Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஈரான் நாட்டில் சூரிய வழிபாடு !


இந்து மத வரலாற்று தொடர் 33
   சூரியனை தனிப்பெரும் தெய்வமாக கொண்டாடுகின்ற செளர மதம் ஆறாம் நூற்றாண்டு வரையிலும் கூட இந்தியா முழுவதும் பல்வேறு தரமக்களால் தனி சம்பிராதயமாக கடைபிடிக்க பட்டது. அதன் பிறகு இந்து மதத்தில் ஏற்பட்ட பெரும் விழிப்புணர்ச்சி காரணமாக செளரம் தனிபாதையை விட்டு இந்து மதம் என்ற மகா சமூத்திரத்திற்குள் கலந்து விட்டது.

இந்தியாவில் மட்டுமல்ல ஏசு நாதர் பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரிய வழிபாடு எகிப்து நாட்டில் மிக உத்வேகத்தோடு கடைபிடிக்க பட்டு மன்னரும் மக்களும் அதன் வழியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் நிறைய கிடைக்கின்றன. எகிப்து நாட்டின் புகழ்பெற்ற அரச பரம்பரையான பாரோ மன்னர்கள் தங்களை சூரிய வம்சத்தார் என்று பெருமையோடு அழைத்து கொண்டார்கள். நமது நாட்டில் எப்படி பயிர் தொழிலில் பலன் கிடைத்தவுடன் சூரியனுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் விழா கொண்டாடுகிறோமோ அதே போலவே எகிப்து நாட்டிலும் உழவர்கள் தங்களது அறுவடை காலத்தை சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் காலமாக கொண்டாடி இருக்கிறார்கள்.


இன்றைய ஈரான் என்கின்ற பழைய பாராசிகம் சூரியனை படைக்கும் கடவுளாகவும் காக்கும் கடவுளாகவும் வழிபட்டு இருக்கிறது. பாரசீக மக்களின் அப்போதைய புனித நூலான அவஷ்தானத்தில் மித்திரன் என்ற பெயர் முழுமுதற் கடவுளுக்கு கொடுக்கப்பட்ட பல பெயர்களில் ஒன்றாக இருக்கிறது. மித்திரன் என்பது சூரியனின் பல பெயர்களில் ஒன்று என்பது குறிப்பிட தக்கது.

கிரேக்க மக்கள் சூரிய கடவுளுக்கு அபொல்லோ என்ற பெயர் கொடுத்து வணங்கினார்கள். ரோமாபுரியில் சூரியனுக்கு தைபீரியஸ் என்பது பெயராகும். வடஅமெரிக்காவில் உள்ள மெக்சிகோவிலும் சூரிய வழிபாட்டு கூடங்கள் இருந்ததற்கான மிக பழைய சின்னங்கள் இன்றும் இருக்கின்றன. இதை போலவே தென்னமெரிக்காவிலும் இன்காஸ் என்ற மக்கள் இனம் சூரியனை கடவுளாக வழிபாடு செய்திருக்கிறார்கள். அதற்க்கான ஆதாரங்களும் இன்றும் அழியாமல் இருக்கின்றன.

இந்தியாவில் புராதான காலத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் குமாரன் சாம்பன் தனக்கு ஏற்பட்ட சாப விமோசனத்திற்கு நாரத மகரிஷியின் அறிவுரை படி சூரிய வழிபாட்டை செய்ததாகவும் அதற்காக அவன் சூரியனுக்கு தனிக்கோவில் கட்டியதாகவும் சில புராணங்கள் தகல்வல்களை தருகின்றன. அப்போது இந்தியாவில் சூரிய வழிபாட்டை தனி வழிபாடாக கடைபிடிக்கும் மக்கள் அதிகமாக இல்லாததால் சூரியனுக்கு வணக்கம் செலுத்த பாராசீக நாட்டிலிருந்து ஐரானியர்களை அழைத்து வந்ததாகவும் தகவல்கள் உள்ளன.ஐரானிய மக்கள் வழிபாட்டின் போது இடுப்பில் அணிந்து கொள்ளும் ஒரு புனித ஆபரணத்தை சூரியனுக்காக சாம்பன் செய்ததாகவும் அதையே சூரிய கோவிலில் உள்ள மூல விக்ரகத்திற்கு அணிவித்ததாகவும் சூரிய புராணம் தெளிவாக சொல்கிறது. சூரிய புராணத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஆழமாக பார்க்கும் போது இந்தியாவில் சூரிய நமஸ்காரம் என்பது தொன்றுதொட்டு இருந்தாலும் அது தனி தெய்வ வழிபாடாக பரிணாம் எடுத்தது கிருஷ்ணனின் குமாரன் சாம்பன் காலத்திலேயே தான் என்று தெரிகிறது.

எகிப்து நாட்டு பாரோ மன்னர்கள் போலவே இந்திய மன்னர்களும் சூரிய தேவனை உபாசனை செய்வதிலும் தங்களை சூரிய புத்திரர்கள் சூரிய வம்சத்தார்கள் என்று சொல்லி கொள்வதிலும் பெருமை பாட்டார்கள். மகாபாரதத்தில் தர்ம புத்திரர் வனவாசம் மேற்கொண்ட போது தங்களை நாடிவரும் முனிவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் உணவளிப்பதற்கு சூரியனை வழிபட்டே அச்சைய பாத்திரம் பெற்றார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். குந்தி தேவியின் மூத்த மகன் சூரிய புத்திரன் என்பதும் அவன் மிக சிறந்த சூரிய பக்தன் என்பதும் மாமன்னன் கர்ணனை அறிந்தவர்கள் அனைவரும் அறிவார்கள்.


தமிழகத்தில் புகழ்பெற்ற சோழர் குலத்தில் வந்த பராந்தக சோழன் குடந்தை நாகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சூரிய பகவானுக்கு மானியம் அளித்த சாசனமும் செம்பை கிராமத்தில் சூரியனுக்காக ஸ்ரீ கண்டராதித்ய க்ரஹம் என்ற தனிகோவிலை எழுப்பியதும் வரலாற்று பதிவாகும் மேலும் குலோத்துங்க சோழன் சூரியன் மீதுகொண்ட அளவற்ற பக்தியால் சூரியநாராயண ஆலயம் எழுப்பதியும் அதற்கு முறைப்படி ஆராதனை நடப்பதற்கு மானியம் எழுதி வைத்ததும் குறிப்பிட தக்கதாகும்.

வேத காலம் தொட்டே சூரிய வழிபாடு இருந்து வந்தது என்றாலும் சூரியபகவானுக்கு என்று தனி ஆலயங்கள் எழும்பியது மிகவும் பிற்காலத்தில் தான் கோனார்க்கில் உள்ள சூரிய ஆலயம் பதிமூன்றாம் நூற்றாண்டில் கீழை கங்க வம்சத்த்து மன்னான முதாலம் நரசிம்மனால் கட்டப்பட்டதாகும். இந்த ஆலயத்தை சுற்றி கண்ணை கவரும் பல சிற்பங்கள் இருந்தாலும் சூரிய நாராயணனை குறிக்கும் ஒரு சிற்பம் மிகசிறந்த கலைநயத்தோடு காட்சி தருகின்றது இதில் சூரிய நாராயணர் தாமரை மலர் மீது கம்பீரமாக நிற்கிறார். மலருக்கு அடியில் பக்தர்கள் மண்டியிட்டு வணங்குகிறார்கள்.

குஜராத் மாநிலத்தின் பழைய கால தலைநகரம் பட்டான் என்ற ஊராகும். இந்த ஊருக்கு பதினெட்டு மயிலுக்கு தெற்கே மோதேரா என்ற ஊர் அமைந்துள்ளது இந்த ஊரில் மிக பழைய காலத்து சூரிய கோவில் ஒன்று சிதிலம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த ஆலயம் ஷோலங்கி வம்சத்து மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இந்த ஆலயத்தில் கலை எழில் கொஞ்சும் ஒரு சூரிய சிற்பம் இருந்ததாகவும் அது அரபு மன்னர்களின் படையெடுப்பின் போது களவாடப்பட்டு போனதாகவும் தெரிகிறது.

காஷ்மீரத்தில் மார்தாண்ட் என்ற இடத்தில் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு சூரிய கோவிலும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூரிலும் மேற்கு வங்காளத்திலும் சூரியனுக்கு என்று பல தனிகோவில்கள் பல மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது நமது தமிழகத்தை பொறுத்தவரை தஞ்சை மாவட்டத்த்தில் உள்ள திருமங்கல குடியில் அமைந்துள்ள முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய சூரிய ஆலயம் மிகவும் புகழ் பெற்றதாகும்.

சூரிய அலையங்கள் பற்றிய விவரங்களை இங்கு நான் தருவதற்கு மிக முக்கிய காரணமுண்டு ஒரு வழிபாட்டை பலர் செய்யாமல் சிலபேர் மட்டுமே செய்தார்கள் என்றால் அவர்கள் தங்களது வணக்க முறைகளை வீட்டுக்குள்ளையே வைத்து கொள்வார்கள். வெளியிடத்தில் அதை பெரிது படுத்தி காட்ட மாட்டார்கள் கோபுரம் கட்டி மண்டபம் நிர்மாணித்து அபிசேக ஆராதனையோடு வழிபாடு நிகழ்த்துகிறார்கள் என்றால் அந்த சம்பிராதயத்தை கடைபிடிக்கும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று அர்த்தமாகும்.


அதே போலவே திருமாலை வழிபடும் மக்கள் எப்படி அதிகமோ சிவனை கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை எப்படி அதிகமோ ஆதி பராசக்தியை சக்தி குமாரனை கணபதியை வழிபடுபவர்களின் எண்ணிக்கை எப்படி அதிகமோ அப்படியே சூரியனை வழிபடுவர்களின் தொகையும் அதிகமாகவே இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில் செளரம் மத பிரிவை தூக்கி நிறுத்த சரியான குரு மார்கள் இல்லாத காரணத்தினாலே செளரம் இந்து மதம் என்ற சமுத்திரத்தில் கரைந்து விட்டது. ஆனாலும் தனித்தன்மை என்றும் மாறாது. சூரிய பக்தர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள்..
Contact Form

Name

Email *

Message *