Store
  Store
  Store
  Store
  Store
  Store

எந்த தொழில் செய்வது...?


   குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் ஐந்து வருடமாக வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறேன். உள்நாட்டிற்கு வரவேண்டும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்பது என் ஆசை அப்படி வந்தால் நல்ல வாழ்க்கை அமையுமா? என்று பயமாக இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேல் சவால்களை எதிர்கொள்ளவும் போராடவும் துணிச்சல் வரவில்லை அப்படியே தாய்நாட்டுக்கு வந்தாலும் என்ன தொழில் செய்வது தெரியவில்லை குருஜி அவர்கள் நான் தாய்நாட்டுக்கு வரலாமா? வந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா? எந்த தொழில் செய்வது என்பதை தயவு செய்து தெளிவாக சொல்லவும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

தங்கதுரை,சிங்கபூர்


   செங்கமேட்டிலிருந்து சென்னை பட்டிணம் வந்துவிட்டாலே பலபேருக்கு சொந்த ஊரும் மறந்து போகிறது நகரத்திலேயே பிறந்து நகரத்திலே பலவருடகாலம் வாழ்ந்தவர்கள் போல பேசுவார்கள் நடையுடை பாவனையை மாற்றிகொள்வார்கள் கிராமத்தான் அனைவருமே காட்டுமிராண்டிகள் என்பது போல பேசவும் செய்வார்கள்.

இப்படி பட்ட நல்லாத்மாக்கள் வெளிநாடு போய்விட்டால் கேட்கவே வேண்டாம். துபாய் ரோடெல்லாம் கண்ணாடி மாதிரி பளபளவென்று மின்னுகிறது அமெரிக்காவில் தண்ணீரி குடித்தால் வயிறு வரை இனிக்கிறது. ஜப்பான் மீனை உயிரோடவே சாப்பிடலாம் என்று கதையளப்பார்கள்

பொதுவாக நம் தமிழ்நாட்டு மனிதர்களுக்கு வெகுகாலமாகவே ஒரு நோய் இருக்கிறது நம் சொந்த நாடு என்னவோ வறண்டு போய் கிடப்பதாகவும் பசி பட்டினி மட்டுமே இந்த நாட்டு சொத்தாக இருப்பது போலவும் நினைக்கிறார்கள் அதுவும் வெள்ளைகாரர்கள் எதாவது அசட்டு தனமாக உளறினால் கூட அது தான் அறிவுபூர்வமானது அறிவியல் ரீதியானது என்று வியாக்கியானம் செய்வார்கள் இந்த வியாதி இன்றுவரை குறையவே இல்லை

வெளிநாட்டுக்கு போய் ஒட்டகம் மேய்த்து செம்பரியாட்டு கூட்டத்திற்குள் உறங்கி விட்டு தலைதப்பினால் போதுமென்று தாய்நாட்டுக்கு வந்து பட்ட கஷ்டத்தை எல்லாம் சொல்லி அழுதால் கூட அவன் பேச்சை கேட்கபதற்கு இங்கு யாருமில்லை ஒருபுறம் அதை கேட்டு கொண்டே இன்னொருபுறம் வெளிநாடு செல்ல ஏஜண்டிடம் பணம் கட்டுவார்கள்

இந்த நிலையில் அயல்நாட்டில் நல்ல வசதி வாய்ப்போடு வாழகூடிய சூழ்நிலை உங்களுக்கு இருந்தாலும் அவைகளை விட்டு தாய்நாடு வரவேண்டுமென்று ஆசைபடுகிரீர்களே அதை முதலில் பாராட்ட வேண்டும். நிறையப்பேர் ஆட்டை மேய்த்தோமா கோலை போட்டோமா என்று ஒரு வேலையை பார்த்து மாத சம்பளம் வாங்கி பிழைப்பை நடத்தவே விரும்புவார்கள் அவர்கள் மத்தியில் சொந்த தொழிலை செய்ய ஆசைபடுகிரீர்களே அதையும் பாராட்டியே ஆகவேண்டும்.

வராகிமீகிரர், ஜெய்மினி போன்ற முனிவர்கள் எழுதிய ஜோதிட நூல்களும் ஜாதக அலங்காரமும் ஒருமனிதனுடைய ஜாதகத்தில் சந்துரனுக்கு மூன்றமிடத்தில் சுக்கிரன் இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு மூன்றாமிடத்தில் சந்திரன் இருந்தாலோ அதுவுமில்லை என்றால் சந்திரனும் சுக்கிரனும் ஒன்றை ஒன்று பார்த்துகொண்டாலோ அவனுக்கு பல வண்டி வாகனங்கள் இருக்கும் அவைகளை வைத்து அவன் நல்ல முறையில் தொழில் செய்யலாம் முன்னேறலாம் என்று சொல்கின்றன.

எனவே நீங்கள் மிக தைரியமாக வரும் தைமாதம் பிறந்தபிறகு சொந்தநாடு வரலாம் அப்படி வருவதனால் எந்த குறைவும் உங்களுக்கு ஏற்படாது நான் மேலே குறிப்பிட்ட ஜாதக அமைப்பு போல உங்கள் ஜாதகம் இருப்பதனால் சொந்தமாக வண்டி வாகனங்களை வைத்து வாடகைக்கு கொடுத்து வியாபாரம் செய்யலாம் அது நல்லமுறையில் நடக்கும் கவலை வேண்டாம்.

Contact Form

Name

Email *

Message *