Store
  Store
  Store
  Store
  Store
  Store

பால் வேண்டுமானால் அழு !


   மது கோரிக்கைகளை கடவுள் முன்னால் வைத்து பிரத்தனை செய்வது சரியாக இருக்குமா? அதாவது இந்த கேள்வியின் நோக்கம் கடவுள் எல்லாம் அறிந்தவர் என்கிறோம் அப்படி இருக்க நாம் சொல்லி தான் கடவுள் நமது குறைகளை அறிந்துகொள்ள வேண்டுமா? என்று பலருக்கும் ஒரு சந்தேகம் உண்டு

முக்காலத்தையும் உணர்ந்தவர் இறைவன் முக்காலத்தையும் படைத்தவரும் அவர் தான் அப்படிப்பட்ட கடவுளுக்கு நாம் சொல்லி தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவசியமில்லை நான் செய்கின்ற பாவம் நான் உணராமலே நான் சொல்லாமலே கடவுளுக்கு தெரியுமென்றால் எனக்கு வரும் கஷ்டத்தை மட்டும் அவரிடம் போய் ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்பது அறிவுடைய வாதம் போல் தோன்றும் ஆனால் இது அறிவுடைய வாதமல்ல அறியாமையின் உளறல் என்றே சொல்லலாம்

கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவைவிட மேன்மையானது காரணம் இந்த ஜென்மாவில் என்னை பெற்றவள் எனது கடந்த ஜென்மாவிலோ வரப்போகும் ஜென்மாவிலோ என்னை பெற்றாள் பெறுவாள் என்று சொல்ல முடியாது கணக்கற்ற சங்கலி தொடர்போன்ற பிறப்பிறப்பு தொடரில் எத்தனையோ தாய் எத்தனையோ மக்கள் ஆனால் அந்த ஜென்மத்திலும் சரி இந்த ஜென்மத்திலும் சரி இனி வரப்போகும் பிறப்பானாலும் சரி கடவுள் என்பவர் ஒருவர் மட்டுமே

ஆகவே நமக்கு நிரந்தரமான நித்தியமான சொந்தக்காரன் இறைவன் ஒருவனே அவனை விட்டால் வேறு எந்த சொந்தமும் நிச்சயமானது அல்ல இப்படி ஜென்மாந்திர உறவான இறைவனின் உறவு நமது உயிரோடு கலந்ததாகும் அப்படிப்பட்ட உறவுக்காரனிடம் தான் மனமிட்டு பேச முடியும் தாயிடம் கூட மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ எண்ணங்கள் மனிதனுக்கு உண்டு அவை அத்தனையையும் அறிந்தவன் இறைவன் அதை அவனிடம் நான் சொல்வதில் எந்த வெட்கமும் கிடையாது.

இறைவன் தீர்மானித்ததை யாராலும் மாற்ற முடியாது எனக்கு வரும் துன்பங்கள் கூட இறைவன் தீர்மானித்தபடி தான் நடக்கிறது. தண்டனை கொடுத்த நீதிபதியிடம் தானே எனக்கு மன்னிப்பு கொடு பிராயச்சித்தம் கொடு என்று கேட்க முடியும் கோர்ட் டாவாலியிடமா கேட்க முடியும் நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி இறைவன் எனவே அவனிடம் முறையிட்டு அழுவதில் தவறில்லை காரணம் என் தண்டனையின் தாக்கத்தை தணிக்கும் சக்தி அவன் ஒருவனிடம் மட்டும் தான் இருக்கிறது

ஒரு தாய்க்கு ஐந்து பிள்ளைகள் ஐவருக்கும் பசி எடுக்குமென்று அம்மாவுக்கு தெரியும் ஆனாலும் அம்மா முதலில் உணவை யாருக்கு கொடுப்பார் எந்த குழந்தை பலகீனமாக பசியை தாக்குபிடிக்கும் சக்தியில்லாததாக இருக்கிறதோ அதற்கு தானே கொடுப்பாள் அதாவது அழுகின்ற குழந்தைக்கு தானே பால் கிடைக்கும்

என் பசி அம்மாவுக்கு தெரியும் எப்படியும் சோறு தருவாள் என்று நம்புகின்ற குழந்தை நல்ல குழந்தை தான் சக்தி வாய்ந்த குழந்தையும் கூடத்தான் ஆனால் அம்மா வரும்வரை தாக்குபிடிக்க வேண்டும் பசிகொடுமையை தாங்க வேண்டும். நான் தான் பலகீனமாணவனே என்னால் எப்படி காத்திருக்க முடியும் அதனால் கால்களை உதைத்து தரையில் உருண்டு அழவில்லை என்றாலும் கூட எனக்கு பசி எடுக்கிறது என்று சொல்லலாம் தானே

எனவே கடவுள் எல்லாம் அறிந்தவர் அவரிடம் நான் சென்று முறையிட என்ன இருக்கிறது என் கஷ்டங்களை போக்கும் போது போக்கட்டும் தீர்க்கும் போது தீர்க்கட்டும் என்று நினைப்பது தத்துவ ரீதியில் சரியானதே அதற்காக பசிக்கிறது என்று சொல்வது தவறு என்று யாரும் சொல்ல முடியாது தாயினும் சாலப்பரிவுடைய எம்பெருமான் நீ கூப்பிட்ட குரலுக்கு வருவேன் என்கிறான் முழுமையாக உன்னை என்னிடம் ஒப்புவித்து சரணாகதி அடைந்துவிடு என்கிறான் என்னோடு நீ அடிமையாக மட்டுமல்ல தோழனாகவும் இரு என்கிறான் அதனால் என்கஷ்டம் அவனுக்கு தெரிந்தாலும் நான் கஷ்டபடுகிறேன் என்று உரிமையோடு அவனிடம் முறையிடுவது எனக்கொரு ஆறுதல் என் குரலையும் அவன் கேட்பான் என்ற நம்பிக்கை

அப்படி நல்ல நம்பிக்கையை தருவது தான் பிராத்தனை அந்த பிராத்தனையை தொடர்ந்து செய்தால் மனச்சுமை குறையும் எப்படியும் நான் வெல்லுவேன் என்ற நம்பிக்கை தொடர்ந்து வரும்.

  

Contact Form

Name

Email *

Message *