Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனசாட்சி படி சொல்வதென்றால்...


   காலம் மிகவும் கெட்டு போய்விட்டது என்று பெரியவர்கள் மட்டுமல்ல நடுத்தர வயதினர்கள் கூட பேசுகிறார்கள் சினிமா இன்டர்நெட் செல்போன் போன்றவைகள் மக்களை குறிப்பாக இளைஞனர்களை மிகவும் கெடுத்து விட்டது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் இந்த குற்ற சாட்டில் நிஜம் இருக்கிறதா?

எனக்கு தெரிந்து வெகுகாலமாகவே காலம் மாறி போச்சி கெட்டு போச்சி என்ற பேச்சுகள் அடிக்கடி பேசப்படுவதை கேட்டுக்கொண்டே வருகிறேன் என் தாத்தா எனது தகப்பனாரை பார்த்து எங்கள் காலம் மாதிரி உன் காலம் இல்லை நீங்கள் எல்லாம் மிகவும் கெட்டு போய்விட்டீர்கள் என்று சொல்வார் எனது தந்தையாரோ என்னை பார்த்து இதே வாசகத்தை சொல்வார் நானும் என் மகனை பார்த்து இதை தான் சொல்கிறேன் அவன் அவன் பிள்ளையை பார்த்து இப்படி தான் சொல்வான் என்று நினைக்கிறேன் ஆக இந்த கருத்துகளை கூட்டி கழித்து பார்க்கும் போது காலம் என்பது எப்போது நன்றாக இருந்தது என்றே தெரியவில்லை 

ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் அதே செயலை செய்யுமானால் அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை எனக்கிருந்த பக்குவம் என் பிள்ளைக்கு கிடையாது நான் காதலித்தாலும் கூட கட்டுகோப்பாக எல்லை மீறாமல் நல்லது கெட்டது அறிந்து காதலித்தேன் அந்த சாமார்த்தியமும் புத்திசாலி தனமும் மற்றவர்க்கு அவ்வளவு சீக்கிரம் வராது என்று எல்லோருமே நினைக்கிறார்கள் இந்த நினைப்பிற்கு மூல காரணத்தை தேடி போனோமானால் நான் செய்வது சரி என்னால் மட்டும் தான் சரியான செயலை செய்ய முடியும் மற்றவர்களால் இயலாது என்ற மனோபாவமே அடிப்படையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் 

தனது மட்டுமே சரி என்ற எண்ணம் இருப்பதனால் தான் மனிதன் கடந்த காலம் நன்றாக இருந்தது நிகழ் காலம் நன்றாக இல்லை என்று நினைக்கிறான் அவன் காலத்தில் நடந்த தவறுகளையும் ஒழுங்கீனங்களையும் வெகு சுலபமாக மறந்து போய் விடுகிறான் அகவே காலம் என்பது எப்போதும் கெட வில்லை இனியும் கெடாது என்ற பதிலை சொல்ல நான் விரும்புகிறேன் ஆனாலும் எனக்கு முன்னால் நடக்கின்ற சில சம்பவங்களை பார்க்கும் போது அப்படி சொல்ல மனது வரவில்லை 

கடந்த சில நாட்களாக நான் எனது பூர்விக கிராமத்தில் இருக்கிறேன் இங்கே ஐந்து நாட்களுக்கு முன்னால் ஒரு சம்பவம் நடந்தது இரவு எட்டு மணி இருக்கும் மினிபஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விட்டதாக சொன்னார்கள் ஒன்றிரண்டு பேருக்கு காயம் விபத்து எப்படி நடந்தது என்று கேட்டேன் அதற்கு மக்கள் தந்த பதில் அதிர்ச்சி அடைய வைத்து விட்டது 

மினிபஸ் ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் இரண்டு பெண்கள் இருந்தார்களாம் இருவரும் ஓட்டுனரிடம் சிரித்து சிரித்து பேசினார்களாம் அவர்கள் பேச்சில் காமடியை விட காம நெடி அதிகமாக வீசியதாம் ஒரு கட்டத்தில் ஓட்டுனர் மீது தலையில் வைத்திருந்த பூவை எடுத்து வீசி விளையாடினார்களாம் இவர்கள் வீச ஓட்டுனர் பதிலுக்கு எடுத்து வீச ஒரு காதல் நாடகமே ஓடும் பேருந்துக்குள் நடந்திருக்கிறது இதனால் சாலையை பார்க்க வேண்டிய ஓட்டுனர் சேலையை பார்த்ததால் பள்ளத்தில் வண்டியை விட்டு விட்டார் வண்டியும் ஒரு பெரிய கல்லின் மீது மோதி நின்றதனால் உயிர் சேதாரங்களை ஏற்படுத்தாமல் விபத்து காயங்களோடு போய்விட்டது 

இதில் சோகம் என்வென்றால் ஓட்டுனர் தனது காதல் விளையாட்டை மற்ற பயணிகளும் கவனித்து விட்டதனால் காப்பாற்ற வருகின்ற கிராமத்து மக்களிடம் தன்னை பற்றிய புகாரை சொல்லிவிடுவார்கள் ஆத்திரம் கொள்ளுகின்ற மக்கள் தன்னை அடித்து உதைத்து விடுவார்கள் என்ற பயத்தில் பக்கத்தில் இருந்த வாழை தோப்பிற்குள் புகுந்து ஓடியிருக்கிறார் இருட்டில் சரியான வழி தெரியாமல் தரையோடு தரையாக இருந்த ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்து மண்டையில் அடிபட்டு இறந்து போய்விட்டார் இரண்டு நாட்கள் தேடிய பிறகு தான் கிணற்றில் மிதந்த பிணத்தை கண்டெடுத்தார்கள் 

இப்போது சொல்லுங்கள் காதல் என்பதும் காமம் என்பதும் ஒளிவு மறைவாக இருந்த நாட்டில் பகிரங்கமாக வரம்பு மீறல்கள் கிராமம் வரையிலும் பரவி விட்டதை பார்த்த பிறகும் காலம் கெடவில்லை எப்போதும் போலத்தான் இருக்கிறது என்ற பதிலை எப்படி எழுதுவது எழுதவும் அதை உண்மை என்று ஒத்துக்கொள்ளவும் மனசாட்சி மறுக்கிறது மனசாட்சி படி சொல்லவேண்டுமென்றால் காலம் கெட்டு போச்சி கலி முத்தி போச்சி அவ்வளவு தான்.


Contact Form

Name

Email *

Message *