ஜோதிட நூல்கள் தரித்திர யோகம் என்ற பெயரில் அழைப்பதை புரிந்து கொண்டேன் 

இது தவிர கேமுத்திர யோகம் என்று ஒரு யோகம் இருக்கிறது அது சந்திரனுக்கு இரண்டு மற்றும் பன்னிரெண்டில் நற்கோள்கள் இல்லாமல் இருக்க அல்லது கேந்திரம் அமர்ந்த சந்திரனுக்கு இருபுறமும் உள்ள கிரகங்கள் நட்புடன் அமையாது இருக்க உள்ள ஜாதகத்தை கேமுத்திர யோக ஜாதகம் என்று சொல்கிறார்கள் 

இந்த கேமுத்திர யோகம் பொருந்திய ஜாதகர்கள் பிச்சைகாரர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது இது உண்மையா பொய்யா என்பதை நான் இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை காரணாம் இதுவரை நான் எந்த பிச்சைகாரரின் ஜாதகத்தையும் பார்த்தது கிடையாது அப்படி பார்த்த பிறகு தான் இதை பற்றி தெளிவான முடிவுக்கு வர இயலும் ஆனாலும் இந்த கேமுத்திர யோக ஜாதக அமைப்பு பல தேசாந்திரி சன்னியாசிகளிடம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

+ comments + 1 comments

Anonymous
23:21

வணக்கம் அய்யா,

ஒரு ஜோதிடர் எனக்கு ஜாதகத்தில் இந்து லக்னம் உள்ளதாக கூறிகிறார், கொஞ்சம் இந்து லக்னம் என்ன என்று விளக்க முடியுமா? இது ராஜ யோகத்தை விட மேலானதா?

நன்றி,
தணிகை


Next Post Next Post Home
 
Back to Top