Store
  Store
  Store
  Store
  Store
  Store

தகப்பனை பகையாக்கும் ஜாதகம் எது ?


  •      யா நான் என் பெற்றோருக்கு மூன்றாவது மகன் நான் என் தாயின் கருவில் இருக்கும் போது இந்த குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு தொழில் வளர்ச்சி இருக்காது என்று யாரோ ஒரு ஜோதிடர் சொல்லியிருக்கிறார் அதனால் கருவை கலைத்துவிடும் படி என் தகப்பனார் கேட்டும் தாய் சம்மதம் கொடுக்க வில்லை என்பதனால் நான் பிறந்து விட்டேன் ஆனாலும் என் தந்தையார் நான் பிறந்தது முதல் என்னை வெறுத்து ஒதுக்குகிறார் ஜோதிடர் சொன்னப்படி அவரின் தொழில்வளர்ச்சி ஒன்றும் பாதிப்படைய வில்லை என்றாலும் என்னை அவர் வெறுப்பதை நிறுத்தவில்லை ஒரு கட்டத்தில் அவர் மீது எனக்கு அளவிட முடியாத கோபமே வருகிறது பெற்ற மகனை காரணமே இல்லாமல் வெறுக்கும் இவர் ஒரு மனிதரா என்று அடிக்கடி தோன்றுகிறது இருந்தாலும் அவர் என் அப்பா என் பிறப்பிற்கு அவரே காரணம் என்னை வெறுத்து ஒதுக்கினாலும் தூக்கி எறிந்தாலும் அவரை நான் வெறுக்க கூடாது மரியாதை குறைவாக நடத்தக்கூடாது என்றும் தோன்றுகிறது இருந்தாலும் ஒரே ஒரு ஆசை எனக்குள் இருக்கிறது என் தகப்பனாரின் தள்ளாத பருவத்திலாவது நான் அவரை பாதுகாக்க வேண்டும் என் அருமை அவருக்கு தெரிய வேண்டும் நல்ல மகனை தேவையில்லாமல் வெறுத்தோமே என்று நினைக்க வேண்டும் அது நடக்குமா என் அப்பாவின் ஜாதகத்தையும் என் ஜாதகத்தையும் இணைத்துள்ளேன் தயவு செய்து பதில் தர வேண்டுகிறேன் 
கார்த்திக் சென்னை 



   ன்பு சகோதரரே உங்களது மனதின் பாரம் எனக்கு புரிகிறது இந்த உலகில் தாய்பாசம் தான் பெரியதாக பேசப்படுகிறதே தவிர தகப்பனின் பாசம் அவ்வளவாக பேசப்படுவது இல்லை இருந்தாலும் தாய்பாசத்தை விட தகப்பனின் பாசம் எந்த அளவும் குறைவுடையது இல்லை தந்தை இல்லாத சோகமும் வலியும் அனுபவபட்டவர்களுக்கே தெரியும் ஊரில் திருவிழா நடக்கும் போது தகப்பனின் தோள்மீது அமர்ந்து விழா கொண்டாட்டத்தை ஒரு குழந்தை வேடிக்கை பார்க்கும் போது அந்த தோள் இல்லாத கிடைக்காத குழந்தையின் ஏக்கமும் கண்ணீரும் எந்த எழுத்துக்களாலும் எழுத முடியாதது ஆகும் 

ஒரு தாய் தன்குழந்தை கொலைகாரனாக நின்றால் கூட வெறுக்க மாட்டாள் தகப்பனும் அப்படிதான் உங்கள் தந்தை உங்களை வெறுப்பது போல் நடந்து கொள்கிறாரே தவிர அவர் மனதிற்குள் உங்கள் மீது துவேசமும் வெறுப்பும் நிச்சயம் வைத்திருக்க மாட்டார் நான் ஒருவனை தவறு செய்யாத போது தண்டிக்க நினைத்தால் அவனை பார்க்கும் போதெல்லாம் என்மீதே எனக்கு கோபம் வரும் அப்படி பட்ட கோபம் தான் உங்கள் தந்தையாருக்கும் இருக்கிறது அதை அவரால் அடையாளம் காண முடியவில்லையே தவிர வேறு எந்த குற்றமும் அவரிடம் இல்லை 

பொதுவாக ஜாதக அடிப்படையில் பார்க்கும் போது ஒரு குழந்தையின் பிறப்பு நேரத்தில் சூரியன் சனி கேது ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே வீட்டில் இருந்தால் தகப்பனுக்கும் குழந்தைக்கும் கருத்து வேற்றுமை ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது மேலும் அடுத்தடுத்த ராசிகளில் இந்த கிரகங்கள் வரிசையாக அமர்திருந்தாலும் இந்த நிலைமை தான் ஏற்படும் அதே போல சூரியன் சனி கேது ஆகிய மூன்றும் ஒன்று ஐந்து ஒன்பது ஆகிய இடங்களில் இருந்தாலும் கருத்து வேற்றுமையை தடுத்து நிறுத்த இயலாது துரதிஷ்ட வசமாக உங்கள் ஜாதகத்தில் நான் குறிப்பிட்ட மூன்று கிரகங்களும் ஒரே வீட்டில் இருக்கிறது 

உங்கள் தந்தையின் ஜாதகத்திலோ லக்கினத்திற்கு இரண்டாவது இடத்தில் கேது அமர்திருக்கிறது ஆக உங்கள் இருவரின் ஜாதகமும் எதாவது ஒரு வகையில் பிரிவினை ஏற்படுவதை காட்டுகிறதே தவிர ஒற்றுமைக்கான வழியை காணவில்லை எனவே உங்கள் இருவரின் உறவு நிலையிலும் தற்போது இருக்கும் சூழலே தொடர்ந்து இருக்கும் என்று சொல்லவேண்டிய நிலை உள்ளது '

சிறியவர்கள் தவறு செய்தால் பெரியவர்கள் மன்னிக்க வேண்டும் என்று சொல்வார்கள் என்னை கேட்டால் பெரியவர்கள் தவறு செய்தாலும் சிறியவர்கள் அதை மறக்க வேண்டும் என்று சொல்வேன் உங்கள் தந்தை வயதானவர் இனி அவரின் செயற்பாடுகளை மாற்றுவது என்பது மிகவும் கடினம் நீங்கள் பச்சை மூங்கிலை போன்றவர் வளைந்து கொடுப்பதனால் ஒடிந்து போக மாட்டீர்கள் எனவே எந்த நிலையிலும் தகப்பன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்து கொள்ளாதிர்கள் இன்று நீங்கள் உங்கள் தந்தையை வெறுத்தால் நாளை உங்கள் மகன் உங்களை வெறுப்பான் இதை மறக்காதீர்கள் 

மேலும் உங்கள் தந்தையின் ஜாதகம் மிகவும் வலுவாக உள்ளது அவர் தனது கடேசி மூச்சி வரை சொந்த காலில் தான் நிற்பார் என்று ஜாதகம் சொல்கிறது எனவே அவர் தள்ளாத வயதில் நம்மிடம் வரவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது நடக்காது அதனால் அவர் விரும்புகிறாரோ இல்லையோ நீங்கள் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் தட்டாமால் செய்து வாருங்கள் தனது மனதிற்குள் மறைந்து கிடக்கும் பாச உணர்வை என்றாவது அவர் உங்களிடம் வெளிப்படுத்துவார் அதற்காக கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள் கிரகங்கள் தருகின்ற பலன்களை விட கடவுளின் அருள் சக்தி வாய்ந்தது அதை மறக்காதீர்கள்.


Contact Form

Name

Email *

Message *