Store
  Store
  Store
  Store
  Store
  Store

தாய்மாமன் வாரிசாகும் ஜாதகம்
   யா வணக்கம் நான் ஐந்து வயதில் பெற்றோர்களை இழந்து விட்டேன் என் தாய்மாமன் பராமரிப்பில் தான் வளர்ந்தேன் படித்தேன் வேலையிலும் அமர்ந்தேன் என் மாமா காலமாகும் போது தனது வீட்டையும் சொத்துக்களையும் என் பெயருக்கு எழுதி வைத்துவிட்டார் அதற்கு என் அத்தையம்மாவும் சம்மதித்தார்கள் இப்போது அவர்களும் காலமாகி விட்டார்கள் அவர்களுக்கு குழந்தை கிடையாது என்பதனால் நானே கடேசி காரியங்களையும் செய்தேன்

இப்போது என் அத்தையம்மாவின் சகோதிரியின் மகன் இந்த சொத்துக்கள் தனக்கு வேண்டும் என்று வழக்கு போட்டுள்ளார் இந்த வழக்கு என் பக்கம் சாதகமாக முடியுமா அல்லது அவர் பக்கம் வெல்லுமா என்பதை எனக்கு விளக்கவும் காரணம் அவர் பக்கம் தான் ஜெயிக்கும் என்றால் அதை விட்டு கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன் வீணாக நீதிமன்றம் அலைய எனக்கு விருப்பம் இல்லை 
சுகுமார்,சின்னசேலம்    ங்கள் தாய்மாமா சொத்துக்களை உங்கள் பெயரில் எழுதி வைத்திருக்கிறார் எனும் போது சட்டப்படி அந்த சொத்து உங்களுக்கு உரியதாகிறது மாமான் மாமி இருவருக்கும் இறுதி கிரிகைகள் செய்தது நீங்கள் தான் எனும் போது தர்மப்படியும் நீங்களே வாரிசு ஆகுவீர்கள்

மேலும் உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்து அதிபதி மூன்றாம் அதிபதியை பார்க்கிறார் எனவே மாமன் சொத்து உங்களுக்கே கிடைக்கும் என்று ஜாதக அலங்கார நூலும் பலன் சொல்கிறது எனவே தைரியமாக இருங்கள் அவர் வீம்புக்காக நீதிமன்ற படிக்கட்டை ஏறினாலும் வேறு சில காரணக்களுக்காக உங்களிடம் சமாதானத்திற்கு வருவார் சிக்கல் இல்லாமல் சொத்துவிவகாரம் தீரும் கவலை வேண்டாம்Contact Form

Name

Email *

Message *