Store
  Store
  Store
  Store
  Store
  Store

பணக்காரரின் மகன் தான் உயரமுடியுமா...?


    குருஜி அவர்களுக்கு வணக்கம் எனக்கு மூன்று வருடத்திற்கு முன்பு ஒருமகன் பிறந்தான் அவனது ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் உச்சம் பெற்று இருக்கிறார்கள் இது மிகவும் விஷேசமான தன்மை என்று பல ஜோதிடர்கள் சொல்கிறார்கள் அவர்கள் சொல்லுகின்ற பலனை கேட்டால் எனக்கு வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறது உங்கள் மகன் அரசாளும் யோகம் பெற்றவன் செல்வச்சீமான் என்றெல்லாம் சொல்கிறார்கள்

நானோ எங்கள் ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்கிறேன் ஓரளவு படித்திருந்தாலும் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் எந்த வேலை செய்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் கிடைத்த வேலையை மனதிருப்தியோடு செய்து வருகிறேன் வாங்குகிற சம்பளம் சாப்பாட்டு செலவுக்கு தான் போதுமானது மிச்சம் பிடித்து வைக்கவும் வழி இல்லை

இந்த நிலையில் என் மகன் பெரிய பெரிய யோகங்களை பெறுவான் எனும் போது என்னால் எப்படி நம்ப முடியும் அவனை ஒரு நல்ல பள்ளிகூடத்தில் சேர்க்க கூட வசதியற்ற ஒரு தகப்பனால் அவனது நல்வாழ்வுக்கு எப்படி அஸ்திவாரம் அமைத்து தரமுடியும் ஒருவேளை இறைவன் சித்தம் என் மகன் மூலம் நான் உயரவேண்டும் என்று இருக்கலாம் அல்லவா அதை தாங்கள் தான் விளக்க வேண்டும் தயவு செய்து இந்த ஏழையின் கேள்வியையும் ஒரு பொருட்டாக மதித்து பதில் தரும்படி மன்றாடி கேட்கிறேன்

துறைசாமி,வல்லவன்கோட்டை


    றைவனின் படைப்பு மிகவும் விசித்திரமானது சில நேரங்களில் அவனது படைப்பை காணும் போது வியப்பாகவும் விந்தையாகவும் ஏன் கோபமாகவும் கூட நமக்கு இருக்கும் இத்தகைய உணர்வுகள் இறை சிருஷ்டியை பற்றி நமக்கு ஏற்படுவது நமது அறியாமை என்பது நூறு சதவிகிதம் உண்மை காரணம் நமது பக்கத்து வீட்டுக்காரனின் மன இயல்பையே அறிந்து கொள்ள துப்பில்லாத நமக்கு இறைவனின் திரு உள்ளத்தை அறிந்து கொள்ள தகுதி ஏது

இறைவன் பஞ்சிக்குள் நெருப்பை வைக்கலாம் பாறைக்குள் தண்ணீரை வைக்கலாம் இதை இதில் தான் வைக்கவேண்டும் என்று கட்டளை போடும் தகுதி நமக்கில்லை எனவே பணக்காரனின் மகனாக பிறந்தவன் தான் வாழ்க்கையில் உயரமுடியும் மற்றவர்கள் உயர முடியாது என்று நினைப்பது நிச்சயம் அறியாமையே தவிர வேறொன்றும் இல்லை

இந்தி உலகையே புரட்டி போட்ட மாக புருசர்களின் சிலருடைய வாழ்க்கையை புரட்டி பார்த்தால் கூட நமக்கு பல உண்மைகள் தெரியவரும் நல்லதோ கெட்டதோ ஏசு நாதரின் பெயரை சொல்வதற்கு இன்று உலகத்தில் ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள் வாழ்ந்து மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் முடிந்த பிறகும் ஒரு மனிதனின் பெயரை பெருமிதமாக சொல்லிக்கொள்ளும் மனித கூட்டம் இருக்கிறது என்றால் அவன் எப்பேர் பட்ட மனிதனாக இருக்கவேண்டும் அப்படி மாமனிதனாக வாழ்ந்த ஏசு நாதரின் தகப்பனார் யார் பெரிய செல்வச்சீமானா? இல்லை அரசியல் தலைவரா எதுவும் கிடையாது மிக சாதரணமான ஒரு தச்சரின் மகன் ஏசு நாதர்

அவரை விடுங்கள் இந்த நாட்டில் எத்தனையோ அரசர்கள் வாழ்ந்தார்கள் மறைந்தார்கள் அவர்கள் அனைவருக்கும் பிள்ளைகள் உண்டு அந்த பிள்ளைகளில் எதாவது ஒரு பிள்ளை கெளதம புத்தர் பெற்ற நற்பெயரை பெற்றதுண்டா? கிடையாது ஏசுவை பெற்றவரும் புத்தரை பெற்றவரும் சாதாரண மனிதர்களே ஆனால் அத்தகைய சாதாரண மனிதர்களுக்கு மகா புருஷர்களான மகன்கள் பிறக்கவில்லையா?

அதற்காக உங்கள் மகனும் ஏசுவை போல் புத்தரை போல் வருவான் என்று நான் சொல்லவில்லை உங்கள் நிலையை நினைத்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம் என்பதற்காக தான் சொல்கிறேன் குருவும் சுக்கிரனும் முறையே தேவ குருவாகவும் அசுர குருவாகவும் கருதப்படுவார்கள் ஜோதிட நியதிபடி இரண்டு குருவும் உச்சம் பெறுவது மிகவும் விஷேசமானது ஜாதக அலங்காரம் இப்படிப்பட்ட கிரகம் பொருந்திய ஜாதகர்கள் எவ்வளவு கீழ்நிலையில் இருந்தாலும் மேன்மை அடைவார்கள் என்று சொல்கிறது அதாவது ராஜாவாக இல்லை என்றாலும் ஒரு அரசனை போல் வாழ்வார்கள் குறைந்த பட்சம் ஒரு கிராம தலைவராகவாவது இருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது

நல்ல வேளை உங்கள் மகன் ஜாதகம் அவன் அரசியல் தலைவராவான் என்று சொல்லவில்லை அப்படி ஆனால் உத்தமனாக இருப்பான் என்று உறுதி சொல்ல முடியாது அல்லவா? காரணம் மற்ற கிரகங்கள் இவன் ஒழுக்கமாக மட்டுமே வாழ்வான் என்று சொல்கிறது அதனால் அரசியல்வாதியாகும் அபாயம் இல்லை உங்கள் மகனுக்கு நன்றாக படிப்புவரும் ஆனால் அதைவிட அதிகமாக அறிவு வளரும் படிப்புக்கும் அறிவுக்கும் சம்மந்தம் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம் ஆனால் இவனுக்கு இரண்டுமே பொருந்தி இருப்பது பெரிய அதிசயம்

கண்டிப்பாக உங்கள் மகன் மிக உயர்ந்த நிலைக்கு வருவான் பத்துபேருக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு உயர்வான் சொந்த தொழிலில் கொடிகட்டி பரப்பான் அதில் சந்தேகம் இல்லை அதற்காக நீங்கள் சிரம்மபட வேண்டிய அவசியம் இல்லை உங்களால் முடிந்த பள்ளியிலேயே சேருங்கள் படிக்கும் குழந்தை எந்த பள்ளியில் படித்தாலும் படிக்கும் அவனுக்கான வாய்ப்பும் வசதியும் தானாகவே வந்தமையும் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் அவனுக்கு ஊக்கம் கொடுக்கும் வண்ணம் அன்பை காட்டுவது அவன் நல்வாழ்விற்க்காக பிரத்தனை செய்வது மற்றப்படி அனைத்தையும் இறைவன் பார்த்து கொள்வான் காரணாம் நாராயணனின் செயல் நன்மையாக மட்டுமே இருக்கும் .


Contact Form

Name

Email *

Message *