( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பில்லி சூன்ய விளக்கங்கள்.


 அத்யாயம் 2

      ரு பெரியவருக்கு இந்த சமூதாயத்தின் மீது அடக்கமுடியாத கோபம் என்ன உலகம் சார் இது மனுஷன் எவனிடமும் ஈவு இறக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது ஆட்டைகடித்து மாட்டை கடித்து கடேசியில் மனுஷனையே கடித்த கதையாக ஆகிவிட்டது அப்பா அம்மா மீது மரியாதையில்லை அண்ணன் தம்பிகளிடத்தில் பாசமில்லை கணவன் மனைவிக்கிடையில் நம்பிக்கை இல்லை பிள்ளை பாசம் என்பது கூட போலி நாடகமாக இருக்கிறது. என்கிறார்

இன்னொறுவர் சொல்கிறார் கண்ணுக்கு எதிரே ஒரு மனிதன் உயிருக்காக போராடிகொண்டிருந்தாலும் அவனை காப்பாற்றுவது பற்றி சிந்திக்காமல் தான் பயணபோகவேண்டிய பேருந்துக்காக சலிப்போடு காத்திருப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள் உயிரை பாதுகாக்க வேண்டிய டாக்டர்கள் கூட பணத்தை பார்க்கிறார்களே தவிர தங்களது கடமையை உணரவில்லை மருத்துவர்களே பாதைமாரிய பிறகு அரசியல் வாதிகள் அதிகாரிகள் சமூகநல ஆர்வலர்கள் பொது பணியாளர்கள் காவலர்கள் போன்றோர்கள் மாறாமலா இருப்பார்கள் அதனால் தான் இந்த நாடு கெட்டு குட்டிசுவராகி விட்டது என்கிறார்.

இதற்கு வேறொருவர் இப்படி எல்லோரும் கெட்டு போனதற்கு சினிமாதான் முழுமுதற்காரணம் எப்படி தப்பு பண்ண வேண்டும் தப்பு செய்துவிட்டு தப்பித்துகொள்ள என்னென்ன வழி உண்டு தவறுகளை மூடிமறைப்பது எப்படி மறைத்துவிட்டு நல்லவர் போல் நடிப்பது எப்படி என்பவைகளை சினிமா தெளிவாக காட்டிவிடுகிறது. இதுமட்டுமா கொலை செய்வது கற்பழிப்பது ஊரான் மனைவியை மானபங்கம் செய்வது பொது பிரச்சனைகளை ஜாதி கலவரங்களை தூண்டிவிடுவது எப்படி என்றெல்லாம் ஒரு அகராதியை போல் சினிமா விளக்கி விடுகிறது. அதை பார்ப்பவன் மிக சுலபமாக தீய வழிகளை தெரிந்துகொள்கிறான் எனவே இந்த சமூதாயம் நிஜமாகவே முன்னேற வேண்டுமானால் ஒரு பத்து வருடத்திற்கு சினிமாவையும் தொலைக்காட்சியையும் தடைசெய்ய வேண்டும் என்கிறார்.


இவர்களது பேச்சில் நியாயமில்லை நிஜமில்லை என்று எவரும் சொல்ல இயலாது ஆனால் எதார்த்தமாக பார்க்கும் போது இப்படி பட்டவர்களின் கூற்று முற்றிலும் சரி என்று நம்மால் ஒத்துகொள்ள முடியவில்லை சினிமா வருவதற்கு முன்பு மட்டும் இந்த சமூகத்தில் தீங்குகள் நடக்காமலா இருந்தது என்று நாம் கேட்கபோவதில்லை சினிமாவில் தீமைகள் மட்டும் தான் காட்டபடுகிறதா நல்ல விஷயங்கள் எதுவுமே சொல்லப்படவில்லையா என்று கேட்க தோன்றுகிறது. காரணம் தாய்பாசம் உடன்பிறந்தவர் பாசம் நட்பு நேர்மை கடமை தவறாமை என்று எத்தனையோ நல்ல விஷயங்கள் சொல்லபடுகிறதே அவைகளை எல்லாம் யாருமே கவனத்தில் கொள்ளவில்லையா? அல்லது அவைகள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இல்லையா என்றும் நமக்கு தோன்றுகிறது.

சினிமா பார்க்கப்படும் மனிதர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மையானால் நூற்றுக்கு ஐம்பது பேர்களையாவது நல்வழி படுத்திருக்க வேண்டுமே அவைகளை பற்றி யாருமே சொல்லவில்லையே அது ஏன் ஆட்டோ சங்கர்களையும் ஜெயப்ரகாஷ்களையும் மட்டும் தான் சினிமா உருவாக்கி இருக்கிறதா? என்ற கேள்விக்கு பக்கம் சாராமல் நடுநிலையோடு சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் நமது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே உள்ள மக்கள் நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களை உடனுக்குடன் புரிந்து கொள்கிறார்கள் அதை பற்றி அதிகமாக பேசுகிறார்கள் ஒரு நாளில் சில மணி நேரங்களையாவது செலவிட்டு அவைகளை பற்றி சிந்திக்கிறார்கள் இது உலக மக்கள் அனைவரின் பொதுவான மனோதத்துவமாகும் ஒரு பெண் தன்னை கைபிடித்து இழுக்க வந்தவனை செருப்பால் அடித்து விட்டாள் என்றால் அது அதிகவேகமாக பரவாது அதே பெண் அவனை நடுத்தெருவில் கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாள் என்றால் வினாடி நேரத்தில் ஊர் முழுவதும் பரவிவிடும்.

அதாவது ஒரு விஷயத்தில் உள்ள கெடுதியான தன்மை மனித மனத்தை ஈர்ப்பது போல நல்ல தன்மை என்பது அவ்வளவாக ஈர்ப்பது இல்லை சினிமா மட்டுமல்ல மாந்தீரிகம் என்பதும் ஏறக்குறைய அப்படி தான் மாந்திரிக சாஸ்திரத்தில் ஏராளமான நன்மைகள் மலிந்து கிடக்கிறது. மந்திரங்களை வைத்து ஆக்கபூர்வமான காரியங்கள் எப்படியெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி ஏராளமான விளக்கங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன ஆனால் அவைகளை பற்றி நிறைய பேருக்கு தெரியாது வசியம் மோகனம் மாரகம் என்ற கெட்ட விஷயங்களை அறிந்து வைத்திருக்கின்ற அளவிற்கு நல்ல விஷயங்களை யாரும் தெரிந்து வைத்திருக்க வில்லை


ஒரு சமயம் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் மந்திரங்களால் கேடு செய்ய முடியுமா? என்பதை பற்றி நேரடி பேட்டி கொடுத்திருந்தேன் அதை பார்த்துவிட்டு நிறைய பேர் ஐயோ சுவாமி நாங்கள் உங்களை ஒரு துறவி என்று தான் நினைத்து கொண்டிருந்தோம் நீங்கள் ஒரு மந்திரகாரரா எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று கேட்டார்கள் அப்படி கேட்டவர்களின் பலர் என்னிடம் உள்ள தொடர்பை உடனடியாகவே துண்டித்து கொண்டார்கள் அவர்களை எண்ணி எனக்கு சிரிப்புதான் வந்தது காரணம் அறியாமையில் கிடக்கும் அவர்களை பற்றி வேறு என்ன என்னால் சொல்ல முடியும். மாந்திரிகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே போதும் அது ஏவல், பில்லி சூன்யம் தானே அவைகளை பற்றி எதற்க்காக பேச வேண்டும் அவைகளை தெரிந்து வைத்து ஆவது என்ன என்று பலர் நினைக்கிறார்கள் வேறு சிலரோ அவைகளை பற்றி பேசினாலே தீங்கு வந்து விடும். என்று நினைக்கிறார்கள் அந்த அளவிற்கு மாந்திரிகத்தை பற்றிய அச்சமும் பயமும் சந்தேகமும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

பயப்படாமல் என்ன செய்வது கிராமத்தில் நன்றாக மளிகைக்கடை வியாபாரம் நடத்தி வந்தேன் ஆள் சம்பளம் போக்குவரத்து செலவு போக தினசரி கையில் ஐநூறு ரூபாய் கண்டிப்பாக நிற்கும் குடும்பத்தை நடத்துவதற்கு கஷ்டபட்டதே கிடையாது. பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தேன் தாய்தகப்பனுக்கு எந்த குறையுமில்லாமல் பார்த்து கொண்டேன் மிக முக்கியமாக பெண்டாட்டியின் தேவைகள் எதுவோ அத்தனையையும் தட்டாமல் செய்து வந்தேன் ஒரு வெள்ளிகிழமை குடுகுடுப்பைகாரன் ஒருவன் வந்து பிச்சை கேட்டான் வெள்ளிகிழமை அதுவுமாய் காலையில் வந்து பிச்சை கேட்கிறாயே கடையில் எதவது போனி ஆகட்டும் பிறகு வா என்றேன் அதெல்லாம் முடியாது இப்போதே பிச்சை போடு என்றான் அதிகாரமாக எனக்கு கோபம் வந்துவிட்டது போடா வெளியே என்று அவனை படித்து தள்ளிவிட்டேன் இன்னும் பதினைந்து நாளில் என்ன நடக்கிறது பார் நடுத்தெருவுக்கு நீ வருவாய் என்று சபித்துவிட்டு போனான்.

இவனென்ன ஊசியை நாட்டி அதன் மேல் தலைகீழாக நின்று தவம் செய்யும் யோகியா சாபம் கொடுப்பான் அது பலிக்குமென்று நான் கவலைபடுவதற்கு அவன் சாபத்தை நான் பொருட்படுத்தவே இல்லை மறந்தும் போய்விட்டேன் கடேசியில் அடுத்த வெள்ளி கிழமை அதாவது எட்டாவது நாள் கடையில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்து தீ பிடித்தது ஒரு சொம்பு தண்ணீரில் அணைந்து போகவேண்டிய நெருப்பு என் கடையே சாம்பலாக்கி விட்டுதான் அணைந்தது அவன் சொன்னபடி பதினைந்து நாளில் அல்ல எட்டே நாளில் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன் பத்து பேருக்கு வேலை கொடுத்த நான் இன்று கோயம்பேடு பஸ்டாண்டில் மூட்டை தூக்கி பிழைப்பை நடத்துகிறேன் இப்படி மாந்திரிகத்தால் ஒருவர் அல்ல பலரும் பாதிக்கப்படும் போது அதில் நன்மை இருக்கிறதா? தீமை இருக்கிறதா? என்றா ஆராய முடியும். என்று உங்களில் யாரோ ஒருவர் பேசுவது என் காதில் விழாமல் இல்லை.


வாஸ்தவம் தான் மாந்திரிகத்தில் எவ்வளவோ நல்ல சங்கதிகள் இருந்தும் அதை முழுமையாக அறிந்தவர்கள் கூட கெட்ட விஷயங்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். அல்லது கெட்ட காரியங்களால் ஏற்படும் தீய பலன்களை தடுப்பதற்கே தங்களது மாந்திரிக சக்தியை பயன்படுத்துகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள் கதையே இப்படி இருக்கும் போது தெரியாதவர்களை பற்றி குறைகூறுவதில் அர்த்தமில்லை பொதுவாக மாந்திரிகத்தால் செய்யபடுகின்ற பில்லி சூனியத்தை பற்றி மக்கள் பல நேரங்களில் பேசுகிறார்கள் சில மந்திரவாதிகளும் அந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் அப்படி என்றால் என்ன? அதன் உண்மையான பொருள் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரியாது. குறிப்பாக ஏவல், சூனியம் என்பதை கூட சிறிது விளங்கி கொள்ள முடிகிறது. பில்லி என்பதை பற்றி அதிகமாக புரிந்துகொள்ள முடியவில்லை எனவே அவைகளை சிறிது விளக்க முடியுமா என்று என்னிடம் கேட்கிறார்கள் அவர்களுக்கு விளக்கம் தரவேண்டியது எனது கடமை என்று நினைக்கிறேன் அந்த கடமையே செய்து முடித்த பிறகே மாந்திரிகத்தை பற்றிய முழுமையான தகவல்களை கொடுத்தால் நன்றாக இருக்குமென்றும் கருதுகிறேன்.

பில்லி என்ற வார்த்தை வடமொழியிலோ தமிழிலோ கிடையாது இந்த வார்த்தை புத்தர் பேசிய பாலி மொழியில் உள்ளதாகும் இதற்கு நேரடியான பொருள் கட்டுபடுத்துதல் என்று சொல்லலாம் அதாவது மந்திர சக்தி அல்லது சித்தி பெற்ற ஒருவர் ஒரு சாதாரண மனிதனை உடல் ரீதியிலும் மன ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து கட்டு படுத்துவதே பில்லி ஆகும். அதாவது பில்லி மந்திரம் கற்ற ஒரு மந்திரவாதி ஒருவனை மன நோயாளியாக ஆக்கிவிட முடியும். நல்ல ஆரோக்கியமுள்ளவரை நோயாளியாக படுக்கையில் தள்ளிவிடவும் முடியும். ஒருவனது, செயல்களை தலைகீழாக மாற்றி தோல்விகளை மட்டுமே அவன் பெறும்படி செய்துவிடவும் முடியும். இது தான் பில்லி என்பதன் விரிவாக்கம்.

அடுத்ததாக சூன்யம் என்ற வார்த்தை வருகிறது. இது வடமொழி சொல் என்பது எல்லோருக்கும் தெரியும். சூன்யம் என்றாலே வெறுமை என்பது பொருளாகும். செல்வந்தனான ஒருவனை ஒன்றுமே இல்லாத வறியவனாக நடுத்தெருவில் நிறுத்துவதன் மந்திர பெயரே சூன்யம் என்பதாகும். இந்த சூன்ய மந்திரத்தால் எவரை வேண்டுமானாலும். அழித்து விடலாம் கைகால்களை முடக்கி விடலாம் சம்மந்த பட்டவருக்கு தெரியாமலே வயிற்றில் வசிய மூலிகைகளை செலுத்தி விடலாம் கருவில் உள்ள குழந்தயை கூட கொன்றுவிடலாம்.


தனக்கு கீழே உள்ள ஒருவனை இந்த வேலையை செய் என்று சொல்வது எவலாகும். அதே போன்றது தான் மாந்திரிகத்தில் உள்ள ஏவல் முறையாகும் மந்திர சக்தியால் மந்திரவாதியின் கட்டுபாட்டுக்குள் இருக்கின்ற சில தீய சக்திகளை எதிரிகளின் மீது ஏவி விட்டு அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவதே ஏவல் மந்திரத்தின் முக்கிய உறுப்பாகும் இந்த மந்திரத்தின் மூலம் ஒருவரது மூளையை முற்றிலுமாக நமது கைவசப்படுத்தி அவரை நமது ஏவலாளாக ஆக்கிவிடவும் முடியும்.

இதே போல மாந்திரிகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் என்னொரு வார்த்தை செய்வினை என்பதாகும். தனது சொந்த விருப்பத்தின் படி செயல்பட்டு கொண்டு லாபத்தையும். வெற்றிகளையும் அநுபவத்தி வரும் ஒருவனை மந்திரங்களால் தடுத்து அவன் மனதை பல வழிகளில் திசை திருப்பி விட்டு கடேசியில் அவனை படுகுழியில் தள்ளுவதே செய்வினையின் முக்கிய செயலாகும் இதன் மூலம் ஒருவனின் பொருளாதாரத்தையும் அழிக்கலாம் ஆரோக்கியத்தையும் நீர்த்து போக செய்யலாம்.

அடுத்ததாக உள்ளது வைப்பு என்பதாகும். இது மந்திர வழியிலோ மருத்து வழியியோ ஒரு பொருளை உண்ண கொடுத்து அல்லது அவர்களின் ஆடையில் உடம்பில் தடவி விட்டு அவர்களை வசிய படுத்துவதே வைப்பு என்பதன் அர்த்தமாகும். இப்படி பட்ட தீய காரியங்கள் மாந்திரிகத்தில் ஏராளமாக இருக்கிறது.

இதை படிக்கும் போது ஒரு சந்தேகம் வரும் இவைகளை எல்லாம் ஒரு குறிப்பிட்ட மனிதர் மீதோ குடும்பத்தின் மீதோ பிரயோகம் செய்வதற்கு என்னென்ன தேவைப்படும் என்பதாகும் அதாவது நாம் தாக்க வேண்டிய எதிரிகளிடமிருந்து. என்னென்ன பொருள்களை எடுத்து பிரயோகம் செய்ய வேண்டும் என்பதே இந்த சந்தேகத்தின் அர்த்தமாகும் ஒருவருக்கு தீய மந்திரங்களால் பாதிப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் அவர்களின் புகைப்படமோ வியர்வை மற்றும் ரத்தம் படிந்த துணிகளோ தலைமுடியோ காலடி மண்ணோ விந்தனுவோ வேண்டுமென்று மாந்திரிகர்கள் சொல்கிறார்கள். அந்த பொருள்களை வைத்து என்னென்ன காரியங்களை செய்யலாம் என்பதை இனி வரும் பகுதிகளில் சிந்திப்போம்.

மேலும் மாந்தீரிகம் அத்தியாயங்கள் படிக்க http://2.bp.blogspot.com/-AY0hvq1bmz8/T71L-jYmGyI/AAAAAAAAKWo/o0TFl42_q6Y/s1600/40px-Book-icon-gif.gif+ comments + 6 comments

Anonymous
14:42

ஐயா ! பில்லி சூன்யம் ஏவல் உண்மை என்றால் ஏன் பெரிய பெரிய அரசியல் வாதிகள் இதை பயன்படுத்தி தங்களின் எதிரிகளை அழிக்கவில்லை. இது என்னுடைய சந்தேகம் அய்யா .

அரசியல்வாதிகளுக்காக இதை செய்ய ஒரு கூட்டமே கேரளாவிலும் , தலைநகரங்களிலும் உறங்காமல் அலைந்துகொண்டிருக்கும்.

இந்த techniques use பண்ணி US PRESIDENT BARACK OBAMA'வ பதவியிலிருந்து தூக்க முடியுமா? நீங்க சொல்றது உண்மை னா இங்க யாருமே அதிகமா உழைக்க வேண்டியதே இல்லையே... easy'யா யா மாந்திரீக வழியில வாழ்க்கைல முன்நேரிடலாமே எதுக்கு office போய்ட்டு சம்பளம் வாங்கிகிட்டு etc...

Please clear my doubt okay...

குருஜி அவர்களுக்கு , எனக்கு இதில் பல சந்தேகங்கள் உள்ளது . சமிபத்தில் எனது தந்தை கூட பிறந்த அத்தை ஒருவர் இறந்து விட்டார்கள் அவர்களக்கு வயது 48 த்து தான் இருக்கும் , அவருடய மூலையில் நரம்பு வெடித்து கண் வழியாகவும் வாய் வழியாகவும் இரத்தம் வடிந்து மருத்துவமனயில் வைத்து இறந்துவிட்டார்கள். அங்கிருக்கும் மருத்துவர்களுக்கே அதற்கான காரணம் புரியவில்லை. எல்லோரும் சொன்னார்கள் இதற்க்கு செய்வினை தான் என்று . எனக்கு ஒன்றும் புரியவில்லை அதாவது ஒரு மனிதனுடைய மரணம் என்பது கண் முன் எதிர்க்க பயந்து கோலை போல் முதுகிருக்கு பின்னால் செய்வினை வைக்கும் எதிரியின் கையில் தான் உள்ளதா ? அப்படி கொன்றால் கடவுள் என்ற ஒருவர் இருந்து எதற்கு ? ஒரு மனிதனுடைய வாழ்வும் மரணமும் செய்வினை வைக்கும் ஒரு எதிரியின் கையில்தான் உள்ளது என்றால் இறைவன் என்ற ஒருவர் இருந்து எதற்கு ?? தயவு செய்து விளக்கம் தாருங்கள் ...காத்திருக்கிறேன் உங்கள் பதிலுக்கு ....

excellent shankar sir superana question kettinga naan ketka virumbyathai neengal kettu vittirgal thanks

Anonymous
22:41

Rajapakse vai kolla vendum


Next Post Next Post Home
 
Back to Top