( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மூட்டையை தூக்கி அப்பால போடு !


ணக்கம் அய்யா ,

உங்கள் மீது பெரு மதிப்பும் மரியாதையும் உள்ளவன் நான் . உங்கள் பதிவுகள் மிக அருமை . உங்கள் வாழ்க்கையும் நீங்கள் சொல்லும் தத்துவார்த்த கருத்துகளும் அனைவருக்கும் நல்ல வழிகாட்டி என்பது என் கருத்து . உங்கள் ஆன்மீக சேவை என்றும் தேவை .

அய்யா , வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறேன் . எனக்கு எப்போது வேலை கிடைக்கும் ?

என்னை காதலித்தவள் என்னை ஏமாற்றி சென்று விட்டாள் . மிகுந்த மன துயரத்தில் இருந்த எனக்கு உங்கள் பதிவுகள் எனக்கு ஆறுதலை கொடுத்தன . ( குறிப்பாக அந்த " காதலிகாதவள் கஷ்டபடுவாள் " பதிவு ) ... இப்போது தான் கொஞ்சம் மீண்டு வருகிறேன் .

வேலையும் கிடைக்காமல் , விரும்பிய பொண்ணும் கிடைக்காமல் அவதிப்படும் எனக்கு , எப்போது வேலை கிடைக்கும் . எனக்கு எப்போது திருமணம் நடக்கும் ? ... என் திருமண வாழ்க்கை சந்தோசமாக அமையுமா ?

தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ...

பெயர் ஊர் வெளியிடவேண்டாம் . நன்றி


    துயரங்கள் இல்லாத வாழ்க்கை என்பதே பூமியில் கிடையாது அதே நேரம் துயரங்கள் மட்டுமே வாழ்க்கை என்பதும் அல்ல இருளும் ஒளியும் இரவும் பகலும் இருப்பது போல வாழ்வில் இன்ப துன்பமும் கலந்திருப்பது தான் இயற்கை இதை பலபேர் உணர்வதில்லை தனது வாழ்க்கையில் மட்டுமே தொடர்ச்சியாக கஷ்டங்கள் வருகிறது என்று ஆயுள் காலமுழுவதும் அழுது கொண்டு திரிகிறார்கள்

அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து நிதானமாக சிந்தித்து பார்க்க வேண்டும் விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை நாம் சந்தித்திருக்கும் கஷ்டங்கள் எத்தனை இன்பங்கள் எத்தனை என்பதை தீவிரமாக ஆராயவேண்டும் அப்படி ஆராய்ந்தால் நாம் பெருவாரியான நாட்கள் சந்தோசமாக இருந்தது தெரியவரும் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் கூட நமது செயலால் ஏற்பட்டதே தவிர இறைவன் தந்தது அல்ல என்பதும் புரியவரும்

பிறக்கும் போதே யாரும் வெற்றிகளை சுமந்து கொண்டு பிறப்பதில்லை வெறும் கைகளோடு தான் பிறக்கிறோம் கோடிஸ்வரன் மகனும் தனது செயலால் பிச்சைகாரனாகிறான் கோவணாண்டி புதல்வனும் தனது செயலால் கோடிஸ்வரன் ஆகிறான் எனவே வாழ்வில் உயர்வு தாழ்வு என்பது நமது செயல்களால் மட்டுமே பலநேரங்களில் தீர்மானிக்கப்படுகிறது

நான் வெற்றி பெற்றே தீருவேன் உலகில் உள்ள இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்தே சாவேன் என்று நினைப்பவர்கள் தான் விடா முயற்சியோடு இமய சிகரங்களில் ஏறுகிறார்கள் நான் தோல்வியடைய துயரங்களை அனுபவிக்க மட்டுமே பிறந்தவன் என்று புலம்புகிற எவரும் வெற்றி பெற்றதை கண்டதில்லை

எனவே பேர் சொல்ல விரும்பாத அன்பரே உங்களுக்கு வருகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்கள் பண்பட நல்ல அனுபவத்தை பெற இறைவன் தருகின்ற பாடம் என்பதை உணர்ந்து கொண்டு நானும் ஒருநாள் வென்றே தீருவேன் அதற்காகவே பிறந்தவன் நான் என்று உறுதி கொள்ளுங்கள் வெற்றி ஒருநாள் உங்கள் வாசலை தேடி வரும்

தற்போது நீங்கள் அளவிட முடியாத மனசோர்வில் இருக்கீறீர்கள் இதை உங்களது ஜாதகம் தெளிவாக காட்டுகிறது உங்களுக்கு மட்டுமே அடுக்கடுக்கான துயரங்கள் வருகிறது என்று எண்ணுவதை கைவிடுங்கள் கடவுளே மனிதனாக பிறந்தாலும் கஷ்டங்களை அனுபவித்து தான் ஆகவேண்டும் அதை தான் நீங்களும் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அனுபவித்து வருகிறீர்கள் வருகின்ற ஜீன் மாதம் முதல் உங்கள் வாழ்வில் கசந்த காலம் மறைந்து வசந்த காலம் வரப்போகிறது அதுவரை அமைதியோடு காத்திருங்கள்

மிக முக்கியமான விஷயத்தை கவனத்தில் வையுங்கள் நீங்கள் ஒருபோதும் காதல் திருமணம் செய்து கொள்ள முடியாது எனவே அந்த எண்ணத்தை கைவிடுங்கள் வீட்டார் பார்த்து வைக்கின்ற பெண்ணே உங்கள் வாழ்வில் விளக்கேற்றுவாள் நல்ல வேலையும் அதன் மூலம் அயல்நாட்டு பயணமும் உங்களுக்கு அமையும் அப்போது திருமண வாழ்வும் கூடிவரும்

துயர மூட்டைகளை சுமந்து கொண்டு வாழ்க்கை பந்தயத்தில் ஓட நினைத்தால் வெற்றி பெற இயலாது மூட்டையை தூக்கி அப்பால போடு எந்த மலையிலும் ஏறலாம் கண்ணனை வணங்குங்கள் காலமெல்லாம் இன்பமாக வாழலாம்.

+ comments + 5 comments

மிக அருமையான பதிவு குருஜி,

இன்றைய இளைய சமுதாயத்திற்கு தேவையான ஒன்று

//துயர மூட்டைகளை சுமந்து கொண்டு வாழ்க்கை பந்தயத்தில் ஓட நினைத்தால் வெற்றி பெற இயலாது//

ஆம் அனைவருமே ஒரு வகையில் இந்த மூட்டைகளை சுமந்து கொண்டுதானிருக்கிறோம்

அதை இறக்கி வைக்க வழி இருந்தும் வழி தெரியாமல்


உங்களை போன்றோரின் ஆசி கிடைத்தால் கட்டாயம் பலரும் இறக்கிவைப்பார்கள் ஐயா...................

100 % true friend follow all

100% true follow all

Anonymous
20:33

Tanx for ur advice.......

Anonymous
20:33

Tanx for ur advice.......


Next Post Next Post Home
 
Back to Top