Store
  Store
  Store
  Store
  Store
  Store

இரும்பு வியாபாரம் செய்யும் ஜாதகம்.


    குருஜி அவர்களுக்கு வணக்கம் என் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கமுள்ள பத்தமடை கிராமம் ஆரம்பத்தில் என் சொந்த ஊரில் ஒரு மளிகைக்கடையில் வேலை செய்தேன் சென்னை சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் வாழ்வில் முன்னேறலாம் என்று நண்பர்கள் சொன்னதனால் சென்னை வந்து ஜவுளிக்கடை மளிகை கடை நகை கடை என்று மாற்றி மாற்றி பல இடங்களில் வேலை செய்தேன்

எந்த வேலையிலும் நிரந்தரமாக என்னால் இருக்க முடியவில்லை எதோ ஒரு சூழல் என்னை மாற்றிவிட்டு கொண்டே இருந்தது படிப்பும் அதிகமில்லை வருவாயும் அதிகமில்லை என் பெற்றோர்கள் வற்புறுத்தலால் திருமணமும் செய்து கொண்டேன் குழந்தை பிறந்தால் அதற்கான செலவு செய்ய முடியாது என்பதனால் குழந்தை பேரை தள்ளிபோட்டுகொண்டே வருகிறேன்

இந்த நிலையில் என் நண்பன் ஒருவன் சொன்னதனால் சென்னையில் சிறிய அளவில் பழைய இரும்புக்கடை ஒன்றை ஆரம்பித்திருக்கிறேன் கடை முதலுக்காக மனைவியின் நகை முழுவதும் விற்றாகி விட்டது எனது பழைய நிலையை சிந்திக்கும் போது மிகவும் பயமாக இருக்கிறது பழையப்படி இந்த தொழிலையும் விட்டு விட்டு வேறு தொழிலுக்கு போகவேண்டிய நிலை வந்துவிடுமோ என்று அச்சப்படுகிறேன் அப்படி ஒரு நிலை வந்தால் என் கதி அதோகதி ஆகிவிடும்

நீங்கள் இந்த இணையதளமூலம் பல ஜோதிட கேள்வி பதில்களை விளக்கமாக சொல்லி பலருக்கு வழிகாட்டி வருவதாக என் நண்பன் மூலம் அறிந்தேன் அவன் மூலமாகவே இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறேன் எனக்கு இந்த தொழில் நிரந்தரமாக இருக்குமா? அல்லது வேறு தொழில் செய்யவேண்டி வருமா என்பதை தெரியபடுத்தவும் பல தொழில்களை செய்து பழகியதால் எந்த தொழில் செய்வது எனக்கு எது ஒத்துவரும் என்பது புரியவில்லை ஐயா அவர்கள் தயவு செய்து என் ஜாதகத்தை பார்த்து வழிகாட்டும் படி வேண்டுகிறேன்

சேர்மத்துரை,ராமாபுரம் சென்னை.


    ங்களை போலவே திருநெல்வேலி பக்கமுள்ள பலருக்கு சேர்மதுரை சேர்மராஜா சேர்மகனி என்று பெயர்கள் இருக்கிறது இதை பார்த்துவிட்டு இதிலுள்ள சேர்ம என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று பலருக்கு தெரியாமல் இது என்ன விசித்திரமான பெயர் என்று விழிக்கிறார்கள் காரணம் கேட்கிறார்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏறல் என்ற ஊரில் அருணாசலம் என்ற ஆன்மிக பெரியவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர் இறையருளை பரிபூரணமாக பெற்ற தனது அருள் சக்தியால் பலருடைய வாழ்வில் அதிசையங்களையும் அருள் மழையும் பொழிந்துள்ளார் அவருக்கு அப்போதைய ஆங்கில அரசு சேர்மன் பதவி கொடுத்து கவுரவித்ததால் சேர்மன் சாமி என்றே அவர் அழைக்கபட்டார்

அப்படி பட்ட அருளாளரின் திருபெயரை தன்பெயராக கொண்ட அன்பரே உங்கள் வாழ்வில் சேர்மன் சுவாமியின் பரிபூரண அருளாசி எப்போதும் உண்டு என்று நம்புகிறேன் இதுவரை நீங்கள் மகான்களை வழிபடும் பழக்கமில்லாதவராக இருந்தால் இன்றுமுதல் சேர்மன் சுவாமியை வணங்க ஆரம்பியுங்கள் இதுவரை உங்கள் வாழ்வில் நடைபெறாத பல அற்புதங்கள் நடப்பதை கண்குளிர காண்பீர்கள்

நீங்கள் இதுவரை பல தொழில்களை செய்திருக்கலாம் அவற்றில் உங்களுக்கு போதிய அனுபவமும் ஆற்றலும் கூட இருக்கலாம் ஆனால் அவைகள் உங்கள் ஜாதகப்படி ஒத்துவராத தொழில்களாகும் இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்து நடத்தி வரும் இரும்புக்கடை தொழில்லே உங்களுக்கு மிகவும் ஏற்றதாகும் காரணம் உங்களது தொழில் அமைப்பான பத்தாமிடத்தில் சனி ஆட்சி பெற்று இருக்கிறது அதனால் இரும்பு தொழிலே உங்களை உயர்த்தும் தொழிலாகும்

இந்த தொழில் இன்னும் ஒருவருட காலம் மிக சுமாராகவே நடைபெறும் சில நேரங்களில் மாற்று தொழில் செய்யலாமா? பழையபடியே வேலைக்கு போகலாமா? என்று தோன்றும் அளவிற்கு சில சோதனைகளும் இடர்பாடுகளும் வரக்கூடும் ஆனால் மனதை தளர விட்டு விடாதீர்கள் சோதனைகளை பொறுமையோடு சகித்து கொள்ளுங்கள் ஒருவருடத்திற்கு பிறகு மிக பிரகாசமான எதிர்காலம் உங்களுக்கு முடிசூட்டு விழா நடத்தும்

ஒரு மனிதனின் வெற்றி அடிக்கடி முடிவுகளை மாற்றிக்கொள்வதனால் தடைபடுகிறது தாமதமாகிறது தனது முயற்சியில் கடேசி நுனிவரை போராட துணிச்சல் உள்ளவருக்கே வெற்றி தேவி மனமகிழ்ந்து மாலை அணிவிக்கிறாள் வெற்றியின் ரகசியம் மிகவும் சுலபமானது அதாவது விடா முயற்சி மட்டுமே வெற்றி பெரும் ரகசியம் நீங்கள் வெற்றி வீரராக வாழ்வதற்கு எனது ஆசிர்வாதம் எப்போதும் உண்டு.Contact Form

Name

Email *

Message *