Store
  Store
  Store
  Store
  Store
  Store

சாதி ஆவது ஏதடா...!

    ற்காலத்தில் சமூக சீர்திருத்தத்தை பற்றி பக்கம் சார்பில்லாமல் பேசுபவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் பலர் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் அவர்களுக்குள் ஜாதி வேற்றுமை பார்ப்பது மூடத்தனம் என்று சாடி இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் அதை கேட்கும் எங்களை போன்ற இளைஞர்களுக்கு சித்தர்கள் ஜாதி துவேசத்தை எப்படியெல்லாம் கண்டித்தார்கள் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது நாங்கள் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் ஒருவேளை இது சுலபமாக தெரிந்திருக்குமோ என்னவோ துரதிஷ்டவசமாக வெளிநாடுகளில் நாங்கள் பிறந்துவிட்டோம் உங்களை போன்ற பெரியவர்கள் சித்தர்களின் சீர்திருத்த கருத்துகளை சிறிதளவாவது எடுத்து சொன்னால் ஓரளவு எங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன் தயவு செய்து ஒரு சிறு விளக்கம் தாருங்கள்

ரமேஷ் நாயுடு,தென்னாப்பிரிக்கா

    ந்தியா முழுவதும் வேதங்கள் காட்டிய உண்மையான ஞானம் தியானம் யாகம் ஆகியவைகள் திசைமாறி வெற்று சடங்குகளாக மாறி போலி ஆச்சாரங்கள் மலிந்து கிடந்த காலத்தில் தான் புத்தர் போன்ற ஞான புருஷர்கள் தோன்றி மக்களுக்கு நல்வழி காட்டினார்கள் புத்தரின் புரட்சிகரமான சமூதாய மாற்றங்கள் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பல ஞானிகளால் முன்னெடுத்து செல்லப்பட்டது அவர்களில் பலர் புத்தரின் காலத்திற்கு முன்பே அந்தபணியை துவங்கி விட்டார்கள் என்றே சொல்லலாம்.

அப்படி பட்ட ஞானவான்களின் முதல்மையானவர் திருமூலர் ஆவார் ஆயிரம் ஜாதிகள் பரவிகிடந்த சமூகத்தில் முதல்முறையில் ஒன்றே குலமென்ற புதுமை கருத்தை நியாயமான கருத்தை திருமூலர் துணிச்சலோடு எடுத்து சொன்னார் அதே வழியில் தான் திருவள்ளுவரும் கூட பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று திருக்குறளில் தெளிவான விளக்கம் தந்தார் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் எங்கள் உறவினர்களே என்று நெஞ்சை நிமிர்த்து உரக்க சொன்னவன் தமிழ் ஞானி மட்டுமே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் ஒலிதான் அன்றும் இன்றும் என்றும் உலக ஒற்றுமைக்கு வழிகாட்டி கொண்டிருக்கிறது.

இந்த வரிசையில் வந்த மிகபெரிய தவஞான சித்தர் சிவவாக்கியர் அவர் ஜாதிகளால் சடங்குகளால் பிளவு பட்டு கிடக்கும் மனிதகுலத்தை பார்த்து சொல்கிறார் மழை அருவி குளம் ஆறு வாய்க்கால் கடல் என பலவாறாக பேசபட்டாலும் அவை அனைத்தும் நீர்தானே நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் அனைத்தும் தோன்றுமிடம் மூலபொருளான பரம்பொருள் ஒன்றிடமிருந்து தானே அட்டியல் சங்கிலி மோதிரம் என்று ஆபரணங்கள் வேறுபட்டு கிடந்தாலும் அவைகள் அனைத்தும் தங்கமென்ற ஒரே மூலபொருளில் இருந்து உருவானது தானே அதே போலதான் மனிதன் கருப்பு சிவப்பு வெள்ளை என்று நிறத்தால் பேதப்பட்டு கிடந்தாலும் மொழிகளால் வழிபாடும் முறைகளால் பாகுபாடுகள் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் மனிதர்கள் தானே அப்படி ஒரே இனமான மனிதனை ஜாதிகளால் பிரித்து பார்ப்பது எந்த வகையில் நியாயமென்று மக்களை பார்த்து கேட்கிறார் இதோ சித்தர் சிவவாக்கியரின் அந்த பாடல்

சாதி ஆவது ஏதடா சலந்திரண்ட நீரெலாம்
பூத வாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ


இப்படி ஏராளமான புரட்சிகரமான கருத்துக்கள் சித்தர் பாடல்களில் நிறைந்து கிடக்கிறது. அவைகளை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமென்றால் பட்டினத்தார் பாடல்கள் சிவவாக்கியர் பாடல்கள் தாயுமானவர் பாடல்கள் திருமூலரின் திருமந்திரம் மற்றும் அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களின் பாடல்களை படித்து பாருங்கள் அந்த பாடல்களில் நிறைந்துள்ள நெருப்பு போன்ற கருத்துக்களும் ஆன்மிக விளக்கங்களும் மூடனை கூட மேதையாக்கி விடும் இது புகழ்ச்சி அல்ல உண்மை


Contact Form

Name

Email *

Message *