( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பிச்சை போடலாமா?


பிச்சை போடுவது பணமாக போடலாமா? பொருளாக கொடுக்கலாமா?

சரவணா குமார்,திருப்பூர்


    ரு மனிதன் பிச்சைகாரனாக எப்போது மாறுகிறான்? தன்னால் எதுவும் முடியாத போது தனக்கு ஒத்தாசை செய்ய யாரும் இல்லாத போது உயிரை காப்பாற்றி கொள்ள உணவு பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை வரும் போது மட்டுமே பிச்சை எடுக்க துவங்குகிறான். பிச்சை எடுப்பது சாதாரண விஷயம் அல்ல ஒருவரிடம் கை நீட்டி யாசகம் பெறுவதற்கு தன்மானத்தை அடகு வைக்க வேண்டும். மான அவமான உணர்வுள்ள எவனும் பிச்சை எடுக்க வர மாட்டான். இப்படி தான் பொதுவாக பிச்சைகாரர்களை பற்றி நாம் கணக்கு போடுகிறோம். ஆனால் பல நேரங்களில் இந்த கணக்கு தப்பு கணக்காகவே இருக்கிறது.

பல பிச்சைகாரர்கள் வறுமையால் அதில் ஈடுபடவில்லை என்பது அதிர்ச்சியான உண்மை உடலை வளைந்து வருத்தி உழைக்க சோம்பேறிதனம் உள்ள பலர் பிச்சை எடுக்க ஆரம்பிக்கிறார்கள். மற்றவர்களின் இரக்கத்தை முதலாக கொண்டு செயல்படும் பிச்சை எடுபப்தில் சுகம் கண்டுவிட்ட பிறகு அவர்களால் வேறு தொழில் எதுவும் செய்ய முடிவதில்லை செய்யவும் அவர்கள் விரும்புவதில்லை. இதனாலையே தனது பிள்ளைகளை கூட பிச்சை எடுப்பதற்கு பழக்கி விடுகிறார்கள்.

ஆகவே தர்மம் செய்கிறேன் பேர்வழி என்று பிச்சைகாரர்களை ஊக்குவிக்கும் செயலை நாம் செய்ய கூடாது. ஒருவனுக்கு பத்துரூபாய் கொடுக்க நீங்கள் விரும்பினால் அவனுக்கு எதாவது வேலை கொடுத்து சம்பளமாக அதை கொடுங்கள். அது தான் சரியானது. உங்களிடமிருந்து சுலபமாக பணத்தை பெற்றுவிட்டால் அதுவே அவனுக்கு பழக்கமாகி விடும்.

ஆனால் முடியாதவர்கள், முதியவர்கள், ஊனமுற்றோர்கள், உழைக்கும் சக்தி இல்லாதவர்கள் என்று ஒருவகையினர் உண்டு இவர்களுக்கு தர்மம் செய்வது தவறு அல்ல அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நல்ல குடி மக்களுக்கு கண்டிப்பாக இருக்கிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ஒருவனுக்கு மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க தூண்டில் கொடுப்பது சிறந்தது என்பது அந்த பழமொழி. முடியாத இவர்களுக்கு உதவி செய்யும் போது இப்படி எதாவது செய்ய முடியுமா? என்று யோசியுங்கள் அதற்கு வழியில்லை என்றால் பணமாகவோ பொருளாகவோ தர்மம் செய்யலாம்.

பணமாக கொடுக்கும் போது நீங்கள் எதற்காக தர்மம் செய்கிறீர்களோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போக கூட வாய்ப்பு உள்ளது. எனவே யாருக்கு தர்மம் செய்கிறீர்களோ அவர்களது அப்போதைய தேவை எதுவென்று அறிந்து உணவாக ஆடையாக அல்லது வேறு வகை உதவியாக செய்வதற்கே முதலிடம் கொடுங்கள். கடேசி பட்சமாக மட்டுமே பணம் கொடுத்து உதவலாம்.

பிச்சை போடும் போது நான் தர்மம் செய்கிறேன் அதனால் நான் பெரிய மனிதன் என்ற ஆணவம் நமக்கு வரலாம் அது நிச்சயம் தவறு காரணம் உண்மையில் பிச்சை வாங்குபவரே நமக்கு தானம் தருகிறார் என்பது தான் தத்துவ ரீதியில் உள்ள உண்மையாகும். அதாவது நாம் கொடுக்கும் நிலையற்ற பொருளை பெற்றுக்கொண்டு புண்ணியம் என்ற நிலையான பொருளை அவர்கள் நமக்கு தருகிறார்கள்.,எனவே கொடுப்பவனை விட வாங்குபவனே இந்த இடத்தில் உயர்ந்து விடுகிறான்.


+ comments + 8 comments

குருஜி மிகவும் அருமை ,காசை பெற்றுக்கொண்டு புண்ணியத்தை வழங்கும் பிச்சைக்காரர்கள் மேலானவர்கள் .தாங்கள் தெளிவு படுத்திய இந்த உண்மையை உணருபவர்கள் பணக்காரன் என்ற அகம்பாவத்தை உடனேவிட்டு விடுவார்கள்

குருஜி மிகவும் அருமை ,காசை பெற்றுக்கொண்டு புண்ணியத்தை வழங்கும் பிச்சைக்காரர்கள் மேலானவர்கள் .தாங்கள் தெளிவு படுத்திய இந்த உண்மையை உணருபவர்கள் பணக்காரன் என்ற அகம்பாவத்தை உடனேவிட்டு விடுவார்கள்

guruji avargale,

kadaisi irandu vari miga miga super. intha unmai niraya perukku therivathu illai.

மிக அருமை,

" நாம் கொடுக்கும் நிலையற்ற பொருளை பெற்றுக்கொண்டு புண்ணியம் என்ற நிலையான பொருளை அவர்கள் நமக்கு தருகிறார்கள் "

சத்திய வார்த்தை .....

Anonymous
14:33

miga arumyana pathivu

17:44

Realy very nice.

17:45

" நாம் கொடுக்கும் நிலையற்ற பொருளை பெற்றுக்கொண்டு புண்ணியம் என்ற நிலையான பொருளை அவர்கள் நமக்கு தருகிறார்கள் "


Next Post Next Post Home
 
Back to Top