Store
  Store
  Store
  Store
  Store
  Store

பானை பிடிப்பவள் பாக்கியசாலி !


   நான் சிறிய வயதில் மருத்துவ படிப்பு படிக்க ஆசைப்பட்டேன் அப்பா இல்லை அம்மாவுக்கு பிள்ளைகளுக்கு சோறு போடுவதற்கே வசதி போதாது இதில் நான் மருத்துவராவது எப்படி விரும்பியது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்ததை விரும்புவோம் என்ற கோட்பாட்டின் படி அரசு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து முதுகலை பட்டம் பெற்றேன் அரசாங்க வேலையாவது கிடைக்குமா என்று விரும்பினேன் அதற்கும் கப்பம் கட்ட கையில் பணமில்லாமல் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தேன்

வாங்குயற சம்பளம் கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கிறது சில நேரம் அதற்கு கூட தட்டுபாடு வந்துவிடுகிறது மாலைநேரத்தில் மாணவர்களுக்கு தனியாக பாடம் எடுப்பதாலும் வேறுசில சிறிய வேலைகளை இழுத்து போட்டு செய்வதாலும் வருவாய் பசியில்லாமல் வாழவும் நல்ல துணிமணி உடுத்தும் அளவுக்கும் இருக்கிறது இப்போது எனக்கு திருமணம் செய்து வைக்க அம்மா விரும்புகிறார்கள் இந்த வருவாய்க்கு யாரவது பெண் தருவார்களா? அப்படியே தந்தாலும் நல்ல முறையில் குடும்பம் நடத்த முடியுமா? என்பது தெரியவில்லை

பானைபிடித்தவள் பாக்கியசாலி என்று ஒரு பழமொழி இருப்பது உங்களுக்கு தெரியும் எனக்கு அற்ப ஆசை நான் தான் அதிஷ்டம் இல்லாதவனாக நினைத்தது எதையும் பெறமுடியாதவனாக போய்விட்டேன் எனக்கு வரக்கூடிய மனைவியும் துரதிஷ்ட சாலியாக இருக்க கூடாது நல்ல யோகமுள்ள பெண்ணாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன் மனைவின் மூலம் யோகம் வருமா? என்று கேட்கிறானே இவனை போல சின்னபுத்தி உடையவன் யாருமே இல்லை என்று நீங்கள் நினைக்கலாம் ஆனாலும் நான் லட்சியங்கள் நிறைந்த அசாதாரண மனிதன் அல்ல ஒரு சராசரி மனித ஜென்மம் நான் என் ஆசை இது இந்த ஆசை நிறைவேறுமா? நிறைவேறாதா? என்று தெரியவில்லை

நிறைவேறாது என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாம் உங்களுக்கு வருகின்ற எத்தனையோ உதவாக்கரை மின்னஞ்சலில் இதுவும் ஒன்று என்று ஒதுக்கி விடுங்கள் நீங்கள் ஒரு வாரத்தில் பதில் தரவில்லை என்றால் அதை நான் புரிந்து கொள்வேன் ஒரு வேளை எனக்கு அந்த வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக பதில் தாருங்கள் அந்த பதிலே நான் வாழ்வில் பெரும் முதல் வரமாக எடுத்துகொள்வேன்
திருமலைவாசன்,வேலூர்



    ங்கள் பெயர் திருமலைவாசன் அதாவது உலகிலேயே பணக்கார சுவாமியின் பெயரை கொண்டவர் நீங்கள் ஆனால் அவருக்கும் உங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள் அவர் தினசரி செல்வத்தில் குளிக்கிறார் நீங்களோ செல்வத்தை தேடி தூக்கமில்லாமல் விழிக்கிறீர்கள் ஆனாலும் ஒன்று சொல்வேன் வேண்டியதை அருளும் வேங்கடவனின் பெயரை தாங்கிய எதுவும் தோற்றுப்போனதாக நான் கண்டதில்லை கேள்வி பட்டதுமில்லை ஆகவே உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று என் உள்மனது சொல்கிறது

உங்களது ஜாதகத்தை துருவி துருவி ஆராய்ந்து பார்த்தேன் அப்படி பார்த்ததின் விளைவு நீங்கள் சுத்தாமாக அடிமை உத்தியோகத்திற்கு லாயக்கில்லாத ஆள் என்பது தெரிகிறது அதாவது நீங்கள் சம்பளம் வாங்கும் நபரல்ல சம்பளம் கொடுக்கும் நபர் என்பது உங்கள் ஜாதகம் சொல்லும் பதில் இப்படி நான் சொல்வது ஆச்சரியமாக இருக்கலாம் செருப்பு போட காலே இல்லாதவனை பார்த்து நீ ஒலிம்பிக்கில் ஓடப்போகிறாய் என்று சொல்வது எப்படி கேலி மொழியோ அப்படியே இதுவும் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் நான் கூறுவது அனைத்தும் ஜோதிட சாஸ்திரப்படி நூறு சதவிகித உண்மை சக்தியம் என்றே சொல்லலாம்

முதலில் நீங்கள் உங்கள் ஆசிரியர் உத்தியோகத்தை ராஜினாமா செய்யுங்கள் தனிப்பயிற்சி வகுப்பு நடத்துவதில் அதிக கவனம் செலுத்துங்கள் மாணவர்கள் சேர்க்கையும் அதன் மூலம் வருவாயும் அதிகரிக்கும் அந்த அனுபவத்தை கொண்டு இரண்டாயிரத்தி பதினைந்தாம் ஆண்டில் புதிய பள்ளி ஒன்றை துவக்குங்கள் அது தான் மணிமேகலை தெய்வம் உங்களுக்கு தரும் அட்சய பாத்திரம் சரியாக பத்துவருடத்தில் உங்கள் கல்வி நிறுவனம் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வளரும் உங்களது வாழ்வை மாற்றும் பலரையும் வாழவைக்கும்

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் சனியை பார்க்கிறது அப்படி பார்த்தால் அமையும் வாழ்க்கை துணை யோகவதியாக இருப்பாள் என்று ஜைமினியின் ஜோதிட நூல் தெளிவாக சொல்கிறது அதனால் தைரியமாக திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்குங்கள் கல்யாணத்திற்கு பிறகு நான் சொன்னதை நடைமுறை படுத்துங்கள் உங்கள் கனவு நினைவாகும் ஆனால் எவ்வளவு உயரம் உயர்ந்தாலும் புறப்பட்ட இடத்தை மறக்காமல் உங்களை போன்ற ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுங்கள் அந்த ஆர்வம் மட்டுமே உங்களை நிரந்தரமாக உயரத்தில் வைக்கும் .


Contact Form

Name

Email *

Message *