Store
  Store
  Store
  Store
  Store
  Store

அம்மா என்றால் நண்டு !


   ராசி சக்கரத்தில் நான்காவதாக இருக்கும் ராசியின் பெயர் கடகம் கடகம் என்ற வடமொழி வார்த்தைக்கு நண்டு என்பது தமிழ் பொருளாகும் இந்த ராசிக்கு நண்டு சின்னத்தை உருவகமாக கொடுத்ததற்கு தனி சிறப்பு உண்டு ஜாதகத்தில் நான்காவது இடம் தாயாரை குறிப்பது ஆகும். ஒருமனிதன் பூமியில் பிறக்கவும் நல்ல மனிதனாக வாழவும் தாய் என்பவள் மிகவும் அவசியம்.

ஒருவன் அறிவுடையவனாக இருக்கலாம் ஆற்றல் நிரம்பியவனாக இருக்கலாம் பல பதவிகளையும் பணத்தையும் அனுபவிப்பவனாக இருக்கிறான். இப்படி எது இருந்தாலும் அவன் சிறப்புடையவனாக கருதப்பட மாட்டான் ஒழுக்கம் என்பது அவனிடம் இல்லை என்றால் அவன் அரை மனிதனாகவே கருதபடுவான் அல்லது மிருகத்தைவிட கீழானவனாகவே மக்களால் மதிக்கபடுவான் ஒரு மனிதனுக்கு உயிரை விட மேலான ஒழுக்கத்தை கற்றுகொடுப்பவள் தாய்.

தாய் அன்பின் சின்னம் மட்டுமல்ல அறிவின் சின்னமாகவும் இருக்கிறாள். இதனால் தான் மனுதர்ம சாஸ்திரம் ஒரு பெண் கல்வியில் சிறந்தவளாக இருந்தால் அந்த குடும்பம் வெளிச்சம் பெரும் அறிவுடைய குழந்தைகளை சமூகம் பெரும் என்று சொல்கிறது. ஒருகுழந்தை வளர உடலுக்கு போஷாக்கையும் மனதிற்கு தெளிவையும் கொடுப்பவள் தாய் தனது குழந்தை வளர வாழ தன்னையே கூட அற்பணித்து விடுவாள் அதனால் தான் தாய்மையின் சின்னமாக நண்டு கொடுக்கபட்டிருக்கிறது.

உண்டபணக் காரனவன்
தொந்தியென விம்மி நிற்கும்
நண்டிலொறு பிள்ளைநண்டு ஜனனம் - அதை
கண்டவுடன் பெற்ற நண்டு மரணம்

என்று கவியரசு கண்ணதாசன் மிக அழகாக பாடுகிறார். தனது வயிறை கிழித்து குழந்தைகள் வெளிவந்து உல்லாசமாக வாழ தனது வாழ்க்கையே மரணதேவன் காலடியில் சமர்ப்பணம் செய்வது நண்டு அந்த நண்டை போன்றவள் தான் தாய் தான் பட்டினி கிடந்தாலும் தனது சேய் பட்டினி கிடக்க விடமாட்டாள் தன் குழந்தை வாழ தாயால் மட்டுமே உயிரை கொடுக்க முடியும் இதை நன்றாக அறிந்த நமது முன்னோர்கள் தாய்மையை விளக்கும் ஜாதகத்தின் நான்காவது இடத்தை நண்டாக நமக்கு காட்டினார்கள்.

குழந்தைகள் எந்த வேலையும் செய்யாது காரணம் அவைகளுக்கு வேலை செய்ய தெரியாது. எல்லாவற்றையும் அதாவது தனது தேவைகள் அனைத்தையும் தாயாரிடம் ஒப்படைத்து விட்டு கவலை இல்லாமல் காலத்தை கடத்தும் குழந்தைக்கு எப்போது பசிக்கும் என்ன உணவு செரிக்கும் என்பது அம்மாவுக்கு மட்டுமே தெரியும் ஒரு குழந்தையின் அழுகை சத்தத்தை வைத்து அது பாலுக்கு அழுகிறதா நோயால் அழுகிறதா என்பதை அம்மா மட்டுமே அடையாளம் கண்டு கொள்வாள்.

இந்தவேளைக்கு உணவு கிடைத்தது அடுத்த வேளைக்கு கிடைக்குமா கிடைக்காதா என்று எந்த குழந்தையும் கவலை படுவதில்லை எல்லாவற்றையும் அம்மா பார்த்துகொள்வாள் என்று சுகமாக உறங்கும் விளையாடும் அதனால் தான் தாய்மையை குறிக்கும் நான்காவது இடத்தை சுகஸ்தானம் என்றும் முன்னோர்கள் சொன்னார்கள்.

குழந்தைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து போக மாட்டார்கள் அவர்களை இடுப்பில் தூக்கி கொண்டோ தோளில் சுமந்து கொண்டேோ பெற்றோர்கள் செல்வார்கள் அதே போலவே ஒரு ஜாதகத்தில் நான்காவது இடம் ஒருவன் பெரும் வண்டி வாகன யோகத்தை காட்டுகிறது. ஆக கடகம் என்பது தாய்மையை காட்டும் சுகத்தை தரும் உல்லாச பயணத்திற்கு வாகனத்தையும் தரும்.





Contact Form

Name

Email *

Message *