Store
  Store
  Store
  Store
  Store
  Store

மறுமணம் செய்யலாமா?


யா எனக்கு இரண்டு குழந்தைகள் இரண்டுமே இரட்டை குழந்தைகள் என் மனைவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புற்று நோயால் மரணம் அடைந்துவிட்டாள் இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு மிகவும் கஷ்டப்படுகிறேன் வயதான எனது தாயார் தான் பக்கத்துணையாக இருக்கிறார் உறவினர்களும் நண்பர்களும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்துகிறார்கள்

எனக்கு என் மனைவியை தவிர வேறொரு பெண்ணை மனத்தால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை அவளோடு வாழ்ந்த காலம் குறைவு என்றாலும் அவள் எனக்கு தந்த அன்பு என்ற அரவணைப்பு ஆயிரம் வருடத்திற்கு நெஞ்சைவிட்டு அகலாமல் நிலைத்து நிற்க கூடியது அந்த நினைவுகளே எனக்கு போதுமென்று நினைத்து வாழ்ந்து வருகிறேன்

நான் செய்யும் வேலை ஒன்று பெரியது அல்ல காலையில் போனால் இரவு ஏழு மணிக்கு தான் வீடு திரும்ப முடியும் அதுவரை விவரம் தெரியாத குழந்தைகளை அம்மா பாசத்தோடு பார்த்து கொண்டாலும் அவர்களுக்கும் வயதாகிவிட்டது இன்னும் எத்தனை காலம் அவர்களால் பராம்பரிக்கும் படும் பாக்கியத்தை என் குழந்தைகள் பெறுவார்களோ தெரியவில்லை இந்த நிலையில் என்ன முடிவு எடுப்பது என்று எனக்கு தெரியவில்லை

வாழ்வின் பலதரத்தை பார்த்தவர் நீங்கள் திசைதெரியாத பலருக்கு வழிகாட்டியும் வருகிறீர்கள் வாழ்வின் மிக முக்கியமான காலகட்டத்தில் முடிவெடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன் தயவு செய்து தாங்கள் நல்ல வழிகாட்டும் படி பணிவோடு வேண்டுகிறேன்

சுந்தரராமன்.சேலம்


   சாம் மாநிலத்தில் காமத்தியா அம்மன் கோவில் என்ற புகழ்பெற்ற ஆலயம் உண்டு அங்கே திருமணமான இளம்தம்பதினர் ஜோடி புறாக்களை வானத்தில் பறக்கவிடுவது முக்கியமான சடங்காகும் இந்த சடங்கு ஏன் என்றால் புறாக்கள் இணைபிரியாது வாழ்வது போல தம்பதியினரும் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததுவாகும் புறாக்கள் சாதாரண பறவைகள் என்றாலும் இணைபிரியாத இல்லறத்திற்கு எப்போதுமே சின்னமாக இருந்துவருகிறது ஆண்புறா இறந்தால் பெண்புறாவும் உயிரை விட்டுவிடும் அதே நேரம் தன்னை நம்பிய குஞ்சிகள் இருந்தால் அவைகளை காப்பதற்காக ஜோடி புறாவில் ஒன்று மட்டுமே உயிர் வாழும்

மிகவும் அரிதாக மனிதர்களில் சிலரும் புறாவை போன்று இருக்கிறீர்கள் அப்படிப்பட்ட அரிதான மனிதர்களில் ஒருவரான உங்களுக்கு இறைவனின் பரிபூரணமான ஆசியும் அருளும் எப்போதும் கிடைக்கும் வீட்டில் அழகான மனைவி தனக்காக காத்திருக்கும் போது அற்ப உடல் இச்சைக்காக இன்னொரு பெண்ணை நாடும் ஆண்களும் ஒழுக்கத்தை மதிக்காமல் வாழும் பெண்களும் இக்காலத்தில் சற்று அதிகமாகவே இருக்கிறார்கள் அவர்கள் மத்தியில் மாணிக்கம் நீர்

உங்கள் ஜாதகத்தை ஒருமுறைக்கு பலமுறை அலசி ஆராய்ந்து பார்த்தேன் இரண்டாவது திருமணம் என்ற பேச்சிக்கே இடமில்லை நீங்களாக விரும்பி இன்னொரு பெண்ணை நாடி போனால் கூட அந்த உறவு உங்களுக்கு அமையாது இல்லறவாசியாக சம்சாரியாக இருந்தாலும் கூட நீங்கள் சன்யாச வாழ்வை வாழ வேண்டும் என்பது விதி

ஒரு தாய் பெற்ற பிள்ளைகளை மாற்றாந்தாய் வளர்க்கும் போது பாசத்தோடு வளர்ப்பது என்பது பலநேரங்களில் கொம்புமுளைத்த குதிரை வானத்தில் பறப்பது போலத்தான் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு மாற்றாந்தாய் பாசத்தின் வடிவாக இருப்பது உண்டு அது விதிவிலக்கு அந்த விதி விலக்கை நம்பி ஏமாந்து போன மாந்தர்கள் எத்தனையோ பேர் உண்டு அத்தகைய ஏமாற்றத்தின் பாதிப்புகளை அதிகமாக அனுமதிப்பது குழந்தைகளே தவிர தகப்பன்மார்கள் அல்ல

உங்கள் தாயாருக்கு பிறகு குழந்தையை கவனிக்க யாருமே இல்லை என்று நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை காரணம் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு உங்கள் தாயாரின் ஆயுள் உறுதி என்று என்னால் எழுதி தரமுடியும் அதன் பிறகு யார் என்று நீங்கள் கேட்கலாம் குழந்தைகளும் வளர்ந்துவிடும் உங்களது உத்தியோகமும் உயரும் குழந்தை வளர்ப்புக்கு ஏற்றவாறு நெகிழ்ந்தும் அமையும் ஆதரவு இல்லாத மக்கள் அனைவருக்கும் ஆதரவை தருபவன் பரந்தாமன் அவனது திருவடியை உறுதியுடன் பற்றுங்கள் வாழ்க்கை ஒளிமயமாக காட்சி தரும்.


Contact Form

Name

Email *

Message *