Store
  Store
  Store
  Store
  Store
  Store

வாஸ்து குறைபோக்கும் வன்னி மரம்


  • யா நான் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் ஜாதகப்படி என் லக்கினம் மேஷம் எனக்கு வரும் சனி பெயர்ச்சி முதல் ஏழரை சனியில் ஜென்ம சனி நடை பெற போகிறது இதில் என் உடல் நலத்திற்கு எதாவது பிரச்சனை வருமா? தயவு செய்து விளக்கம் தரவும்
ராஜ கோபாலன் கள்ளக்குறிச்சி


   நீங்கள் அனுப்பிய உங்களது பிறந்த குறிப்பை வைத்து திருக்கணித பஞ்சாங்கம் படி கணித்து பார்த்ததில் உங்களுக்கு ஏழரை சனியின் பாதிப்பு அதிகம் இருக்காது

காரணம் உங்கள் ஜாதகத்தில் சனியின் இரண்டாவது சுற்று தான் இது அதாவது இந்த ஏழரை சனியின் காலம் உங்களை பொருத்தவரை பொங்கு சனி காலமாகும்

இந்த கால கட்டத்தில் பொருளாதாரம் மற்றும் சாமூக அந்தஸ்தில் உயர்வு ஏற்படுமே தவிர தாழ்வு வராது

மேலும் சுவாதி நட்சத்திரம் சனியை பொருத்தவரை சாதகமான நட்சத்திரமாகும் இதனாலும் உங்களுக்கு ஜென்ம சனி பாதிப்பை கொடுக்காது என்று சொல்லலாம்

மற்றப்படி உங்களுக்கு நடப்பு திசை மற்றும் புத்தி நல்லவிதமாகவே இருக்கிறது எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை

இருந்தாலும் திருநள்ளாறு சென்று சனிஸ்வரனை தரிசனம் செய்வது சாலச் சிறந்தது ஆகும்

அப்படி செய்ய முடிய வில்லை என்றால் சனிக்கிழமை தோறும் காகத்திற்கு எள்ளு சாதம் கொடுங்கள்

நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.


  • ன் வீடு வாஸ்துப்படி சரியாகவே கட்டப்பட்டுள்ளது இருந்தாலும் வீட்டுக்குள் சென்றவுடன் மனம் நிலை இல்லாமல் அலைகிறது இனம் புரியாத படப்படப்பு கோபம் வருகிறது இது என் வீட்டில் உள்ள எல்லோருக்குமே தினசரி நடக்கும் சம்பவமாகி விட்டது எதனால் இப்படி இருக்கிறது? இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
ராஜ கோபாலன் கள்ளக்குறிச்சி


நீங்கள் அனுப்பிய வரைபடப் படி உங்கள் வீட்டு அமைப்பு மிக சரியாக இருக்கிறது

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஜாதகமும் நல்ல நிலையிலேயே உள்ளது

ஆனாலும் வீட்டுக்கு வெளியே அமைதி உள்ளே பரபரப்பு என்பதற்கு உங்கள் மனையின் மண் அமைப்பில் எதாவது தவறு இருக்கலாம்

அதை ஆரம்பத்தில் நீங்கள் ஆராயாமல் விட்டு விட்டீர்கள் இனி அதை பற்றி வருத்தப்பட்டு பயன் இல்லை

மண்ணில் உள்ள எல்லா விதமான தோஷங்களையும் நீக்க வல்லது வன்னி மரம்

உங்கள் வீட்டில் எட்டு மூலையிலும் வன்னி மர குச்சியை அம்மாவாசை தினத்தில் அதிகாலையில் பள்ளம் தோண்டி புதைத்து விடுங்கள்

அறுபது நாளில் மண்ணின் தோஷங்கள் படிப்படியாக விலகி விடும்

பிறகு உங்கள் அனைவருக்கும் மனதில் மகிழ்வும் அமைதியும் தானாக ஏற்படும்Contact Form

Name

Email *

Message *