( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இது தான் தலையெழுத்தா?


   நான் பிறந்த நாள் முதல் எதாவது ஒரு நோய் என்னை தாக்கி தொந்தரவு கொடுத்து வருகிறது இப்போது எனக்கு இருபது வயது பூர்த்தியாகிறது ஆனாலும் இருபது வயதுக்குரிய சக்தி எனக்கில்லை இதனால் வருங்காலத்தை நினைத்து பயமாக இருக்கிறது என் ஜாதகப்படி நான் நோய் தொல்லைகளில் இருந்து விடுபடுவேனா அல்லது இது தான் என் தலையெழுத்தா?

கார்த்திகேயன்,கோபிசெட்டிபாளையம்    மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம் போன்றவைகள் இன்பம் தருவதில்லை ஒரு கையில் மதுவும் மறுகையில் மாதுவோடும் ஆடிகளிப்பதில் இன்பமில்லை பதவியும் பகட்டும் அதிகார தோரணையும் இன்பம் தருவது கிடையாது ஆரோக்கியமான உடல் நலமட்டுமே ஒரு மனிதனுக்கு புறவுலக இன்பத்தை தரவல்லது சுருக்கமாக சொல்வதென்றால் நோயில்லாத வாழ்க்கையே கடனில்லாத வாழ்க்கையாகும்

சில பேர் சொல்வார்கள் கை நிறைய பணமிருந்தால் போதும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர்த்து போராடலாம் என்று ஆனால் கோடி கோடியான பணமும் ஒரு வயிற்று வலியை குணபடுத்தாது ஆயிரம் பணம் செலவு செய்து பெரிய டாக்டர்களை வைத்து வைத்தியம் செய்து கொண்டாலும் தீராத நோய்கள் எத்தனையோ இருக்கிறது அவற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று கேட்டால் தான் ஆரோக்கிய வாழ்வில் அருமை தெரியும்

உங்கள் ஜாதகத்தில் ரோக ஸ்தானத்தில் ராகுவின் பார்வை வலுவாக உள்ளது அதனால் தான் அடுக்கடுக்கான நோய்கள் உங்களை தாக்குகிறது உங்கள் ரோகஸ்தானம் சந்திரனுக்குரிய இடமாகும் இதானால் சீதள சம்மந்தப்பட்ட நோய்களே உங்களை பெருமளவு தாக்கும் ஆனாலும் மற்ற கிரகங்கள் வலுவாக இருப்பதனால் நீங்கள் இந்த தொல்லையில் இருந்து விடுபட பல வழிகள் இருக்கிறது

அகத்தியர் நாடி படி நீங்கள் வாழுமிடம் நீர்பிடிப்பான பகுதியாக இருக்க வேண்டும் எனவே உடனடியாக உங்களது இருப்பிடத்தை மாற்றி அமையுங்கள் மேலும் வளர்பிறை நாள்களில் அதிகப்படியான மூச்சி பயிற்சியை செய்யுங்கள் இது உங்கள் உடலில் அக்னியை வளர செய்யும் மேலும் கீழாநெல்லி அருகம்புல் வேப்பிலை ஆகிய மூன்றையும் சமபங்கு எடுத்து பொடி செய்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் மாலையில் துளசி சாப்பிடுவதை வழக்கபடுத்தி கொள்ளுங்கள் குளிர்ச்சியான பதார்த்தங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் மிக முக்கியமாக மாமிசம் சாப்பிடுவதில் உங்களுக்குள்ள ஆசையை அடக்குங்கள்

முடிந்தால் சஷ்டி தோறும் அறுகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் கந்த சஷ்டி கவசத்தை தினசரி பாராயணம் செய்யுங்கள் உங்கள் நோய் படிப்படியாக இரண்டு வருடத்திற்குள் குறைந்து விடும் கவலை படாதீர்கள் இறைவன் நம்மை துன்பபடுவதற்காக மட்டுமே படைக்கவில்லை.


+ comments + 3 comments

"""" கவலை படாதீர்கள் இறைவன் நம்மை துன்பபடுவதற்காக மட்டுமே படைக்கவில்லை.""""""
எவ்வளவு அருமையான நம்பிக்கை தரும் வார்த்தை இது.இந்த ஒரு வார்த்தையிலேயே
திரு.கார்த்திகேயன் அவர்கள் பூரண நலம் பெறுவார் என்று நம்புவோமாக!!!!!!!!!

14:15

" கவலை படாதீர்கள் இறைவன் நம்மை துன்பபடுவதற்காக மட்டுமே படைக்கவில்லை.""""""
எவ்வளவு அருமையான நம்பிக்கை தரும் வார்த்தை இது.இந்த ஒரு வார்த்தையிலேயே
திரு.கார்த்திகேயன் அவர்கள் பூரண நலம் பெறுவார் என்று நம்புவோமாக!!!!!!!!!

அய்யா இப்போதுதான் ஆண்டவன் படைப்பின் அர்த்தம் புரிகிறது


Next Post Next Post Home
 
Back to Top