இந்து மத வரலாற்று தொடர் 22
அழகான ஆற்றாங்கரை படித்துறையை கடந்து மேலேறி வந்தால் அரசமர மேடை அந்த மேடையில் ஏகாந்தமாக அமர்ந்திருக்கும் ஒற்றை பிள்ளையார் அவரை சுற்றி பிள்ளைகள் ஊதிவிட்டு போட்ட பூவரச இலை ஊதுகுழல்கள் ஆற்றில் குளித்து விட்டு பெண்கள் மறந்து வைத்து போன மஞ்சள் கொம்புகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி மூச்சை ஆழமாக உள்யிளுத்து சிந்தனை தேரை செலுத்தி பாருங்கள் உங்களுக்குள் ஆயிரமாயிரம் அழுத்தங்கள் மறைந்து கிடந்தாலும் இந்த அற்புத காட்சி உங்கள் மன கண்முன்னால் விரியும் போது எல்லாம் காற்றில் விழுந்த பஞ்சு போல பறந்து போவதை உணர்வீர்கள்.
பிள்ளையார் நமக்கு சாமி மட்டுமல்ல அவர் நம் தோழர் பரிட்சையில் பாஸ் மார்க் போடுவதற்கு வாத்தியாரை மட்டும் கெஞ்ச மாட்டோம். பிள்ளையாருக்கும் வந்து தோப்புகரணம் போடுவோம். பிள்ளையாரப்பா படித்தது எல்லாம் மறந்து போச்சி நான் மறந்து போன கேள்வி எதுவும் வரமால் பார்த்துக்கோ என்று பிள்ளையாரை தவிர வேறு யாரிடம் மனமிட்டு வேண்ட முடியும். காலையில் குளித்து முடித்து செப்பு குடத்தில் தண்ணீர் எடுத்து போகும் நமது காதல் தேவதை பிள்ளையார் கோவிலை பார்த்து ஒரு கும்மிடு போட்டு விட்டு போவாளே! அப்போது அவளையும் பிள்ளையாரையும் சேர்த்து வணங்கி நிற்குமே நம் வாலிப வயது. அந்த வயதின் ஏக்கம் பிள்ளையாரை தவிர வேறு யாருக்கு புரியும் நம்ம ஊர் பெண்களுக்கு பல நேரங்களில் காதல் தூது போவதில் பிள்ளையார் கெட்டிகாரராகவும் இருந்திருக்கிறார்.

காலையில் விடிந்தது முதல் இரவு படுக்க போகும் வரை கொழுப்பு மிகுந்த ஆகாரங்களை தின்று குனியவும் முடியாமல் நிமிரவும் முடியாமல் அவஸ்தை படும் எத்தனையோ பெரிய மனிதர்களை தன் முன்னால் வேர்க்க விருவிருக்க தொப்புகாரணம் போட வைப்பதில் பிள்ளளையார் கில்லாடி என்று எத்தனை முறை அவரை நாம் கேலி செய்திருப்போம். அவரை சாமியாக மட்டும் பார்த்திருந்தால் இத்தனை உறவு முறை அவருக்கும் நமக்கும் வந்திருக்குமா? ஆயிரம் திருவிழாக்கள் வந்தாலும் விநாயகர் சதுர்த்தி திருவிழா தான் குழந்தை பருவத்தில் இருந்து நம்மை பெரிதும் கவர்ந்து வரும் திருவிழாவாகும்.
சதுர்த்தி வந்து விட்டால் விடிந்தும் விடியாத காலை பொழுதில் அம்மாவின் முந்தானையை பிடித்து கொண்டு கடைவீதிக்கு போய் களிமண் பிள்ளையாரை வாங்கி மனை பலகையில் உட்கார வைத்து அவருக்கொரு அழகான காகித குடையும் குத்தி வைத்து. வீட்டுக்கு வந்து நடுவீட்டில் அவரை அமர வைத்து அவருக்கு நைவேத்தியம் செய்வதற்கு முன்பே அவருக்கான கொழுக்கட்டை.சுண்டலை திருடி தின்கும் சுகம் வேறு எப்போது கிடைக்கும். பத்து நாள் பூஜை செய்து கடேசியாக அவரை தலைமேல் தூக்கி போய் குளத்திலே போட்டு விட்டு வரும் போது எதோ வெகுநாள் பழகிய ஒரு நண்பனை இழந்து விட்டது போல ஒரு சோகம் வருமே அந்த சோக சுகத்தை அவரை தவிர வேறு யாராலும் தர முடியாது.

அப்படி நமது ஊனோடும்,உதிரத்தோடும் கலந்து விட்ட பிள்ளையாரை தமிழ் நாட்டுக்கே அவர் சொந்தமில்லை வடக்கில் இருந்து ஒரு மன்னன் கொண்டு வந்து தமிழ் நாட்டில் அறிமுகபடுத்திய பிறகுதான் பிள்ளையார் என்றால் யார் என்று தமிழர்களுக்கு தெரியும். என்று சில அரசியல் வாதிகள் பேசும் போது நமது மனம் லேசாக பாதிக்கப்படுகிறது நம் மனம் புன்படுவதை பற்றி எந்த அரசியல் வாதியும் கவலைப்பட போவதில்லை. என்று நமக்கு தெரிந்தாலும் உண்மையாகவே பிள்ளையார் தமிழ் மண்ணுக்கு தொந்தமான தெய்வம் இல்லையா? என்ற ஒரு சந்தேகம் நமது மனதின் அடி ஆழத்தில் எழுந்து நிற்கிறது.
பல்லவ மன்னன்னான நரசிம்ம பல்லவன் சாளுக்கியர்களோடு போர் புரிந்து வெற்றி பெற்று வந்த கையோடு அவனது படை தளபதியாக விளங்கிய பரஞ்சோதி வாதாபியில் இருந்து கணபதியை செங்காட்டான் குடி என்ற ஊரில் கொண்டு வந்து வைத்து கணபதி வழிபாட்டிற்கு பிள்ளயார் சுழி போட்டார் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பரஞ்சோதி என்ற திருத்தொண்டர் நாயனார் வாதாபியில் இருந்து கணபதியை கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தான் தமிழகத்திற்கு கொண்டுவந்தார் . ஆனால் அதற்கு பல காலம் முன்பே கணபதியால் வழிபட பட்ட சிவ பெருமானை கணபதிஸ்வரன் என்று அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. 7 ஆம் நூற்றாண்டில் தான் பிள்ளையாரை தமிழ் மக்கள் அறிந்தார்கள் என்றால் அதற்கு முன்பே கணபதிஸ்வரர் என்ற திருப்பெயர் சிவபெருமானுக்கு தமிழ் மக்கள் மட்டும் கொடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு திராவிட பரிவாரங்களில் ஊதுகுழலாக பவனி வருகின்ற சில வராலற்று ஆய்வாளர்கள் பதில் சொல்வது கிடையாது.

இதுமட்டுமல்ல ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அங்கே கோவில் கொண்டு இருப்பதாக பலமான வராலாற்று ஆதாரமும் இருக்கிறது. மேலும் கி.பி 4 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விநாயகர் சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவைகளை வைத்து பார்க்கும் போது கணபதியானவர் பரஞ்சோதி முனிவரால் தமிழகத்திற்கு அழைத்து வரப்படுவதற்கு முன்பே அவர் இங்கே மக்கள் பலர் மனதில் சிம்மாசனம் போட்டு உறுதியாக அமர்ந்திருக்கிறார். அவர் தமிழகத்தில் புதிதாக முழைத்த அல்லது வலுகட்டாயமாக திணிக்கப்பட்ட தெய்வம் அல்ல என்பது சந்தேகத்திற்கே இடமில்லாத உண்மையாகும்.
இதுவரை நமது இந்து மத வராலாற்று தொடரை தொடர்ச்சியாக படித்திவரும் உஜிலாதேவி வாசகர்களுக்கு ஒரு உண்மையை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். சனாதனமான நமது இந்துமதத்தில் சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சக்தி வழிபாடு, கணபதி வழிபாடு, முருகன் வழிபாடு, சூரியன் வழிபாடு ஆகிய ஆறு சமய பிரிவுகள் தொன்று தொட்டு நிலவி வந்தன இந்த பிரிவுகளுக்கு இடையில் நான் பெரியவன் நீ பெரியவன் என்ற தகராறுகள் உற்பத்தியாகி உச்சமாக நடக்கும் போது காலடியில் தோன்றிய மகா ஞானியான ஆதி சங்கர பகவத் பாதாள் தத்துவ நோக்கில் ஆறு சமயங்களையும் ஒன்றாக இணைத்து மீண்டும் பழையபடி சனாதன தர்மத்தின் வெற்றி முரசை தேசமெங்கும் கொட்ட செய்தார். அன்று முதல் நமது இந்திய தேசத்தில் சமய பிணக்குகள் குறைந்து விட்டன என்றே சொல்ல வேண்டும் ஆனாலும் சிற்சில இடங்களில் அத்தகைய சண்டைகள் இல்லை என்று சொல்ல முடியாது.

எந்த சண்டை எப்படி இருந்தாலும் காணாபத்யம் என்று அழைக்கப்பட்ட கணபதி வழிபாடு தனி ஒரு மதமாக இன்று இல்லை என்றாலும் உலகத்தில் நடை முறையில் இருக்கின்ற இஸ்லாம் மதத்தை தவிர வேறு எல்லா மதங்களிலும் பல்வேறு வடிவங்களில் செழுமையாக தொடர்ந்து வருகிறது. உலக முழுவதும் பக்தி என்ற பரவச உணர்வால் வணங்கப்படும் கணபதியை தமிழர்களுக்கு சொந்தமானவர் அல்ல என்று சொல்பவர்கள் நிச்சயம் மன நோயாளிகளாக தான் இருக்க வேண்டும்.
இந்து மதம் தவிர புத்த பகவானால் உருவாக்கப்பட்ட பெளத்த மதத்திலும் கணபதி வழிபாடு மிக சிறப்பாக இருக்கிறது. புத்த மதத்தை போலவே கடவுள் இல்லை என்று சொல்லும் ஜைன மதத்திலும் கணபதி வழிபாடு இன்றுவரை கொடிகட்டி பறக்கிறது. திபத் நாட்டில் கணபதியை வழிபடாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். பர்மா,ஜாவா நாடுகளிலும் இதே நிலைமைதான் இந்தொநோசியாவை கேட்கவே வேண்டாம் அந்த நாட்டின் ரூபாய் நோட்டில் கூட விநாயகர் படம் தான் பிராதானமாக இருக்கிறது. மலேசியா, சிங்கபூர் போன்ற பகுதிகளிலும் இலங்கையிலும் விநாயகர் வழிபாடு இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லை ஜப்பான் மற்றும் சீனாவில் இரட்டை பிள்ளையாரை காங்கி-டென் என்ற பெயரில் அதிஷ்ட தெய்வமாக வழிபடுகிறார்கள் ரஷ்யாவில் அஜர்பைஜான், ஆர்மீனியா போன்ற பகுதியில் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விநாயக சிலைகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

இந்தியாவை போலவே ஒரு காலத்தில் நாகரீகத்தில் சிறந்து விளங்கிய எகிப்து நாட்டிலும் விநாயகர் வழிபாடு இருந்திருக்கிறது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பல விநாயக சிற்பங்கள் வாடிக்கன் நகரில் உள்ள காட்சி கூடத்தில் பாதுகாக்க பட்டு வருவதாகவும் பல செய்திகள் கூறுகின்றன. தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மிக பழமையான சிவாலயத்தில் பிள்ளையார் சிலைகள் இருக்கின்றன. ஈரான், ஈராக் போன்ற பகுதிகளில் நடை பெற்ற அகழ்வாராட்சியில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட பட்டயங்கள் பல கிடைத்துள்ளன. இவைகளை வைத்து பார்க்கும் போது கணபதி வழிபாடு இந்தியாவில் மட்டுமே இருந்தது இந்துக்கள் மட்டுமே வணங்கினார்கள் என்று சொல்ல முடியவில்லை. பிரணவ வடிவமான கணேசர் உலக மக்கள் அனைவராலும் போற்றி வணங்க பட்டார் என்று துணிவாக சொல்லலாம். இத்தகைய விநாயக பெருமானின் சிறப்புகளை அடுத்துவரும் அத்தியாயங்களில் சிறிது சிந்திப்போம்.