( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

உடலை தேடும் ஆவிகள்

,

 மரணம் ஏற்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவுடன் துணிகளை துவைத்து குளிக்க வேண்டும் என்று இந்து மதத்தில் வலியுறுத்தப் படுகிறது

அந்த காலத்திலிருந்து இன்று வரை இந்துக்களிடம் இந்த பழக்கம் பரவலாக இருந்து வருகிறது.

  இது நல்ல பழக்கமா அல்லது எதற்கும் உபயோகமில்லாத பழக்கமா என்பதை பார்ப்பதற்கு முன் அதிலுள்ள சில நடைமுறை கேள்விகளுக்கு பதில் தேடியாக வேண்டிய சூழல் உள்ளது.

 இறந்து போன மனிதருடைய ஆவி துக்கம் விசாரிக்க சென்றவர்களை தாக்கும் என்றும், அவர்களோடவே தொடரும் என்றும் அதனால் தான் குளிக்க சொல்லப்படுகிறது என்று பலர் சொல்கிறார்கள்.  ஒரு மரண நிகழ்விற்கு ஒருவர் மட்டும் செல்வதில்லை.  உற்றார் உறவினர் நண்பர் என்று ஏராளமான பேர்கள் செல்கிறார்கள் இவர்களை ஆவி தாக்குகிறது என்றாலும், தொடர்கிறது என்றாலும் ஒருவரை மட்டும் தான் ஆவியால் குறி வைக்க முடியும். 

வந்து போகும் எல்லோரையும் தொடர்கிறது என்பது சாத்தியமில்லாதது ஆகும்.

  அப்படி தொடரப்படும் ஒரு நபர் யார் என்று நமக்கு தெரியாது.  அதனால் கலந்து கொள்ளும் எல்லாருமே குளித்து விட வேண்டியது தான் என்றால் கூட அதிலும் ஒரு சிக்கலிருக்கிறது.

  மயானத்தில் வெட்டியான் ஒரு நாளில் பல பிணங்களை பார்க்கிறான் தொடுகிறான்.  அவன் கூட தினசரி வேலை முடிந்தவுடன் குளித்து விடுகிறான் என்று சொல்ல முடியாது.

 எனக்கு தெரிந்த பல வெட்டியான்கள் வேலை முடிந்ததும் கிடைக்கும் காசை கொண்டு போய் மது அருந்துவதில் காட்டுகின்ற வேகத்தை குளிப்பதில் காட்டுவதில்லை.


   இறந்த ஆவி மனிதனை தொடும் என்றால் வெட்டியானும் மனிதன் தானே.  அவனும் நம்மை போலவே உண்கிறான்.  உறங்குகிறான்.  பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொள்கிறான்.

  பிணங்களோடு புழங்கும் தனது தொழிலுக்காக பிரத்யோகமாக அவன் எந்த சடங்குகளையும் தினசரி செய்வது கிடையாது.

 அது அவனால் முடியாது.  அதனால் ஆவிகள் மரணம் அடைந்தவுடன் மனிதர்களை தொடரும் என்பதும், தாக்கும் என்பதும் அவ்வளவு தூரம் உண்மையானது அல்ல.

  பொதுவாக இறந்து போன ஆத்மாக்கள் தங்களது பழைய உடலுக்கு புகுந்து கொள்ளத்தான் ஆர்வம் காட்டுமே தவிர புதிய மனித உடல்களை உடனடியாக விரும்பாது.

 தனது பழைய உடல் அழிந்து போன பிறகே வேறு உடல்களை ஆத்மாக்கள் தேடுகின்றன.


   அதுவும் எல்லா ஆத்மாக்களும் அப்படி செய்கிறது என்று சொல்லி விட முடியாது.  ஆயிரத்தில் ஒன்று, இலட்சத்தில் ஒன்று என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  ஆக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு இது காரணம் அல்ல.

  ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். 

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

 இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது.  பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும்.

 அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

  இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது.  இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம்.  நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.

 அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும்.  மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும்.

 அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

  இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள்.

  நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.
+ comments + 4 comments

Anonymous
03:06

Excellent

Super Sir...as usual, a good article.

Anonymous
12:19

nalla karuththu....

It is a very useful article.
OK sir,where is the Tamil fond box.Pl provide the fond box,so as to enable us to give our comments in our mother tough Tamil.


Next Post Next Post Home
 
Back to Top