( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சுய இன்பத்தால் ஏற்படும் தீமை


    ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம். உங்களது இணையதளத்தை வெகுநாட்களாக படித்து வருகிறேன். என்னை போன்றவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களுக்கு கூட எளிமையாக அழகாக விளக்கம் தருகிறீர்கள். அதை படிப்பவர்களுக்கு நிச்சயம் ஆறுதலும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.

உங்களிடம் பலர் மிக முக்கியமான வாழ்க்கை சிக்கல்களையும் புனிதமான விஷயங்களையும் கேட்டு தெளிவடைகிறார்கள். அவர்களின் கேள்விகளோடு ஒப்பிடும் போது இப்போது நான் கேட்கும் கேள்வி மிகவும் கீழ்த்தரமானது தரக்குறைவானது உங்களை போன்ற மாமனிதர்களிடம் கேட்ககூடாத கேள்வியாகும். ஆனாலும் இந்த கேள்வியை நான் உங்களிடம் கேட்டே ஆகவேண்டும். திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்பார்கள் என்னை போன்று மலிவான மனிதர்களுக்கு உங்களை போன்ற புனிதர்கள் தெய்வம் போல வழிகாட்ட வேண்டும்.

தயவு செய்து என்னை மன்னித்து கொள்ளுங்கள் நான் ஒரு பாவி வாழ்வில் கடைபிடிக்க கூடாத அனைத்து கெட்ட பழக்கங்களும் எனக்கு தெரியும் அந்த பழக்கத்தில் மீளமுடியாத அளவு நான் மூழ்கி கிடக்கிறேன். புகைபிடிப்பது மது அருந்துவது சுயஇன்பம் அனுபவிப்பது என்று எல்லாவிதமான தீய பழக்கங்களும் என்னை ஆட்டுவித்து வருகிறது நேற்றுவரை அதிலிருந்து விடுபட நான் நினைக்கவில்லை அவைகளெல்லாம் தவறுகள் என்று யாரவது சொன்னால் கூட அவர்களை எதிரியாக கருதியிருப்பேன்.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது எனது உடல்நலம் முழுமையாக கெட்டு விட்டது கைகால்கள் நடுக்கம் எடுக்கிறது. தண்ணீர் குடிக்கும் டம்ளரை கூட சரியாக என்னால் எடுக்க முடியாது அவ்வளவு நடுக்கம். உடம்பு முழுவதும் நெருப்பை வாரி கொட்டியது போல எரிகிறது. இரவில் சரியாக உறங்க முடியவில்லை. விபரீதமான கற்பனைகளும் மன அழுத்தமும் ஏற்படுகிறது. உங்களிடம் இதைச்சொல்ல வெட்கமாகவே இருக்கிறது. ஆனாலும் தாயாரிடம் ஒருகுழந்தை பசியை சொல்லி அழுவது போல வெட்கமில்லாமல் கேட்கிறேன் இந்த பாவிக்கு விடுதலை அடைய வழிகாட்டுங்கள். 35 வயதில் அறுபது வயது கிழவன் போல் ஆகிவிட்ட என்னை காப்பாற்றுங்கள் நீங்களும் கைவிட்டு விட்டால் மரணத்தை தவிர எனக்கு வேறு மார்க்கமில்லை

பெயர் வெளிட விரும்பாத வாசகர்     மது சித்தர்கள் விந்து விட்டவன் நொந்து சாவான் என்று மிக அழகாக சொல்வார்கள் ஆனால் ஆங்கில வைத்தியர்கள் இதை நம்புவது இல்லை சிறுநீர் போல மலம் போல வியர்வை போல விந்துவும் ஒரு கழிவுப்பொருள் அது வெளியேறினால் அதனால் உடம்பிற்கு எந்த கெடுதியும் இல்லை என்கிறார்கள். இது மட்டுமல்ல சுயஇன்ப பழக்கம் கெடுதியானதே அல்ல என்றும் அடித்து பேசுகிறார்கள் அவர்கள் அப்படி கூறுவதன் காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

அதற்கும் காரணம் இருக்கிறது சாதாரணமாக மலஜலம் கழித்தால் அது தவறல்ல அதுவே அதிகமாகி போனால் அது பேதி என்றும் நீரழிவு என்றும் நோய்களாக மாறிவிடுகிறது. அதே போலதான் ஒரு மனித உடலிருந்து சாதாரணமாக இந்திரியம் வெளியேறினால் அது தவறல்ல அதுவே அளவுக்கு அதிகமானால் பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதனால் தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள்.

சிக்மன் ப்ராய்டு என்ற புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர் குழந்தை பருவத்தில் சரியான தாய்பால் இல்லாதவர்கள் பெரியவர்கள் ஆனதும் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவார்கள் என்று சொல்கிறார். அதே போலவே சிறியவயதில் பெற்றோர்களால் அறிவுப்பூர்வமாக பாதுகாக்கப்படாத குழந்தைகளுக்கே சுயஇன்பம் அனுபவிக்கும் பழக்கம் ஏற்படுகிறது என்று சொல்லலாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் அதிகப்படியான தனிமை அதிகப்படியான சுதந்திரம் அதிகப்படியான பணம் இவைகள் அவர்களை பல கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக தள்ளிவிடுகிறது.

தவறுகள் செய்வது அறியாமையால் கூட நிகழலாம் எப்போது ஒரு மனிதன் தான் செய்வது தவறு அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நினைக்கிறானோ அப்போது திருந்தி விடுகிறான். இந்த கேள்வி கேட்டிருக்கும் வாசகர் தான் செய்வது தவறு என்று முற்றிலுமாக உணர்ந்து விட்டார் இனி அவரால் நிச்சயம் விடுதலை பெற முடியும்.

அந்த வாசகர் தனது உடல்நிலையை பற்றி எந்த மருத்துவரிடமும் ஆலோசனை செய்யவில்லை என்று நினைக்கிறேன். அவரிடம் நோயின் தாக்கத்தை விட குற்ற உணர்ச்சியின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதனால் நோயின் கொடுமை கடுமையாக தெரிகிறது முதலில் அவர் தனது கொந்தளிப்பான மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்ததாக அருகாமையில் உள்ள நல்ல சித்தவைத்தியரை பார்த்து நாடி பரிசோதனை செய்து நோயிற்காண மூல காரணத்தை அறிந்து கொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

இருந்தாலும் அவர் சொல்லுகின்ற நோய் அறிகுறிகள் அதிகப்படியான விந்து வெளியேற்றத்தால் ஏற்பட்டதாக இருக்கலாம் அல்லது அதிகமான பித்தம் மற்றும் உஷ்ணத்தால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம் சம்மந்தபட்டவரை நேரில் பார்க்காமல் நாமாக எந்த முடிவிற்கும் வர இயலாது. இருந்தாலும் அவருக்கு சிறிய மருத்துவ ஆலோசனை சொல்ல வேண்டியது. நமது கடமையாகிறது.

கோரைகிழங்கு நூறுகிராம், கொத்தமல்லி விதை நூறுகிராம், சீரகம் ஐம்பது கிராம், சோம்பு ஐம்பது கிராம், நிலப்பனை நூற்று ஐம்பது கிராம் எடுத்துகொண்டு சுத்தமான பசும்பாலில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு அந்த பொருள்களை இடித்து சூரணமாக வைத்துகொண்டு தினசரி காலை மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவற்றால் உடல் நடுக்கம் உடல் எரிச்சல் நமைச்சல் உஷ்ணம் போன்றவைகள் விலகும். ஒருமண்டல காலம் சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும் மனதை கடவுளின் மீது வைத்து மருந்து உண்டுவாருங்கள் மருந்து குணப்படுத்துகிறதோ இல்லையோ இறைவன் கண்டிப்பாக குணப்படுத்துவான்.


------------------------------------------

  சுய இன்பத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடுவதற்கு  ஆசிரமத்தில் அமிர்த சஞ்சீவி மூலிகை கிடைக்கிறது,  பல அன்பர்கள் பெற்று பயனடைந்துள்ளனர். நீங்கள் அந்த மூலிகையை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும்.
------------------------------------------


 ------> இனி உஜிலாதேவி பதிவுகளை செல்பேசியிலும் வாசிக்கலாம் அதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது Google Play‎ Store -க்கு சென்று Ujiladevi என்று டைப் செய்து நமது Apps உங்கள் தொலைபேசியில் Download  செய்து கொள்ளுங்கள் அல்லது  

நேரடியாக Download செய்ய கிழே கிளிக் செய்யவும் -----------------------------------------
+ comments + 45 comments

நீங்கள் சுயஇன்பம் தவறு என்று கூறுவதே தவறு ..அறிவியல் படி வேண்டாம் சாதாரண மனிதனாய் இதை ஆராயலாம் ..பொதுவாக உடல் உறவை தவறு என்று சொல்லாதவர்கள் கூட சுய இன்பத்தை தவறு என்று கூறுவது அறியாமையில் தான் ...சுய இன்பத்தால் மனிதனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை என்றே அறிவியலும் கூறுகிறது ..நீங்கள் அதை நம்ப மாடீர்கள் ..ஆனால் அந்த பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் கடிதத்தை நன்றாக படியுங்கள் ..அவருக்கு மது,புகை பழக்கம் உள்ளது அவரின் உடல் குறைபாடுகளுக்கு அதுவே காரணமாக இருக்கும் இல்லை என்றால் உங்களை போன்றவர்கள் சுய இன்பம் தவறு என்று பொய்யான விளம்பரம் செய்து குற்ற உணர்ச்சியால் அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் ...சுய இன்பம் என்பது எப்போது நோய் ஆகும் (கவனிக்க தவறு இல்லை அதை நோய் என்று தான் கூறுகிறேன்) என்றால் ஒரு மனிதன் தன்னுடைய விருப்பம் இல்லாமலே அதை தினமும் தேநீர் அருந்துவது போல செய்யும் போது தான் இது கூட என் கருத்தே ..இதுவும் சரியான புரிதல் இருந்தால் நம்மை நாமே கட்டு படுத்திக்கொள்ளலாம் ...பொதுவாக ஆண்களுக்கு ஏற்படும் உடலுறவு குறைகளை மட்டும் மட்டமான சிதவைத்தியார்கள் பரப்பும் பொய்யான கொள்கையை போல் சுய இன்பம் காரணமாக சொல்லப்படுகிறது ...அவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் கூட புகை,மது,மன அழுத்தம் இதுவே காரணமாக இருக்கும் ....சுய இன்பம் தவறு என்றால் உடல் உறவும் தவறே ..அறிவியல் இதை இன்னும் தெளிவாக சொல்கிறது சுய இன்பத்தை விட உடலுறவின் போது இன்னும் அதிகம் விந்து வெளியேறும் என்கிறது ....நீங்களே பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டு இன்னும் நிறைய மனிதர்களை மன நோய்க்கு உள்ளாக்காதீர்கள் ...நீங்கள் அறிவியலை நம்பினாலும் நம்பாவிட்டாலும் அறிவியல் என்பது நிருபிக்கப்பட்ட உண்மைகள் ...உங்களுக்கு அறிவியலில் நம்பிக்கை இல்லை என்பதற்காக இதயம் 1000 முறை துடிப்பது இல்லை ....இறுதியாக இந்த கருத்தை நீங்கள் வெளியிட கூட வேண்டாம் தக்க பதில் கூறினால் போதும் ...நன்றி குருஜி

http://en.wikipedia.org/wiki/Masturbation#Health_and_psychological_effects

சுய இன்பம் தவறு என்பது மிகப்பெரிய பொய் . மிக அதிகபடியான சுய இன்பம் தவறு . மிக சமிபத்தில் கூட சுய இன்பம் ஆண்களுக்கு வரும் சிறுநிரக புற்று நோயை தடுபதாக கண்டறிய பட்டுள்ளது . தவறான வழிகடுதலால் பல ஆண்கள் குற்ற உன்னர்வுடன் வாழ்கின்றனர் . இல்லறத்தில் பய உன்னர்வுடன் உள்ளனர் . என் 10 வயதிலே நான் சுய இன்பம் கொள்ள ஆரன்பிதேன். அனால் என்னுடைய தற்போதைய 32 வயதிலேயும் என்னக்கு ஆண்மை குறைவோ எதுவும் வந்ததில்லை , என்னக்கு அழகான குழந்தைகள் உண்டு , நிறையே படித்து சொந்த தொழில் செய்பவன் , ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறேன் . சைவம் மட்டுமே சாப்பிடுபவன் சிறு வயதில் இருந்தே , தயவு செய்து குற்ற உணர்சிக்கு ஆளாகதிர் . - பிரகதீஸ்

சுய இன்பம் தவறு என்பது மிகப்பெரிய பொய் . மிக அதிகபடியான சுய இன்பம் தவறு . மிக சமிபத்தில் கூட சுய இன்பம் ஆண்களுக்கு வரும் சிறுநிரக புற்று நோயை தடுபதாக கண்டறிய பட்டுள்ளது . தவறான வழிகடுதலால் பல ஆண்கள் குற்ற உன்னர்வுடன் வாழ்கின்றனர் . இல்லறத்தில் பய உன்னர்வுடன் உள்ளனர் . என் 10 வயதிலே நான் சுய இன்பம் கொள்ள ஆரன்பிதேன். அனால் என்னுடைய தற்போதைய 32 வயதிலேயும் என்னக்கு ஆண்மை குறைவோ எதுவும் வந்ததில்லை , என்னக்கு அழகான குழந்தைகள் உண்டு , நிறையே படித்து சொந்த தொழில் செய்பவன் , ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறேன் . சைவம் மட்டுமே சாப்பிடுபவன் சிறு வயதில் இருந்தே , தயவு செய்து குற்ற உணர்சிக்கு ஆளாகதிர் . - பிரகதீஸ்

16:51

super comment po.....

இந்த கேன கிருக்கனுங்க நல்லா காதுல பூ சுத்துருனானுங்க... சுய இன்பம் பற்றி 2500க்கும் மேற்பட்ட ஆய்வு செய்து தீமை இல்லைன்னு சொல்லிட்டாங்க... அப்பறம், சிவராஜ் சித்த வைத்தியர் மாறி போய் சொல்லி கூட்டம் சேர்க்கிற கிறுக்கு பசங்க...

Anonymous
21:39

homo sex?,please tell me the effect...

மு.நாட்ராயன்
13:08

இங்கு பலர் சுய இன்பம் சரி என்பதுபோல கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுய இன்பம் என்பது இயற்கைக்கு மாறானது.ஆண் பெண் உறவு என்பது இயற்கையோடு ஒன்றியது. சுய இன்பம் என்பது அப்படி அல்ல. பசிப்பவன் சாப்பிடலாம். அது இயற்கை. சுய இன்பம் அப்படி அல்ல.அது நமது சக்தியையும் மனதையும் கெடுத்துவிடும். பலர் இதனை தெரிவிக்க வெட்கப்படுகிறார்கள். அதனால் திருமணத்தின்போது சொல்லென்ன துன்பத்திற்கு ஆளாகிறார்கள். ஆண் பெண் உறவின் போது அதிக விந்து வெளிப்பட்டாலும் சுய இன்பத்தின்போது குறைந்த விந்து வெளிப்பட்டாலும் தவறுதான்.எதற்க்காக சுய இன்பம்! ஒருமனிதன் தனது உணர்சிகளை கட்டுப்படுத்த முடியாததால்தான். எனக்குத்தெரிந்த ஒருவர் சுய இன்பத்தில் அடிமைப்பட்டு முதல் இரவில் வெட்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. பல நாட்களுக்குப் பிறகு வெட்கமில்லாமல் இதனை நண்பர்களிடம் கூறி சித்த மருவத்தின் மூலம் குறைகளை களைந்து இப்போது குழந்தைகளுடன் இருக்கிறார். ஆண் பெண் உறவின்போது உள்ள இன்பத்தை விட சுய இன்பத்தில் அதிக அளவு இன்பம் இருப்பதுபோல் தெரியும். ஒரு பெண் இன்பப்பொருள் அல்ல. அதே போல் ஒரு ஆணும் ஒரு பெண்ணுக்கு இன்பப்பொருள் அல்ல. இன்பம் என்பது தங்களுக்குள்ளேயே உருவாவதுதான்.தற்போது இது போன்ற தவறுகளுக்கு பெரிய அளவில் மருந்துகள் வந்து விட்டன . சித்த மருத்துவ கடைகளில் இவை தாராளமாக கிடைக்கின்றன. கூச்சப்படாமல் சென்று வயதிக்கு ஏற்ற மருந்துகளை வாங்கி சாப்பிட்டு நன்மையடையலாம். தொடர்ந்து சாப்பிட்டாலும் தவறு இல்லை. இனியாவது சுய இன்பத்தை விட்டுவிட வேண்டும்.

// ...சுய இன்பம் தவறு என்றால் உடல் உறவும் தவறே //

Right point. It's mere psychological fear. Infact those having long time (mutual) sexual life, lives (relatively) longer.

Anonymous
23:32

nengal aanmigakkadal.com- athail ulla thooimaiyana siththa maruthuvathai ariyavum.. if u have not go and search sittharkal.blogspot.com. thannai unarathavan manithan kidaiyathu..

Anonymous
20:46

Say no to masturbation1...........frnds, pls listen to my words.... masturbation is a very bad practice i am telling it from my own expernz even you dont have to believe siddha ayurveda doctors believe your fellow youth . Mastrubation almost destroyed my life. I had been pracitsing it for over 8 years everyday atleast 2 times. In those days i felt physically no problem but even though with good height and weight i could not do even one pull ups, push up and what other normal guys do. In my 19th age I stayed outside and stopped the bad practice for 1 yr belive it or not i could do 10 pull ups and my physical power enhanced . //sexual intercourse is a healthy practice which re energies your body with harmonal activities whereas masturbation will remove all your strenght
To be continued...

Semen is to be injected into Vagina only.Itis not to be wasted/spilled where we like. Semen would automatically Come out of our body at regular interval say once is 40/60 days or more. .One need not masturbate and waste his Biological energy.One who has true manliness would never indulge in abnormal sex behaviours.Brahmachariyam pirathipannam veeriyalabam- Brahmachariyam/chastity brings vitality to Body,Mind and soul.I request advocates of Masturbations to read 1)Mahatma Gandiji - Self-indulgence or Self control-Book pub.by Navajeevan Pathipagam.In the Preface some portions from a French Book is quoted Moral Bankruptcy 2) Sane Sex Order by Pitrim A.Sorokin, an erudite Russian sociologist-Pub by Bharatiya Vidya Bhavan - come to a conclusion after going through it.
To put it short masturbation is not essential

//sexual intercourse is a healthy practice which re energies your body with harmonal activities whereas masturbation will remove all your strenght//

great observation boy!... all the best.

Kavidai naadan & pragadhees,
please read the article fully. Guruji never said that masturbation is bad. he had said only doing it excessively is bad. and those who are pro masturbation can no longer bank up on english medical practitioners any more. Of late some doctors in the west refers the conditions like fatigue, weakness, anxiety, loos of appetite, guilt, and symptoms of sexual dysfunction as dhat syndrome. i.e loss of excessive dhatu(semen) result in these conditions.

Anonymous
12:34

சுய இன்பம் தவறு என்பது பொய்

Anonymous
01:28

suyainbam thavarea idu ungalai verecocel kondu cehelum

அருமையாக சொன்னீங்க நண்பா இவன்களா மாதிரி ஏமாத்துரவங்க இருக்குரவர அதை தப்புனுததான் சொல்வாங்க

athul summa ne bible pate yantha geta palkam vardu

nee bible reding pannu yannath get vardu bible only good

Anonymous
15:25

my name suriya.age27. 13 vayasula eruinthu kaipalakam pandaran.ennaku entha ketapalakamum illa.but
anmaikuraivu iruku.en manaviya suga padutha mudiyala.sidha maruthuvam poi illa, but nature medison very cost and rare. siddha maruthuvar duplicate kodukalam.kai palakam seium ankaluku nendakalam sexyil edupada mudiyathu(35year and 35year low romba kastam)

Anonymous
14:15

avar solrathu unma sir epdina naa 14years la erundhu kai palakkam pandren epa age 26 kai palakkathukum udal uravukkum enna diff na kaila penis azhuthum bothu narambugalil ratha ottam thadipadudhu but udaluravin bothu pen urupula lubricate panra madhiri pasai erukum so off energy dhaan pogum kai pazhakkam thappu ella ana naa(oru masathuku 60times panren apa 12varusathuku evlo nu neengale sollunga edhanala en valkaila ezhandhadhu adhigam ethuku thanni thammunu ketta palakkam evlovo mel but enaku marriage aayiduchi ennala en wife ah thiruphi padutha mudiyala etha padichitu rply pannunga plz

Anonymous
23:04

Kai adithal narampu thalarchi yerpaduma?

ஆணழகன்
01:27

சரியா?தவறா?

சுய இன்பம் கொள்வது தவறு இல்லை.
அளவோடு இருக்க வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால்.அமிர்தமும் நஞ்சு.

சுய இன்பம் கொள்வது தவறு இல்லை.
அளவோடு இருக்க வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால்.அமிர்தமும் நஞ்சு.

Anonymous
18:18

Kai pazhagam thapo thapu illyo athu secondary loss aana vinthu thirumpa kedaikura mathri solution sollunga

tamil
12:31

effect of suyainbam, kai palakkam, kai adithal, effect of suya inbam, suyainbam,
suya inbam side effects,
suya inbam advice,
suya inbam sariya thavara,
suya inbam seithal,
suya inbam kathaigal in tamil,
pengal suya inbam in tamil,
suya inbam tamil video,
suya inbam health,

சுய இன்பம் தவறில்லை.அதை அளவுக்கதிகமாக செய்யும் போதே தவறாகி விடுகிறது.

சுய இன்பம் தவறு என்றால் உடல் உறவும் தவறு தவறு தானே..

Anonymous
00:13

டாக்டர் எனக்கு விந்து சிறு சிறு ஜெல் போல கட்டியாக வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்

thanks anna

vegayam sapital sariya varum

Anonymous
15:34

எனக்கு பதிமூன்று வயதாகும்போது என் ஆண்குறி விரைப்பதை உணர்ந்தேன்; என் அண்ணியும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள், இதை அண்ணியிடம் சொன்னபோது அவள் சொல்லிக்கொடுத்த பழக்கம்தான் முஷ்டி மைதுனம். இந்தவயதில் உடலுறவு வைத்துக்கொள்ளமுடியாது ஆகவே சுய இன்பம் அனுபவிப்பதனால் விந்து வெளிப்படும் அப்போது காம இச்சை அடங்கும் என்று ஆலோசனை சொன்னாள். அப்போதிருந்து எனக்கு திருமணம் ஆகும் வரை சுய இன்பம் செய்தேன். அதனால் மனதை அலையவிடாதபடி காத்துக்கொண்டேன். இல்லறத்தை தொடங்கும்போதும் எந்தகுறையும் இல்லாதபடி மனைவியையும் திருப்திபடுத்திக்கொண்டிருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை சுய இன்பம் தவறல்ல..

Anonymous
10:02

சுய இன்பம் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செய்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்??சுய இன்பத்திற்கான அளவுகோல் என்ன??

Bad misattribution

manathai alai payavidamal irukka neengal enna seitheergal?

இவருக்கு கைகால் நடுக்கம் ஏற்படக் காரணம் போதைப்பொருள் பாவனையே தவிர சுய இன்பம் கிடையாது

Anonymous
07:17

எனக்கு புகை மது பழக்கம் இல்லை ஆனாலும் எனக்கு சுய இன்பத்தால் நடுக்கம் ஏற்பட்டுள்ளது இதனை எவ்வாறு சரி செய்வது

please help me ennala suya inbam pandratha control pannavea mudiyala nan ithala romba verukkuran en life uh... enna pandrathunea theriyala anybody help me plz.

Anonymous
12:07

நான் அதிகமாக சுய இன்பம் செய்கிறேன். அதனால் என் ஆணுறுப்பு கீழே விதைப்பையானது பெருசாகி விட்டது. மேலும் வழக்கத்தை விட விதைப்பை பெருசாக இருப்பதால் பேண்ட் போட்டால் வெளியே தெரிகிறது. இதற்கு வழி சொல்லுங்கள் நண்பர்களே!

Anonymous
20:43

Appadiya

21:54

Pray God worship Lord Siva meditation day by day if u get such thoughts get away from that place and concentrate some other works

Manasu patharrama erukku appidi pokkala m plz help me

Nan 7 varusama sekiran eppa kadakku poka kuda payama erukku anna seiyalam nan padikka asappadukiran vadiva kathakka kuda mudiyalaaa

எனக்கு இப்பொழுது 18 வயதாகிறது. எனக்கு  11ஆவது வயதில் முதன்முறையாக விந்து வெளியேறியது.18 வயதாகி இதுவரை நான் சுயஇன்பம் செய்கிறேன். தினமும் ஒரு முறை அல்லது இரண்டு முறை சுயஇன்பம் செய்கிறேன். இப்பழக்கத்தினால் எனது கை மற்றும் கால்களில் நிரம்பு தெரிகிறது. என்னுடைய ஆணுறுப்பிலுபம் நிரம்பு அதிகமாக தெரிகிறது. நாளடைவில் நிரம்பு அதிகமாக தெரிகிறது . கடந்த இரண்டு வாரங்களாக நான் சுயஇன்பத்தை செய்வதைத் தடுக்க முயல்கிறேன். ஆனாலும் என்னால் நிறுத்த முடியவில்லை. இப்பொழுது எனக்கு பயமாக இருக்கிறது ஒரு வேலை நான் சுயஇன்பத்திற்கு அடிமையாகிவிட்டேனோ என்று. இதிலிருந்து மனதை மாற்ற உடற்பயிற்சியும் செய்தேன். ஆனால் சுயஇன்பத்தால் அதையும் நிறுத்தினேன். நான் ஒல்லியாக உடல் மெலிந்திருப்பதும் நான் உடற்பயிற்சியைக் கைவிட காரணமாயிற்று. இப்பொழுது சுயஇன்பத்திலிருந்து விடுபெற நினைக்கிறேன்.

நான் தினமும் ஒரு முறை தவறாமல் செய்தது தவறா.. இப்பொழுது இந்த பழக்கத்தை நிறுத்தி எனது மனம் மாற உடற்பயிற்சி செய்ய நினைக்கிறேன்..

Please tell me nan seiradhu thavara


Next Post Next Post Home
 
Back to Top