( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சிங்கம் புலி கடித்தால் எப்படி வலிக்கும்...?


   ன்னைக்கு ரெண்டுல ஒன்னு முடிவு செஞ்சாகனும் இந்த வீட்ல நான்னிருக்கிறதா இல்ல உங்க அம்மா இருக்கிறதான்னு தெரிஞ்சாகனும் வீடா இது ஆக்கம்கெட்ட மனுசங்க வாழுற இடத்துல இருக்கிறதவிட சுடுகாட்டுல போய் படுத்துக்கலாம் வீட்டுக்குள் நுழைந்ததும் கமாலா இப்படி பொரிந்து தள்ளினாள் வாசு எதுவும் பதில் பேசவில்லை தப்பித்தவறி எதாவது சொல்லப்போக அது சண்டையை வேறுவிதமாக திருப்பி அவன் தலை மேலேயே கல்லை தூக்கி போட்டுவிடும் இப்படி நிறைய அனுபவம் அவனுக்கு உண்டு

எதுவும் கேட்காதது போல் சட்டையை கழட்டி மாட்டினான் சொம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கொல்லைபுறம் போய் கால்களை கழுவினான் துண்டெடுத்து முகத்தை அழுத்தி துடைத்தவாறு கூடத்தில் கிடந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தான் கமலம் அவனது செய்கையால் இன்னும் சூடாகி விட்டாள் நான் பாட்டுக்கு எறுமையாகத்துறேன் செவிட்டு மனுஷனுக்கு எதுவும் ஏறமாட்டேன் என்கிறது என்தலையெழுத்து பாழாய்போன குப்பைமேட்டுல என் அப்பன் புடிச்சு தள்ளிட்டான் தெனம் தெனம் சாகம சாகுறேன் என்னை கேட்கிறதுக்கு நாதியே இல்ல இவன் காதில் விழவேண்டும் என்பதற்காகவே வேகமாக கத்தினாள் அதை கண்டும் காணாத வாசு சின்னப்பையனை கூப்பிட்டு இன்றைய பேப்பர் எடுத்துவர சொன்னான்

குழந்தை போய் பேப்பரை எடுத்து வாசுவிடம் கொடுத்ததோ என்னவோ கமலம் காளியாகிவிட்டாள் சமையல் கட்டிலிருந்து வேகமாக வந்து பேப்பரை பிடுங்கி கசக்கி தூர எறிந்தாள் ஊரே பத்தி எரியும் போது பிடில் வாசித்த கதையா இருக்கு நான் ஒருமணுஷி வேதனையா கத்துறேன் என்ன ஏதுன்னு கேட்க துப்பில்ல என்று அவன் முகத்துக்கு நேராக உறுமினாள் வாசுவுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது என்ன பெரிய விஷயம் இருக்கபோகிறது அம்மா வெற்றிலை போட்டு வாசலில் துப்பியிருப்பார் ஓரமாக துப்பினால் என்ன என்று இவள் கத்தியிருப்பாள் அதனால் அம்மாவும் பதிலுக்கு எதாவது சொல்லியிருப்பாள் இப்படிக்கு உப்புக்கு பெறாத சங்கதி தான் இருக்கும் இதை என்ன ஏதுன்னு கேட்டு ஆகப்போவது என்ன ஒன்றுமில்லை இருந்தாலும் அவள் ஆறுதலுக்காக கேட்க முடிவு செய்து கேட்டாதான் சொல்லனுமா? இன்னது நடந்தது என்று சொன்னால் கேட்காமலா போகப்போகிறேன் என்றான்

உங்களுக்கு அறிவு இருக்கிறதா? தினசரி காலையில் எழும்பி ஆபிசுக்கு போறது சாயந்தரம் வந்தால் கொட்டிகிட்டு தூங்குகிறது இத தவிர வீட்டு ஏதாவது உருப்படியான காரியம் உங்களால் பண்ண முடியுமா? ஊருல அவனவன் என்னமா வாழுறான் இங்க ஒரு புண்ணாக்கும் கிடையாது பெத்தவ சரியாய் இருந்தா தானே புள்ள சரியாயிருக்கும் ஏறுமமாட்டுல மழை பெஞ்சமாதிரி சூடு சொறன எதுவுமே உங்களுக்கு கிடையாது எப்படி தான் மனுசனா நடமாட முடியுதோ தெரியல என் தலைவிதி உங்களுக்கென்னு நான்வாச்சேன் வேற ஒருத்தியா இருந்தா இந்நேரம் நாண்டுக்கிட்டு செத்துருப்பா இல்லைன்னா உங்கள தூக்கிபோட்டு மிதித்தே கொன்னுருப்பா கமலத்தின் உறுமலில் வந்துவிழுந்த வார்த்தைகள் இது இப்போதும் வாசு செவிடன் போலவே இருந்தான்

கல்யாணம் பண்ணி பத்துவருசத்துல நாலு பிள்ளைய பெத்தது தான் மிச்சம் ஆசையா ஒரு சேலை வாங்கி தந்ததுண்டா கால் பவுனுக்கு ஒரு மூக்குத்தி பொட்டு தான் கண்டதுண்டா எங்க அப்பன் கொடுத்த பாத்திர பண்டம் இல்லைன்னா மரத்தடியில் தான் குடும்பம் நடத்தனும் பொண்டாட்டினா மனுஷியா தெரியல உங்களுக்கு மாடு மாதிரி காலையிலிருந்து இராத்தி வரைக்கும் பாடுபடுகிறேன் உங்களுக்கும் உங்க ஆத்தாவுக்கும் வடிச்சு கொட்டுற வேலைக்காரியா நான் ராத்திரி குள்ள நான் போட்டுட்டு வந்த நகை நட்டெல்லாம் திருப்பி கொடுங்க சுளையா பத்தாயிரம் ரூபாய் ரொக்கமா எங்க அப்பா தந்தாரே அதையும் எண்ணி வையுங்க நான் பிறந்த வீட்டிற்கு கிளம்பியாகனும் நீங்களுமாட்சி உங்க புள்ளகுட்டிகளுமாட்சி எக்கேடோ கெட்டு போங்க படபடவென கமலம் வார்த்தைகளை கொட்டினாள் ஆனால் இதுவரை அவள் கோபத்திற்கான காரணத்தை சொல்லவே இல்லை

இங்கே உட்கார்ந்தால் அவள் வார்த்தைகள் இன்னும் நீளும் அடுத்தவர் மனம் புண்படுமே என்று பார்க்கமாட்டாள் சுட்டுக்கொண்டே இருப்பாள் வெளியில் கிளம்பி போனால் தான் நிம்மதியாக இருக்கும் என்று வாசு சட்டையை மாட்டிகொண்டு வெளியில் வந்தான் இந்த சண்டை புதிதாக நடந்தால் வருத்தப்படலாம் சமாதானம் செய்ய எதாவது பேசலாம் இதுவாரத்திற்கு மூன்று முறை நடக்கும் வழக்கமான சடங்கு இதில் கலந்து கொள்ளாமல் இருப்பது தான் அவனுக்கு நிம்மதி

வெளிவாசலுக்கு வாசு வரவும் எங்கேயோ போயிருந்த அம்மா வரவும் சரியாக இருந்தது எண்டா வாசு வந்ததும் வராம எங்கே கிளம்பிட்ட உன்பெண்டாட்டி ஒரு காப்பி கூட தரலியா என்று கேட்டாள் அதெல்லாம் இல்ல காப்பி சாப்பிட்டேன் என்று சொல்லி அவன் சமாளிக்க முற்படும் போது அம்மா அடுத்த அஸ்திரத்தை தூக்கி அவன் மீது எறிந்தாள் அதானே பார்த்தேன் வந்ததும் காப்பி போட்டு கொடுத்து புருசங்காரன குளிர செய்து மந்திரம் போட்டிருப்பாளே நீயும் மகுடிக்கு ஆடுற பாம்பு மாதிரி தலையாட்டிட்டு கிளம்பிட்டியா என்று பாய்ந்தாள் அம்மா ஒண்ணுமில்லை நான் சும்மாதான் வெளியில் கிளம்புறேன் என்று வாசு சமாளித்தாலும் அம்மா விடுவதாக இல்லை

எண்டா உன்ன பெத்து வளர்த்து ஆளாக்க என்ன பாடுபட்டிருப்பேன் உனக்கு நோய்வந்தா நான்தாண்டா பத்தியமிருந்து காப்பாத்தினேன் உன்பெண்டாட்டி நேத்து வந்தவ அவ பேச்ச கேட்டு தலைகால் புரியாம ஆடுறியே இது நல்லாயிருக்க ஊர் உலகத்துல உன்ன போல ஆம்பிள எவன் இருக்கான் சுத்த விவரம் கெட்டவன் நீ கோயில் மாடு மாதிரி வளர்ந்திருக்கியே தவிர அறிவு உனக்கு வளரேவே இல்ல நல்ல அம்பிள பொண்டாட்டி பேச்சை கேட்டு அம்மாகாரிய தெருவுல விடுவானா? நான் பொறந்த நேரம் அப்படி உன்னப்பனும் என்ன கவனிக்கல பெத்த புள்ள நீயும் பிரயோஜனமா இல்ல நான் புளியமரத்துல தொங்குறத தவிர வேறு வழியே இல்ல என்று பீரங்கி குண்டுகளை சரமாரியாக சுட்டாள் அம்மா

அம்மா நீ பாட்டுக்கு வாய்க்கு வந்தத பேசாத உங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னே எனக்கு தெரியாது வந்ததும் வராததுமா நாய் மாதிரி அவா காத்துரா நீயுமா அப்படி இருக்கணும் என்று பாவமாக பேசினான் அமாவின் கோபம் உச்சத்திற்கு போய்விட்டது அப்படினா என்னையும் நாய்ன்னு சொல்றியா சொல்லுவேடா சொல்லுவ நாய்ன்னும் சொல்லுவ அதுக்கு மேலையும் சொல்லுவ உன் சம்பாத்தியத்துல சாப்பிடுகிறேன் பாரு எனக்கு இதுவம் வேணும் இன்னுமும் வேண்டும் என்று கண்ணை கசக்க ஆரம்பித்து விட்டாள் வாசுவுக்கு ஒன்றும் புரியவில்லை தலையில் கைவைத்து கொண்டு திண்ணையில் உட்கார்ந்து விட்டான் சேலை தலைப்பால் கண்களை துடைத்து கொண்ட அம்மா வீட்டிற்குள் போய்விட்டாள்

வாசுவுக்கு சங்கடமாக இருந்தது என்ன வாழ்க்கை இது வாலும் புரியாமல் தலையும் தெரியாமல் இரண்டு பேரும் சேர்ந்து பாடாய் படுத்துகிறார்களே சொல்லாமல் கொள்ளாமல் எங்காயாது ஓடிவிடலாமா ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா ஒருபிடி சோறு தின்னாலும் நிம்மத்யாக தின்னனும் இவர்கள் இருவருக்கும் என்ன குறைவைத்தேன் சம்பாதிக்கும் பணத்தில் காலணா கூட எடுத்தது கிடையாது அப்படியே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறேன் வாரத்துக்கு ஒரு புடவையும் வருசத்திற்கு ஒரு நகையுமென்று நன்றாகத்தானே இருக்கிறார்கள் பிறகு எதற்க்காக என்னை இவர்கள் இப்படி கொத்தி விரட்டுகிறார்கள் என்று சித்தித்தான் அவனுக்கு அழுகையாக வந்தது எங்காவது தனிமையில் போய் அழவேண்டும் போல் தோன்றியது

அந்த நேரம் வீட்டிற்குள் இருந்து தொலைக்காட்சி சத்தம் பெரித்பாக கேட்டது அதைவிட பெரியதாக கமலம் குரல் ஒலித்தது அத்தே அடுப்பில் காப்பி வைத்திருக்கிறேன் பால் கலந்து நீங்களும் எடுத்துகிட்டு எனக்கும் ஒரு டம்ளர் கொண்டு வருவீங்களா என்ற குரலும் அதற்கு விளம்பர நேரத்தில் காபி சாப்பிடலாம் அதுவரை பொறுமையாக இரு என்று அம்மாவின் பதிலும் வாசலுக்கு கேட்டது சரி இனி வீட்டில் புயல் சற்று தணியும் என்ற எண்ணத்தில் திண்ணையை விட்டு வாசு எழுந்திருக்க முயற்சித்தான் அந்த நேரம் கடைக்குட்டி மகன் வந்து அவன் மடியில் உட்கார்ந்து கொண்டு அப்பா சிங்கமும் புலியும் மானை கடிச்சா மானுக்கு எப்படி வலிக்கும் என்று கேட்டான் அதற்கு வாசு நீ பெரியவனாகி கல்யாணம் கட்டின பிறகு அந்த வலி எப்படி இருக்கும்னு உனக்கே தெரியும் அதுவரை பொறுமையாக இரு என்று பதில் சொன்னான்.


+ comments + 1 comments

ஹா ஹா அருமை,
இயல்பாக அனைவரின் வீட்டில் நடக்கும் விஷயம் அழகாகவும் , இறுதியில் நகைசுவையாகவும் இருந்தது.


Next Post Next Post Home
 
Back to Top