Store
  Store
  Store
  Store
  Store
  Store

வெள்ளை முடியை கறுப்பாக்கும் மூலிகை !


   குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் எனக்கு 25 வயதே ஆகிறது. எந்த கெட்ட பழக்கமும் இல்லை கணினி துறையில் வேலை செய்கிறேன். என் தலைமுடி சிறிது சிறிதாக வெளுப்பாகி வருகிறது. என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை வண்ணம் பூசி கொள்ளவும் பயமாக இருக்கிறது. திருமணம் வேறு இன்னும் ஆக வில்லை எனது இளநரை தீர என்ன செய்வது பக்கவிளைவுகள் இல்லாத மருந்து எதாவது உண்டா? என்று சொல்லவும் உங்கள் பதில் நிச்சயம் எனது மனவேதனையை குறைக்கும் என்று நம்புகிறேன்.

ரமேஷ், சென்னை


   ம்பது வயதை தொட்ட பிறகு நரைமுடி வந்தால் யாரும் வருத்தபடுவதில்லை அதை ஒரு அழகாகவே பார்க்கிறார்கள். ஒவ்வொரு நரைமுடியும் நீ பூமியை விட்டு கிளம்ப வேண்டிய காலம் நெருங்கி கொண்டே இருக்கிறது என்று கடவுள் போடும் கடிதம் என்றே தத்துவ மொழிகளும் கூறபடுகின்றன.

வயதாலும் கூட யாரும் முதுமை பருவத்தை அவ்வளவு சுலபமாக ஏற்றுகொள்ள மாட்டார்கள் ஒரு நரைமுடி வந்துவிட்டாலே மனதில் தளர்ச்சியும் ஒருவித நம்பிக்கை இன்மையும் தாழ்வு மனப்பான்மையும் வந்துவிடுகிறது. வயதான கிழங்க்களுக்கே இந்த நிலை என்றால் இளைஞர்களின் மனநிலையை கேட்க வேண்டாம். பாவம் சுருங்கி போய்விடுவார்கள்.

எப்போதும் இல்லாமல் இன்றைய காலசூழல் இளைஞர்களுக்கு பெரிய மனசுமையை தருவதாக இருக்கிறது. அதற்கு காரணம் உடல் உழைப்பு குறைந்து போய் ஏறக்குறைய வேலைகள் அனைத்தும் உட்கார்ந்த இடத்திலையே செய்ய வேண்டிய நிலை வந்து விட்டது தான். உடம்பில் வேர்வை வர பாடு படுபவனுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் உடல் குறைபாடுகள் வந்து விடாது.

பொதுவாக இளநரை வர வேலையின்மை மட்டும் காரணமில்லை மரபு சார்ந்த சில விஷயங்களும் அதில் அடங்குகிறது. வழிவழியாக ஒரு குடும்பத்தாருக்கு இளம் வயதிலையே நரைவருகிறது என்றால் அதை எந்த மருந்துக்களாலும் தீர்க்க முடியாது என்று உறுதியாக சொல்லலாம். அது இல்லாமல் நரை வந்தால் அக்குறையை நிவர்த்தி செய்ய நமது சித்தர்கள் பக்கவிளைவுகள் இல்லாத சில எளிய மருந்துகளை சொல்லியிருக்கிறார்கள்.

சிவகரந்தை என்ற ஒரு மூலிகை இருக்கிறது. இதை பூ பூப்பதற்கு முன்பு பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்து சலித்து வைத்துகொள்ள வேண்டும். அத்தோடு கரிசலாங்கண்ணி இலையையும் உலர்த்தி பொடி செய்து சிவகரந்தை பொடியுடன் சமமாக கலந்து தினசரி காலை மாலை இருவேளையும் சுத்தமான பசு நெய்யில் கலந்து ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் இளநரை கண்டிப்பாக மறைந்து முடி கருத்துவிடும். இந்த மருந்து சாப்பிடும் காலத்தில் மது மற்றும் புகையிலை நிச்சயம் பயன்படுத்த கூடாது. அதிகபடியான காரத்தையும் புளிப்பையும் குறைக்க வேண்டும் சாப்பிட்டு பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
Contact Form

Name

Email *

Message *