( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இரண்டு ஒன்றானால் மிதுனம்


    ராசி சக்கிரத்தில் மேஷம் முதலாவதாகவும் ரிஷபம் இரண்டாவதாகவும் மிதுனம் மூன்றாவதாகவும் வருகிறது. பொதுவாக மூன்றாவது இடம் இளைய சாவ்கோதர பாவம் என்று அழைப்பார்கள் மிதுனம் என்ற ராசியின் சின்னம் இரட்டையர் உருவமாகும். பொதுவாக ஜென்ம லக்கினம் ஜாதகனையும் மூன்றாவது இடம் சகோதரனையும் குறிப்பதானால் இருவரும் இணைந்த உருவமே மிதுனத்தின் இரட்டையர் வடிவம் என்று சொல்லலாம். 

சமூகத்தில் ஒரு மனிதன் தனியாக நின்று எதையும் சாதித்து விட முடியாது எந்த வகையிலாவது மற்றவரின் துணை தேவை சில காரியங்களை செய்ய வெளிநபர்களை நம்புவதை விட சொந்தகாரர்களை நம்புவது சிறப்பாக இருக்கும். அந்த சொந்தம் என்பது சகோதர சொந்தமாக அமைந்து விட்டால் அது தனிப்பட்ட உயர்ந்த சிறப்பு என்றே சொல்லலாம். 

பொதுவாக பங்காளிகள் பகையாளிகள் என்று கருதபடுகிறார்கள். ஆயிரம் ரத்த பந்தம் இருந்தால் கூட பொருட்களை பாகம் வைக்கும் போது கூடுதல் குறைவுகள் ஏற்ற தாழ்வுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. அதீத ஆசையும் எதற்கும் திருப்தி அடையாத மனமும் உடைய மனிதர்கள் பாக பிரிவினை காலத்தில் பகையாளியாக மாறிவிடுவது இயற்க்கை.

சகோதரர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் என்பது சிறு வயது முதலே துவங்கி விடுகிறது ஒவ்வொரு மூத்தவனும் தனக்கு இளையவனாக வருபவனை போட்டியாளனாகவே கருதுகிறான். காரணம் இதுவரை தனக்கு மட்டுமே கிடைத்த பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் தனது சகோதரனுக்கு பங்கிட்டு கொடுப்பதை விரும்புவது இல்லை எனவே தம்பியை தன்பொருளை அபகரிக்க வந்தவனாகவே சில மூத்தவர்கள் கருதுகிறார்கள். 

இளையவர்களும் சும்மா இருப்பதில்லை அண்ணன் என்பவன் தன்னைவிட பெரியவன் வலியவன் விவரம் தெரிந்தவன் அதனால் தன்னை அடிமை படுத்தவும் தனக்குரியதை தர மறுப்பவனாகவும் இருக்கிறான் என்று கருதிக்கொண்டு மனதிற்குள் பகைமையை வளர்த்து கொள்கிறார்கள் பரஸ்பரம் வளருகின்ற பகைமையானது பெரியவர்கள் ஆனதும் சண்டையாக உருவெடுக்கிறது இது மகாபாரத கால முதல் நடைமுறையில் இருக்கும் ஒரு சாபமாகும்.

ஆனால் அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் பொருளாதார சிக்கலை வளர்த்து கொள்ளாமல் ஒருவரோடு ஒருவர் அன்பு பாராட்டி வாழ்கிறார்கள் என்றால் அதுவே ஒரு குடும்பம் பெற்ற வரம் என்றே சொல்லலாம். பங்காளி பகையாளி என்பதை மகாபாரதம் காட்டுகிறது என்றால் தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பதை ராமாயணம் காட்டுகிறது. ஆகவே சகோதர ஒற்றுமை சிறப்பாக அமைந்து விட்டால் மாற்றானை கண்டு ஒரு மனிதன் அஞ்ச தேவையில்லை காரணம் தான் தாக்கபடுவதற்கு முன்பு தன்னை காக்க இன்னொரு கரம் விரைந்து வரும் என்பதை அறிந்தவன் அச்சப்பட மாட்டான்.

சகோதரர்கள் என்பது இணைபிரியாமல் ஒற்றுமையாக இருப்பதே என்பதை தெளிவு படுத்துவதே மிதுன ராசியின் இரட்டையர் சின்னமாகும். இதுமட்டுமல்ல மூன்றாமிடத்தை தைரியஸ்தானம் என்றும் அழைப்பார்கள் அண்ணன் தம்பி ஒற்றுமை இருந்தால் தைரியம் என்பது தானாகவே வந்துவிடும். எனவே ஒரு ஜாதகத்தில் மூன்றாமிடத்தின் அமைப்பை கொண்டு ஒருவனின் சமூக செல்வாக்கை மதிப்பிட்டு விடலாம். 

மேலும் மிதுனம் என்பது மைதுனம் என்ற வார்த்தையின் திரிபு ஆகும். மைதுனம் என்றால் ஆண் பெண் கொள்கின்ற உடலுறவு என்ற பொருளை கொண்டது. மிதுன ராசியின் உருவத்தை உன்னிப்பாக கவனித்தால் ஒரு ஆணும் பெண்ணும் இரட்டையராக இருப்பதை காணலாம் ஒரு மனிதனின் இந்திரியம் வீரியமாக இருந்தால் மட்டுமே அவன் வெற்றிகரமாக இல்லறம் நடத்த முடியும்.ஜாதகத்தில் இந்திரிய வீரியத்தை கட்டுபடுத்தும் கிரகம் புதன் ஆகும். அந்த புதன் தான் மிதுன ராசியின் அதிபதி எனவே தான் மூன்றாம் இடத்தை வீரியஸ்தானம் என்றும் அழைக்கிறார்கள். 

சமூகத்தில் மதிப்பு கிடக்க வேண்டுமென்றால் அண்ணன் தம்பி ஒற்றுமை என்பது மிகவும் அவசியம் இவன் குடும்பமே ஒற்றுமையாக வாழத்தெரியாமல் குடுமிபிடி சண்டையில் மூழ்கி கிடக்கும் போது ஊருக்கு நாட்டாண்மை பேச வந்து விட்டான் பாரு என்று நாலுபேர்கள் கேலி பேசுவார்கள் எனவே சகோதரர்கள் இணைபிரியாத இரட்டையர்களாக இருக்க வேண்டும் என்பது மிதுன ராசியின் உருவதத்துவமாகும். 

அதை போலவே ஒருமனிதன் குடும்ப வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென்றால் இந்திரிய வீரியம் வேண்டும். அது இல்லை என்றால் இல்லற வாழ்வு சிறப்பாக இருக்காது. பல குடும்பங்கள் விவாகரத்து என்ற பீடத்தில் பலியாவதற்கு இந்திரிய கோளாறே மூல காரணமாக இருக்கிறது என்று மனதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே கணவன் மனைவி ஆகிய இருவரும் இல்லறத்தில் வீரியத்தோடு ஒருவருக்கு இணையாக மற்றவர் இருக்க வேண்டும் என்பதற்காகவே இரட்டையர்கள் சின்னம் மிதுன ராசிக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. என்று சொல்லலாம்.+ comments + 6 comments

Excellent, Guruji.

அருமயான விளக்கம் நன்றி

அருமயான விளக்கம் நன்றி

அருமயான விளக்கம் நன்றி

அருமயான விளக்கம் நன்றி

Good sir


Next Post Next Post Home
 
Back to Top