Store
  Store
  Store
  Store
  Store
  Store

முருகனை தொட்டேன்!, முத்தமிட்டேன்..!

இந்து மத வரலாற்று தொடர் 27

   ந்துமத வரலாறு என்ற நமது தொடர்பதிவில் கணபதியை மூல முதற்பொருளாக கொண்டாடும் காணாபத்யம் என்பதை பற்றி சிறிது சிந்தித்து முடித்து அடுத்ததாக கெளமார தெய்வமாகிய திருமுருகனின் திருவருளை சிந்திப்போம் என்று நான் சொன்னவுடன் அதியசித்திலும் அதியமாக பல மின்னஞ்சல்கள் பல தொலைபேசி அழைப்புகள் சில கடிதங்கள் எனக்கு வந்தன அவைகள் எல்லாமே முருகனின் திருவருளால் தங்களது வாழ்வில் ஏற்பட்ட ஏற்பட்டு கொண்டிருக்கும் அதி அற்புத மாற்றத்தை விரிவாக குறிப்பிட்டு மயில்வாகனனின் அருளமுதத்தை எழுதும்போது இதையும் சேர்த்து எழுதுங்கள் என்ற விண்ணப்பமாகவே இருந்தது. அவைகளை பார்க்கும் போது எனக்கு நிஜமான மெய்சிலிர்ப்பு ஏற்பட்டது. அதிசயங்கள் நடக்காது என்று ஒதுக்கி தள்ளும் கலிகாலத்தில் கூட இத்தனை அதிசயங்கள் முருகபெருமானால் நடைபெற்று கொண்டிருக்கிறதா? என்ற வியப்பும் மலைப்பும் ஏற்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து கலைவாணி என்ற அறுவது வயது அம்மையார் முருகன் என்றாலே சின்ன குழந்தையில் இருந்து தீராத ஈடுபாடு எனக்கு அதுவும் பாலமுருகனை பார்க்கும் போது என்னை அறியாமல் ஒரு நெகிழ்ச்சி எனக்குள் ஏற்படும் எப்படியும் இந்த பாலமுருகனை என்றாவது ஒருநாள் தொட்டு பார்க்க வேண்டும். அவன் பட்டு போன்ற கன்னத்தில் முகத்தோடு முகம் வைத்து முத்தாட வேண்டும் என்ற ஆசை எனக்கு அடிக்கடி ஏற்படும் பக்கத்து வீட்டு குழந்தை ஏற்னால் கூட பெற்றோரின் அனுமதி இல்லாமல் தொட்டுவிட முடியுமா? எம்பெருமான் முருகன் சாதாரண பக்கத்து வீட்டு குழந்தையா என்ன நினைத்தவுடன் தொட்டு பார்க்க அவன் கைலாச நாதனின் செல்ல குழந்தை அன்னை பார்வதியின் மடியில் விளையாடும் சிங்கார குழந்தை உலகத்தையே ஈன்றெடுத்த அம்மையப்பனை விட்டு விட்டு அற்ப மானிட பதர் நான் அழைத்தால் அவன் வருவானா? 


பள்ளி பருவத்தில் ஏற்பட்டுவிட்ட இந்த ஆசை என் கூடவே வளர்ந்தது நானும் கல்யாணம் முடித்து பிள்ளைகள் பெற்று பேரன்பேத்திகளை பார்த்து பாட்டியாகவும் ஆகிவிட்டேன் ஆனாலும் செல்வமுத்து குமரனை நெஞ்சோடு அணைக்கும் ஆசைமட்டும் மறையவே இல்லை மாறவேயில்லை மாறாக சிறிய செடியாக இருந்தது பெரிய மரமாகி விழுதுவிட்டு படர்ந்து நிற்பது போல் அதிகரித்து கொண்டே தான் போனது அன்று இப்படி தான் முருகன் கோவிலில் சன்னிதானத்தின் முன் நின்று அவன் கொள்ளையழகை நேரம் போவதே தெரியாமல் பருகி கொண்டிருந்தேன் மனிதனின் மனது தான் நேற்று பிறந்தது போல் இளமையாகவே இருக்கிறது தவிர அவனுடிய உடம்பு வருடங்கள் போக போக முதுமையடைந்து தளர்ந்து விடுகிறது. நீ கிழவியாகி விட்டாய் என்று உடம்பு சொல்வதை மனது பல நேரங்களில் ஏற்றுக்கொள்வதில்லை நானும் அப்படிதான் அறுவது வயதிற்கு மேல் ஆன பிறகு கண்பார்வை நன்றாக மங்கி விடுகிறது. நான் என் கண்ணின் சக்தியை மறந்து இருட்டும் வரை முருகனின் திருமேனியை ரசித்தவண்ணமே இருந்துவிட்டேன்.

அர்ச்சகர் வந்து அம்மா நடையை சாத்த வேண்டும் என்று சொன்னவுடன் தான் சுய உணர்வுக்கு வந்தேன் இருட்டி விட்டது மழை வேறு தூவ ஆரம்பித்து விட்டது வீட்டிற்கு போய் சேர்வதற்கு ஒரு மணி நேரமாவது ஆகும். விரைவாக நடக்க வேண்டும். என்ற படபடப்பில் ஆலையத்தை விட்டு வேகமாக வெளியில் வந்தேன் வந்தவள் கோவில் வாசல் சற்று உயரம் என்பதை மறந்து காலை வேகமாக கீழே ஊன்றி விட்டேன். பள்ளத்தில் ஊன்றிய கால் நிலைதடுமாறி என்னை குப்புற தள்ளிவிட்டது தலையில் அடிபட்டுவதை உணர்ந்தேன் அதன் பிறகு எனக்கு எதுவுமே தெரியவில்லை மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்த போது மருத்துவமனையில் இருந்தேன். என் பிள்ளைகளும் கணவரும் சோகமாக என்னை சுற்றி நின்றார்கள். வயதான காலத்தில் என்னைவிட்டு போகயிருந்தாயே என்று என் கணவர் வாய்விட்டு அழுதார் எனக்கும் அழுகை வந்தது அப்போது மருத்துவ தாதி பெண் வந்து எல்லோரும் வெளியில் இருங்கள் நோயாளியை அதிகம் பேசவிடாதீர்கள் என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.


 எனக்கு ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்தது கோயில் வாசல்படியில் இருந்து விழுந்த எனக்கு தலையில் அடிபட்டிருக்கிறது, பலமான காயமும் உண்டாகியிருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது மயங்கிய நிலையிலேயே இருந்துருப்பேன் என்று தோன்றியது. விபத்து வருவதும் அதில் அடிபடுவதும் சில நேரம் உயிர் போவதும் இயற்க்கை தான் இப்படி தான் இவர் வாழ்க்கை முடியவேண்டும் என்று இருந்தால் அதை யாரால் மாற்ற இயலும் நான் சாவதற்கு பயப்படவில்லை ஆனால் நான் இறந்து விட்டால் என் கணவனை கவனித்து கொள்வது யார்? அவருக்கு வேளாவேளைக்கு உணவு கொடுத்து வென்னீர் வைத்து கொடுத்து பராமரிப்பது யார்? ஆயிரம் தான் பிள்ளைகள் செய்தாலும் என்னிடம் கேட்பது போல் உரிமையாக அவர் யாரிடம் கேட்க இயலும். முருகா நீ மரணத்தை தருவதாக இருந்தால் எங்கள் இருபருக்கும் ஒன்றாகவே தா என்று எத்தனை முறை வேண்டியிருப்பேன். அது அவன் காதுகளில் விழாமலா இருந்திருக்கும்.

நிச்சயம் விழுந்திருக்கும் அதனால் தான் அவன் மண்டையில் அடிபட்ட பிறகும் மூளையில் பாதிப்பில்லாமல் என்னை காப்பாற்றி இருக்கிறான். இருந்தாலும் அவனை தரிசிக்க போன இடத்தில் அவன் வாசல்படியிலேயே நான் விழலாமா? என்னை தாங்கி பிடிக்காமல் அவன் விடலாமா? என்று தோன்றியது முருகா அந்த நேரத்தில் நீ எங்கே இருந்தாலும் ஓடோடி வந்திருக்க வேண்டும் உன்னையே நம்பியிருக்கும் அபலையான என்னை கீழே விழாமல் தூக்கி பிடித்திருக்க வேண்டும். அப்படி நீ செய்தால் உன்னை தீண்டும் பாக்கியத்தை நான் பெற்றிப்பேனே என்று தோன்றியது. அதனால் அழுகை வந்தது அழாதே என்றாள் தாதி கண்களை மூடிக்கொண்டு வெகுநேரம் இருந்தேன் ஆலையத்தில் பார்த்த இறைவனின் திருமேனியை என் மன கண் முன்னால் நிறுத்தி ரசித்தவண்ணம் படுத்து கிடந்தேன்.


 அப்போது எனது நெற்றியை ஒரு சின்ன குழந்தை தொடுவது போல உணர்வு ஏற்பட்டது. வாளைபூவின் இதழ்களை போன்ற சிறிய விரல் என் நெற்றியில் தடவுவது நன்றாக தெரிந்தது. கண்ணீரால் ஈரமாகி ஒட்டிகொண்டிருந்த இமைகளை சிரமப்பட்டு பிரித்தெடுத்து கண்திறந்தேன். என் முகத்திற்கு பக்கத்தில் தாமரை மலர் போன்ற முகம்கொண்ட ஒரு சிறு குழந்தை நின்றது. அதன் முகமும் அதன் கண்களும் கொள்ளையழகு என்றால் அதுகூட குறைவான வார்த்தை தான் சூரிய பிரகாசத்தில் சந்திரனின் குளிர்ச்சியை அந்த முகத்தில் கண்டேன். குழந்தை என்னை பார்த்து சிரித்தது பவளம் போன்ற அதன் இதழ்கள் என் இதையத்தை கனக்க செய்தது. சிரமப்பட்டு கைகளை தூக்கி குழந்தையின் தலையை தொட்டேன் தொட்ட நான் என்னை மறந்தேன் நானிருக்கும் மருத்துவமனையை மறந்தேன். ஏன் இந்த உலகத்தையே மறந்தேன். நானும் அந்த குழந்தையும் மட்டுமே உலகத்தில் இருக்கிறோம் மற்ற யாரும் எதுவும் இல்லவே இல்லை என்ற உணர்வு தலைக்கேரியாது.

என் கைகளில் கிடைத்த பட்டு போன்ற குழந்தையின் தலைகேசம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. என் முகத்தை குழந்தையின் முகத்தோடு இணைத்தேன் என் கிழட்டு உதடுகளால் இளமை ததும்பும் குழந்தையின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டேன். இதுவரை எனக்குள் எரிந்து கொண்டிருந்த பெரும்நெருப்பு அணைவது போலிருந்தது. குமுறி கொண்டிருந்த எரிமலை குளிந்தது போலிருந்தது பிறந்த நாள் முதல் இன்றைய நாள் வரை எனக்குள் வீசிகொண்டிருந்த சூறாவளி திடிரென ஓய்ந்தது போலிருந்தது. ஆம் முருகனை நெஞ்சார அணைக்கவேண்டும் ஆரத்தழுவி முத்தமழை பொழிய வேண்டும். என்ற ஆசை நிறைவேறியது போல உணர்ந்தேன். இந்த உணர்ச்சியும் ஆனந்தமும் ஐந்து நிமிடங்கள் நீடித்திருக்கலாம். அதற்குள் எனது கைகளுக்குள் சிக்கி என்னை பரமானந்த நிலைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்த குழந்தை நிமிட நேரத்தில் மறைந்துவிட்டது கையில் கிடைத்த வானம் கைநழுவி விட்டதே என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் ஆசையே வடிவெடுத்த பாவங்களையே தொழிலாக கொண்ட இந்த அரைகிறுக்கு கிழவியின் வேண்டுதலை கூட என் ஞான தேசிகன் மறக்கவில்லையே என்னையும் ஒரு பொருட்டன நினைத்து தரிசனம் கொடுத்தானே ஞானிகளும், முனிவர்களும் தொடவே முடியாத அவன் திவ்விய சரீரத்தை என்னை தொட அனுமதித்தானே என்பதை நினைக்கும் போது அழுகை மட்டும் தான் வருகிறது.


 முருகன் என்பவன் கற்பனையல்ல கதையல்ல கல்லால் செய்த சிலையுமல்ல அவன் சாஸ்வதமான நிஜம் சக்தியமான உண்மை அவனை அழைத்தால் அவனே கதியென்று விழுந்து வணங்கினால் அவனை விட்டால் வேறு யாருமில்லை என்று சரணாகதி அடைந்தால் அவன் வருவான் கண்டிப்பாக வருவான் கோல மயிலேறி நம் குடிசைக்கு வருவான். இது நிச்சயம் சுவாமி சந்தேகமே வேண்டாம் முருகனை நம்புங்கள் அவன் திருப்புகழை பாடுங்கள் அவனிருக்கும் இடம் நோக்கி தரிசனம் செய்ய நகருங்கள் நீங்கள் அவனை நோக்கி ஒரே ஒரு அடி எடுத்து வைத்தாலும் அவன் உங்களை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்து வருவான் வரம் தருவான் திருவருள் புரிவான் என் அனுபவத்தை ஊருக்கெல்லாம் சொல்லுங்கள் என்னை பைத்தியமென்று பலர் பரிகசித்தாலும் சக்தியத்தை உரக்க சொல்லுவேன் என்று அந்த அம்மையார் கடிதத்தை முடித்திருந்தார்.

மற்ற கடிதங்களும் மின்னஞ்சல்களும் தொலைபேசி உரையாடல்களும் ஏறக்குறைய இந்த அம்மையாரின் அனுபவத்தை போலவே இருந்தது அவைகளை காணும் போது முருகன் என்ற மூர்த்தியின் மீது மக்களுக்கு உள்ள அதீதமான பக்தியின் ரகசியம் நன்றாக புரிந்தது தமிழ்கூறும் மக்களிடத்தில் முருகபக்தியானது வளமோடு செழித்து வளர்ந்து நிற்பதற்கு மூல காரணமே முருகனின் ஓயாத திருவருள் அலை தான் என்பது நன்றாக தெரிந்தது அறிவை கொண்டு ஆராய்பவர்களுக்கு இது மூடத்தனமாக தெரியலாம் ஆனால் இதயத்தை கொண்டு உலகத்தை பார்ப்பவர்களுக்கு இது தான் ஞான வெளிச்சமாக தெரியும்.


முருகன் மீது தமிழர்கள் கொண்ட பக்தி இன்று நேற்று வந்ததல்ல கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வந்தது என்று சொல்லலாம் பண்டைய தமிழகத்தில் குறிஞ்சி நில தெய்வமாக சேயோன் என்ற முருகனே வழிப்டபட்டான் தொல்காப்பியம் கூட சேயோன் மேய மைவரை யுலகமும் என்று கூறுகிறது. பத்துபாட்டில் நக்கீரர் பெருமான் அருளிய திருமுருகாற்று படையும் தொகைநூலில் ஒன்றாகிய பரிபாடலில் செவ்வேள் பாடல்களும் முருகனின் பெருமையை முருகனின் அருமையை முருகனின் வழிபாட்டு தொன்மையை நமக்கு தெளிவாக காட்டுகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் குன்றக்குரவை பகுதியும் இந்திரவிழா காதையில் வரும் அருமுருக செவ்வேள் அணித்திகழ் கோயிலும் என்ற குறிப்பும் திருமுருகனின் வழிபாட்டு வரலாறை நமக்கு காட்டும் இப்படி பல தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் முருகனை பற்றி கூறுகின்ற பல விஷயங்களில் சிலவற்றையாவது வரும் பதிவுகளில் சற்று விரிவாக பார்ப்போம்.Contact Form

Name

Email *

Message *