Store
  Store
  Store
  Store
  Store
  Store

போனது போய்விட்டது இனி...


    யா எனக்கு வெகுநாட்களாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் இதுவரை அது நிறைவேறவே இல்லை வசதி குறைவு கையில் பணமில்லை என்று சொல்வது என்னை பொறுத்தவரை பொய்யாகும் காரணம் மத்தியரசு ஊழியனான நான் ஓய்வு பெரும் வரை கைநிறைய சம்பளம் வாங்கியவனாவேன் ஆனால் சம்பாதித்த பணமெல்லாம் குழந்தைகள் படிப்பு அது இதுவென்று போய்விட்டது இப்போது ஓய்வூதியம் மட்டும் ஜீவாதாரமாகும் இந்த நிலையில் என் ஆசை நிறைவேறுமா? என்பதை எனக்கு விளக்கமாக சொல்லவும்

ராஜபாண்டியன்,விருதுநகர்   நீங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக செலவு செய்தேன் என்று சொல்கிறீர்கள் ஆனால் உங்கள் ஜாதகம் நீங்கள் இதுவரை வீண் ஆடம்பர செலவுகளை செய்ததாக சொல்கிறது ஒரு மனிதன் தனது தேவைக்காக செலவு செய்வது தவறு என்று சொல்லமாட்டேன் ஆனால் அதே நேரம் மற்றவர்களின் பாராட்டுதலுக்காக வீண் கெளவரத்திற்காக செலவு செய்வது அறிவுடமையாகாது என்பது என் கருத்து

போனது போய்விட்டது இனி அதை பற்றி பேசி எந்த பயனும் இல்லை நடக்க போவதை சிந்திக்கவேண்டும் உங்களது புத்திரஸ்தானம் வலுவோடு இருக்கிறது அதனால் உங்களது ஆசைகளை உங்கள் வாரிசுகள் விரைவில் நிறைவேற்றுவார்கள் உங்களது கடேசி காலம் சொந்த வீட்டிலேயே அமையும் என்பது ஜோதிட விதி பொறுமையுடன் இருங்கள் கடவுள் நல்லது செய்வார்.


Contact Form

Name

Email *

Message *