Store
  Store
  Store
  Store
  Store
  Store

பேச வைக்கும் மாடுகள்


     மேஷ ராசியின் வடிவமான ஆட்டின் தத்துவத்தை பற்றி நான் எழுதிய போது ஒரு வாசகர் இப்படியே பன்னிரண்டு ராசிகளில் உருவத்திற்கான காரண காரியங்களை எழுதினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார். தொலைபேசியில் உரையாடிய சில நண்பர்களும் இதே கருத்தை வலியுறுத்தினார்கள் எனக்கும் அது சரியென பட்டது எனவே ஒவ்வொரு ராசியின் உருவத்திற்க்கான விளக்கங்களை ஓரளவு சுருக்கமாகவும் எளிமையாகவும் சொல்வது என்று முடிவு செய்தேன்.

நாடி ஜோதிடத்தின் கால புருஷ இலக்கின விதிப்படி மேஷம் என்பது முதலாவது ராசி இரண்டாவதாக வருவது ரிஷப ராசி ரிஷபம் என்றால் காளைமாடு என்று எல்லோருக்கும் தெரியும் காளை என்பது உழைப்பின் சின்னம் ஏர் உழ வண்டி இழுக்க நீர் இறைக்க பொதி சுமக்க காளை மாடு பயன்படும் மிக சுருக்கமாக சொன்னால் விவசாயம் செய்ய நிலம் எந்த அளவு அவசியமோ அதே அளவு காளை மாடும் அவசியம்


ஒருமுறை தேசபிதா காந்தி அவர்களிடம் ஏர் உழ பயன்படும் இயந்திரத்தை பற்றி ஒருவர் மிக விரிவாக பேசினார். இருபது மாடுகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு இயந்திரம் செய்து விடும் அதுவும் மிக குறைந்த நேரத்தில் ஆழமாகவும் அகலமாகவும் நிலத்தை உழுதுவிடும். இது விவசாயிக்கு கண்கண்ட மருந்து மிகபெரிய வரபிரசாதம் என்று புகழ்ந்து பேசினார் எல்லாவற்றையும் அமைதியோடு கேட்டுகொண்டிருந்த காந்தி கடேசியில் ஒரு கேள்வி கேட்டார். உங்கள் விவசாய நண்பனான இயந்திரம் அனைத்து வேலைகளையும் சுலபமாகவும் வேகமாகவும் செய்துவிடும். அது மிகவும் சந்தோசம் ஆனால் உங்கள் இயந்திரம் மாடு போடும் சாணத்தை தருமா என்று கேட்டார். இந்த ஒரு கேள்வியிலேயே காந்திய பொருளாதாரத்தின் அடிநாதத்தை காந்தி விளக்கி விட்டார்.

மாடு காந்திய பொருளாதாரத்தை நடைமுறை படுத்த உதவுகிறதோ இல்லையோ ஒரு நிலத்தை வளபடுத்த கண்டிப்பாக உதவி செய்கிறது. அக்காலத்திய தானியங்கள் வீரிய மிக்கதாக இருந்ததற்கு மிக முக்கிய காரணம் மாட்டு சாணமே ஆகும். அந்த சாணத்தில் பயிர்கள் விளைவிக்க படும் வரை மனிதன் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தான். அந்த நிலை மாறிய பின்னரே நாடு முழுவதும் நட்சத்திர மருத்துவ மனைகள் உருவாகின.

நிலத்தை நம்பி வாழும் உழவனுக்கு மாடுகள் என்பது மிருகங்கள் அல்ல அவனது வாழ்க்கையை உயர்த்தும் செல்வங்கள் ஆகும். அந்த காலத்தில் ஒருவனின் பொருளாதார பலம் அவனிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றன என்பதை வைத்தே முடிவு செய்ய பட்டது. அதனால் தான் மாடு என்ற வார்த்தைக்கே செல்வம் என்ற பொருள் தரப்பட்டது.


ஒருவன் ஜாதகத்தில் இரண்டாவது இடத்தை தன பாவம் என்ற வார்த்தையால் அழைப்பார்கள் அதாவது ஒருவனின் செல்வ நிலை அவன் ஜாதகத்தின் இரண்டாம் பாவத்தை வைத்தே தீர்மானிக்க படுகிறது. எனவே தனத்தை அதாவது பொருளாதார வளத்தை சொல்வது இரண்டாம் இடம் என்பதனால் இரண்டாவது ராசியாகிய ரிஷபம் மாட்டின் உருவத்தில் நமக்கு உருவகபடுத்தி காட்ட படுகிறது.

மேலும் ஜாதகத்தில் இரண்டாம் பாவத்தை வாக்கு ஸ்தானம் என்று அழைப்பார்கள். மனிதனாக பிறந்தவன் முதல் முதலில் பேசுகின்ற வார்த்தைக்கும் மாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு ஒரு குழந்தை பிறந்து பேச துவங்கும் முன்பு "ம்மா" என்றே குரல் எழுப்பும் ம்மா என்பது தான் அகரத்தோடு சேர்ந்து அம்மா என்றாகியது. காளை மாடுகள் குரல் கொடுக்கும் போது அச்சரம் பிசகாமல் ம்மா... என்றே சத்தம் எழுப்பும் அதனாலும் முதல் வார்த்தையை சொல்லும் சின்னம் என்பதனால் காளை மாடு இரண்டாவது ராசியாக இருக்கிறது.



Contact Form

Name

Email *

Message *