Store
  Store
  Store
  Store
  Store
  Store

சண்டைக்கு வருகிறாயா?


    ராசி சக்கரத்தில் ஐந்தாவதாக வருவது சிம்ம ராசி சிம்ம ராசியின் சின்னம் சிங்கம் சிங்கத்தை மிருக ராஜா காட்டு ராஜா என்று அழைக்கிறோம். மேலும் சிங்கம் கம்பீரத்தின் சின்னமாகவும் இருக்கிறது. வீரம் பொருந்திய தைரியம் மிகுந்த துணிச்சல்காரர்களை சிம்மம் போன்றவர் என்று அழைப்போம்.

சிங்கத்தின் இயற்கை குணம் தலைமை தாங்குவது. தன்னைவிட பலம்பொருந்திய பிரம்மாண்டமான உருவம் கொண்ட யானையே எதிரே வந்தாலும் சிங்கம் கலங்காது. சண்டைக்கு வருகிறாயா? வா மோதி பார்க்கலாம் என்று சவால் விட்டு எதிர்நிற்கும். மனிதர்களில் தலைமை தாங்கும் பண்பு யாரிடம் உள்ளதோ அவரே எத்தனை பெரிய எதிரி வந்தாலும் கலங்காது நேருக்கு நேராக நிற்க விரும்புவார்கள்.

எனவே தான் ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாம் பாவத்தை கணக்கிட்டு அவருக்கு கிடைக்க கூடிய உயர்ந்த பதவிகளை கண்டறிய படுகிறது. அரசாங்கத்தின் தலைமை பொறுப்பு அமைச்சராகும் வாய்ப்பு உயர் அதிகார பதவி போன்றவைகளை ஐந்தாமிடம் காட்டும்

சிங்கம் காட்டு விலங்காக இருந்தால் கூட கூட்டு குடும்பமாக வாழவே விரும்பும். ஒரு குடும்பம் வாழையடி வாழையாக வளர்ச்சி அடைவதற்கு குழந்தைகள் மிகவும் அவசியம் சிங்க குடும்பத்தில் போற்றி பாதுகாக்கபடுவது பெண்சிங்கமோ ஆண்சிங்கமோ அல்ல குட்டி சிங்கங்களே குடும்ப பொக்கிஷங்களாக கருதபடுகிறது மனித வாழ்க்கையிலும் குழந்தைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது.

அதனால் தான் சிங்கத்தை சின்னமாக கொண்ட ஐந்தாம் பாவம் புத்திரஸ்தானம் என்று அழைக்கபடுகிறது. ஒரு ஜாதகத்தில் ஐந்தாமிடம் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தே ஒருவருக்கான குழந்தை பாக்கியம் கண்டறியபடுகிறது. ஐந்தாமிடத்தின் அதிபதியும் புத்திறபேருக்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக இருக்கிறார்.

ஒருமனிதன் வாழ்வாங்கு வாழ்ந்தான் என்பதன் அடையாளம் அவன் சமூகத்திற்கு ஆற்றிய பங்குபணியை வைத்தே சொல்லபடுகிறது. சிறப்பான சேவை செய்ய நல்ல மனமும் பணமும் மட்டும் இருந்தால் போதாது தடைகள் வந்தால் உடைத்து போடும் அதிகாரமிக்க பதிவயும் வேண்டும். அதே போலவே குடும்ப வாழ்வில் கடைபிடிக்கும் நெறிமுறைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்ல நல்ல வாரிசுகள் வேண்டும்.

பதவி எப்படி இருக்கும் வாரிசு எப்படி இருக்கும் என்பதை காட்டுவது ஐந்தாமிடம் பதவியும் வாரிசும் சிங்கம்போல் இருந்தால் எந்த குறைவும் எப்போதும் இல்லை. எனவே தான் சிங்கம் ஐந்தாமிடத்தின் சின்னமாக காட்டபடுகிறது.
Contact Form

Name

Email *

Message *