Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனநோய் தீர்க்கும் சிவன்...!


திப்பிற்குறிய ஐயா எனக்கு நான்கு பெண் குழந்தைகள் ஐந்தாவதாக ஒரு மகன் இருக்கிறான் அவனுக்கு இப்போது 25 வயது ஆகிறது கடந்த மூன்று வருடமாக மனநிலை சரியில்லாதவனாக இருக்கிறான் தனியாக பேசுவது சிரிப்பது மட்டுமல்ல சிலநேரம் பிறருக்கு தொல்லைகொடுக்கும் வண்ணமும் நடந்து கொள்கிறான் என்னால் முடிந்தவரை வைத்தியம் பார்த்து வருகிறேன் எந்த முன்னேற்றமும் இல்லை அவன் வாழ்நாள் முழுவதும் இப்படியே இருப்பானா? அல்லது குணமடைவான? என்று தெரியவில்லை அவனது எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது மிக குறைந்த வருவாயில் பெண்குழந்தைகளையும் வைத்து கொண்டு அவனுக்கும் சிகிச்சை செய்துகொண்டு வாழமுடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன் என் பிரச்சனை தீர உங்களால் வழிகாட்ட முடியுமா?

வள்ளியம்மை,மதுரை


    குழந்தையை பெற்றவர்களுக்கு தான் அவைகள் படும் துன்பத்தின் தாக்கம் முழுமையாக தெரியும் தான்பெற்ற பிள்ளைக்கு வந்த துயரம் தனக்கே வந்ததாக ஒவ்வொரு தாய்தகப்பனும் நினைப்பார்கள் நினைத்து நினைத்து நெஞ்சி வெடித்து துடிப்பார்கள் உங்கள் எழுத்து ஒவ்வொன்றிலும் தெரிகின்ற கண்ணீர் துளி இறக்கமனமில்லாத அரக்கனை கூட வாய்விட்டு அலற செய்யும்

உங்கள் மகனின் ஜாதகத்தை பார்த்தேன் அதில் நீங்கள் பயப்படுவது போல அவன் வாழ்நாள் முழுவதும் மனநோயாளியாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெளிவாக தெரிகிறது ஒரு பெண்ணின் மீது ஏற்பட்ட காதலை வெளிபடுத்த தெரியாமல் முடியாமல் தனக்குள்ளேயே வைத்து அழுத்தி கொண்டதனால் அவனுக்கு இந்த நோய் ஏற்பட்டிருக்கிறது அதற்கு முழுமுதல் காரணம் அவனது ஜாதகத்தில் சந்திரனும் புதனும் மிகவும் பாதிப்படைந்து போய் இருக்கிறார்கள்

உங்கள் மகன் ஜாதக அடிப்படையில் அவனுக்கு இந்த மே மாத முதல் நல்ல கிரகநிலை ஆரம்பமாகிறது அது முதல் அவன் பரிபூரண சுகமடைய ஆரம்பித்துவிடுவார் நீங்கள் அவனுக்கு என்ன மருந்து கொடுத்தாலும் சிகிச்சை செய்தாலும் இப்போது நான் சொல்லுகின்ற சிகிச்சையை முழு நம்பிக்கையோடு செய்யுங்கள் நல்ல பலன் கைமேல் கிடைக்கும்

திருநெல்வேலி மாவட்டத்தில் திருசெந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கடற்கரை சாலையில் உவரி என்ற அழகான ஊர் இருக்கிறது அங்கே சகல நோய்களையும் தனது அருளால் தீர்த்து வைக்கும் சிவபெருமான் சுயம்பு வடிவாக அதாவது சுயம்பு லிங்க சுவாமியாக எழுந்தருளி உள்ளார் அவர் ஆலயத்தில் உங்கள் மகனை ஒரு மண்டலகாலம் தங்கவையுங்கள் கண்டிப்பாக மிக கண்டிப்பாக நாற்பது நாட்களுக்குள் உங்கள் மகன் பூரண மனநலத்தை பெற்று சராசரி மனிதன் போல வாழ ஆரம்பிப்பான் நம்பிக்கையோடு செய்யுங்கள் நலத்தை உடனடியாக பெறுங்கள் .Contact Form

Name

Email *

Message *