Store
  Store
  Store
  Store
  Store
  Store

கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?

,


  • கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?
சுரேஷ் கோபிசெட்டிப்பாளையம்

தென்னையிளம் நீருக்குள்ளே தேங்கி நிற்கும் ஓட்டுக்குள்ளே
தேங்காயை போலிருப்பான் ஒருவன்-அவனை
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்


         ன்று மிக அழகாக கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடுவார்கள்

  அதாவது தேங்காயின் தத்துவத்தை புரிந்து கொண்டால் கடவுளை தெரிந்து கொள்ளலாம் என்பது தான் கவிஞரின் கருத்து

  தேங்காயின் மேலிருக்கும் சிக்கல் மிகுந்த நார்பகுதி சமயங்களுக்கு மத்தியில் கிடக்கும் வாத பிரதிவாதங்களை குறிப்பதாகும்

  உறுதியான சிரட்டை கடவுளை அடைய வேண்டும் என்ற நெஞ்சுறுதியை காட்டுவதாகும்

மதம் மாச்சரியங்களை கடந்து வந்தால் நெஞ்சுறுதி பிளந்து உள்ளே இருக்கும் கடவுளை காட்டும் என்பதே இதன் பொருள் நமது

இந்து மதத்தில் காரணம் இல்லாத காரியங்களே கிடையாது

தேங்காயை உடைத்து கடவுளுக்கு படைப்பது என் வெளி மனது சிரட்டையை போல் கெட்டியாக இருந்தாலும் உள்ளே இருக்கும் ஆத்மாவோ தேங்காயின் பருப்பு போல வெண்மையானது தூய்மையானது அதை நீ ஏற்று கொள் என்று சொல்வதாகவும் எடுத்து கொள்ளலாம்

 அல்லது சிரட்டையை போல் என் மனம் கெட்டிப்பட்டு கிடக்கிறது அதை பருப்பு போல தூய்மையாக்கு என்று பிரத்தனை செய்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்

 என் பாவம் தேங்காயை போல் உறுதியாக இருக்கிறது அதை உன்முன்னால் உடைத்து வைத்து விட்டேன் அதை ஏற்று தூய்மை படுத்து என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்

 அடுத்ததாக பூமிக்கு உள்ளே விளையும் பொருட்களை சாஸ்திரம் அகந்த மூலம் என்றும் மரத்தின் உச்சியில் விளையும் பொருட்களை கந்த மூலம் என்றும் அழைக்கிறது

 அதாவது அகந்த மூலப்பொருட்கள் மனிதனுக்கு தாமச குணத்தை உருவாக்கும்

 கந்த மூலப் பொருட்கள் சத்வ குணத்தை உருவாக்கும்

 தேங்காய் மர உச்சியில் உருவாகும் கந்த மூலப் பொருள் இதை கடவுள் பிரசாதமாக கொள்ளும் போது மனிதனுக்கு தேவையான சத்வ குணம் மேலோங்கும்

 இதனால் தான் இந்து மத வழிப்பாட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
 

Contact Form

Name

Email *

Message *