Store
  Store
  Store
  Store
  Store
  Store

யாருக்கு ஓட்டுப் போடலாம்...?


   டிமுதல் நுனி வரை கரையான் போல ஊழல் பரவிவிட்டது பலகையால் போட்ட பரண் இப்போது விழுமோ அப்போது விழுமோ என்றிருப்பது போல நமது தேசத்தின் நிலையம் ஊசலடி கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வையும் தேசத்தின் வளத்தையும் சாகடித்து கொண்டிருக்கும் ஊழலை நம்மால் ஒழித்து விட முடியுமா?

கம்பராமாயணத்தில் அயோத்தி நகரை வர்ணனை செய்யும் போது அந்நகர வீடுகளில் கதவுகள் இல்லை ஏனென்றால் அங்கே திருடு இல்லை தானம் கொடுப்பவர் யாரும் அயோத்தியில் கிடையாது காரணம் அங்கே யாசகம் வாங்க யாருமே இல்லை என்று மிக அழகாக கம்பன் வர்ணனை செய்வான் அதை படிக்கும் போது இப்படி ஒரு தேசம் இருக்காதா நாம் அதில் வாழமாட்டோமா என்று ஏக்கம் வரும் கம்பன் காட்டிய அயோத்தி வர்ணனை எப்படி ஒரு அழகான கற்பனை எதிர்பார்ப்போ அப்படி ஒரு எதிர்பார்ப்பு தான் ஊழலில்லாத அரசும், நாடும்

ஊழல் என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல மனைவியின் முத்தத்தை பெற அவளுக்கு பரிசு கொடுக்க வேண்டுமென்று ஒரு மனிதன் எப்போது நினைத்த்தானோ அப்போதே ஊழல் பிறந்து விட்டது. சுருக்கமாக சொல்வது என்றால் மனிதன் சக்கரத்தை கண்டுபிப்பதற்கு முன்பே உழழலை கண்டுபிடித்து விட்டான் சின்ன சின்ன காரியங்களுக்கு நடக்கும் தில்லுமுல்லுகளை மன்னிக்கல்கம் காரணம் அவைகள் ஒருவித இயற்க்கை சுபாவத்தோடு சம்மந்தபட்டது ஆனால் சுயநலத்தை மட்டுமே மூலாதாரமாக கொண்டு ஊழல் நடத்தப்படும் போது தான் மன்னிக்க முடியாத குற்றமாகி விடுகிறது. எனவே முற்றிலுமான ஊழல் இல்லாத தேசம் என்பது கற்பனை மட்டுமே ஊழல் குறைந்த தேசமாக இருக்க வேண்டும் என்பதே எதார்த்தமான எதிர்பார்ப்பாகும்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் ஊழல் தவிர்க்க முடியாத சமூக கரை என்று தோன்றுகிறது இருந்தாலும் நம் நாடு இன்று ஊழல் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது அதை மீட்க ஊழலை சற்றேனும் குறைக்கக் எதாவது வழியுண்டா?

ஊழல் என்றவுடன் பொதுவாக நாம் அனைவருமே அரசியல்வாதிகளின் மீது பழிபோட்டு தப்பித்து கொள்ள பார்க்கிறோம் இந்தியாவில் ஊழல் மலிந்து போனதற்கு அரசியல்வாதிகளை மட்டும் குறைசொல்ல முடியாது பொதுமக்களாகிய நம்மீதும் போதுமான குற்ற சாட்டை சுமத்தலாம் நாம் ஒவ்வொருவருமே மற்றவர்களின் குறைகளை பெரிதாக பேசுகிறோமே தவிர நம் குறைகளை பரிசீலினை செய்து பார்ப்பது இல்லை இறப்பு சான்றிதழ் வாங்குவதில் துவங்கி கல்லூரியில் குழந்தைகளை சேர்ப்பதில் வரையில் லஞ்சம் கொடுத்தாவது காரியம் சாதிக்க முடியுமா? என்று பார்க்கிறோம்

குற்றவாளிகள் நம் கண்ணெதிரே தெரிந்தால் அவர்களை காட்டிகொடுக்க அஞ்சிகிறோம் காரணம் நமக்கு எதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று பயப்படுகிறோம் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று வாய்மூடி மெளனியாக இருந்துவிடுகிறோம் நமது அறியாமையும் நமது சுயநலமும் நமது பயமும் ஊழலை வளர்க்க பெரிதும் உதவுகிறது. எனவே மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்ச்சி இல்லாத வரையில் ஊழல் செய்கின்ற அரசியல் வாதிகளின் கைகளிலே அதிகாரம் போவவதை யாரும் தடுக்க முடியாது.

ஊழலை ஒழிக்கபோவதாக பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றோர்கள் புறப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமா? அவர்களால் இந்த நாட்டிற்கு ஓரளவாவது வெளிச்சத்தை தரமுடியுமா?

பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகிய இருவருமே நல்லவர்கள் தான் நம்மால் இந்த நாட்டிற்கு எதாவது நன்மை செய்ய முடியுமா என்று யோசிப்பவர்கள் தான் அதில் எனக்கு சந்தேகமில்லை ஆனால் தாங்கள் பேசுவதை சாதிக்க கூடிய மனோதிடம் இவர்களிடம் இருக்கிறது என்று என்னால் நம்ப முடியவில்லை காரணம் முன்பு ஒருமுறை ராம்லீலா மைதானத்தில் உண்ணா நோம்பு இருந்த போது ராம்தேவ் காவலர்களிடமிருந்து தப்ப்பித்து சென்றமுறை அவரது மனதிடத்தை காட்டவில்லை அரசாங்கம் கெடுபிடி செய்ய ஆரம்பித்தவுடன் அவர் காட்டிய மெளனம் அறிவு பூர்வமான வீரமில்லை

பாபா ராம்தேவ் தனது நடத்தையில் மட்டும் தான் குழப்பம் காட்டுகிறார் அன்னா ஹசாரையோ அடிப்படை கொள்கையிலேயே குழப்பமுடையவராக தோற்றம் அளிக்கிறார் ஆக இவர்கள் இருவர் இடத்திலும் நெஞ்சுறுதி கிடையாது இவர்கள் நடத்துகின்ற போராட்டம் ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல மீண்டும் ஆள்பவர்களுக்கே சாதகமாக கொண்டுபோய் விடும். எனவே இவர்களை நம்புவதை விட எதாவது ஒரு அரசியல் கட்சியை நம்பினால் தற்போதைய சூழலுக்கு ஒரு தற்காலிக தீர்வு கிடக்கும்

அப்படி என்றால் பாரதிய ஜனதாவிற்கு ஓட்டு போட்டால் நல்லது என்று சொல்கிறீர்களா?

பாரதிய ஜனதாவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்க வில்லை தேசநலனில் அக்கறை இல்லாத தன்மையில் இருவருமே இரட்டை குழல் துப்பாக்கி என்று சொல்வேன் விடுதலை பெற்ற பிறகு வெகுநாட்களாக இந்த நாட்டை காங்கிரசும் சிறிது காலம் மற்ற கட்சிகளும் ஆண்டு இருக்கின்றன மாற்று ஆட்சியில் திரு மொரார்ஜிதேசாய் அவர்களின் ஆட்சி மட்டுமே சிறப்புடையதாக இருந்தது என்று சொல்லலாம் இன்று ஜனதாவுமில்லை மொரார்ஜி ஜெயப்ரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்களும் இல்லை

இன்றைய சூழலில் சில நல்ல தலைவர்கள் பொதுவுடைமை கட்சிகளில் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை ஆட்சிக்கு வரவிட்டால் இந்திய தன்மை என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் சிவப்பு மயமாக மாற்றிவிடுவார்கள் அந்த அபாயத்தை ஒருபோதும் இந்தியாவால் தாங்கி கொள்ள முடியாது ஆனாலும் இந்திய பண்பாட்டின் அடிநாதத்தை பொதுவுடைமை வாதிகள் ஒத்துகொண்டால் அவர்களுக்கு ஓட்டு போடலாம் இல்லை என்றால் வீட்டு அரக்கனை விட வீதி அரக்கனே மேல் என்பது போல பாரதிய ஜனதாவிற்கு ஒட்டுப்டலாம். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்ன செய்வது நம் தலையெழுத்து அப்படி இருக்கிறது

Contact Form

Name

Email *

Message *