Store
  Store
  Store
  Store
  Store
  Store

பரிகார குடை பிடியுங்கள் !


   குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் கடந்த மூன்று மாதங்களாக பல சிறிய நோய்களால் வேதனை படுகிறேன். அடிக்கடி உடம்பு சோர்வாகி விடுகிறது. நடுக்கம் வருகிறது. எந்த காரியத்தையும் தெளிவாக செய்ய முடியாமல் தடுமாறுகிறேன். மருத்துவர்கள் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி சாதாரண மருந்து மாத்திரைகள் தந்து அனுப்பிவிடுகிறார்கள். ஆனாலும் தொல்லை விடுவதாக இல்லை இந்த பிரச்சனைகள் எப்போது தீரும் என்பதை தயவு செய்து விளக்கமாக சொல்லவும்.

சின்னத்தம்பி.ஆத்தூர்

   சொந்த வீடு இல்லாதவர்கள் ஒரு வீட்டில் வாடைகைக்கு இருந்தால் வாடகைப்பணம் கொடுத்து தான் ஆகவேண்டும். நமது உடம்பும் வாடகை வீடு மாதிரி தான். இந்த ஜென்மத்தில் இதில் குடியிருக்கிறோம். அவ்வளவு தான் இதற்கு கொடுக்கும் வாடகை என்பது நோய்கள் ஒரு விருந்தாளி வீட்டுக்கு வந்து போவது போல சில நோய்கள் மனித உடம்பிற்கு வந்து தான் போகும். அதை தவிர்க்க முடியாது. தவிர்க்கவும் கூடாது.

ஜலதோஷம், தும்மல், ஜுரம் போன்றவைகள் வருடத்திற்கு ஒருமுறையாவது வரவேண்டும். அப்படி வந்தால் தான் உடம்பின் உள்ளிருக்கும் கழிவு பொருட்கள் நல்ல முறையில் வெளியேறும், இதை நான் சொல்லவில்லை அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் சொல்கிறார்கள். ஆனால் சில நோய்கள் வேண்டாத விருந்தாளி போல் வந்தால் போகாமல் நெடுநாட்கள் தங்கி விடுகின்றன. சில நோய்களோ ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுவது போல நமது உயிரையே உடல் என்ற கூட்டில் இருந்து விரட்டி விடுகிறது. எது எப்படியோ மனிதன் நோயிலிருந்து தப்பவே முடியாது.


நோய் வந்தே தீரும் என்பதற்காக அது அழைக்காமல் வந்தது சொல்லாமல் கொள்ளாமல் தானாக போய்விடும் என்று காத்திருக்க முடியாது. காரணம் நோய் என்பது வலி நோய் என்பது சோர்வு மனிதன் வலியையும் சோர்வையும் எப்போதுமே விரும்புவது கிடையாது. எனவே அதிலிருந்து விடுபட துடியாக துடிக்கிறான்.

நோய் என்பது நமது உடம்பில் உள்ள சத்து குறைவால் மட்டும் வருகிறது என்பது வெளிகாரணம் வெளிக் காரணத்தயும் தாண்டி சில பல உள் காரணமும் உண்டு அதாவது நமது செயல்களுக்காக கிடைக்கும் வினை பயனாக நோய்கள் வருகின்றன அதாவது நமது கடந்த பிறப்பு தற்போதைய பிறப்பு ஆகியவற்றில் நாம் விதைத்ததை அறுவடை செய்யும் பயிராக கூட நோய்கள் வருகிறது. இத்தகைய நோய்கள் சில கிரக மாற்றங்களால் மனிதர்களை தாக்குகிறது.

உங்களது ஜாதகத்தில் ஆரோக்கியத்தை குறிப்பிடும் ஆறாம் இடத்தை தற்போது ராகுவின் பார்வை மிக கொடுமையாக தாக்குகிறது. இதனால் உடம்பில் ரத்த ஓட்டத்தில் விஷ தன்மை கலந்து சில பித்த சம்மந்தமான நோய்களை தந்தே தீரும் என்பது ஜாதக விதியாக இருக்கிறது. இந்த கொடுமை உங்களை இன்னும் ஆறு மாதத்திற்கு விடாது என்றும் சொல்லலாம் ஆனால் அதுவரை நோயின் கொடுமையை தாங்க முடியுமா? அதற்கு எதாவது பரிகாரம் கிடையாதா? என்று நீங்கள் வருத்தத்துடன் கேட்பது புரிகிறது.

மழையில் நனைய வேண்டுமென்று விதி இருந்தால் அது நடந்து தீரும். ஆனால் மழை நீர் தலையில் நேரடியாக தாக்காமல் குடைபிடித்து கொண்டு ஓரளவு தப்பிக்கலாம் குடைபிடிப்பது போல தான் பரிகாரங்கள் என்பதும். நீங்கள் தொடர்ச்சியாக ஐந்து பிரோதோஷ காலம் சிவாலயம் சென்று நந்தியம் பெருமான் கொம்பு வழியாக இறைவனுக்கு தீபம் காட்டுவதை தரிசனம் செய்யுங்கள். அப்போது சிவபெருமானின் வழிபாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட வில்வ பிரசாதத்தை பெற்று தினசரி காலையில் வெறும் வயிற்றில் உண்டு வாருங்கள் உடனடியாக நோயின் கொடுமை குறைய துவங்கும். கவலை வேண்டாம் நல்லது விரைவில் நடக்கும்.




Contact Form

Name

Email *

Message *