Store
  Store
  Store
  Store
  Store
  Store

இணையதளங்களுக்கு தடை அவசியமா?


    சாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுகின்ற கலவரங்களுக்கு சில இணையதளங்களும் அலைபேசியின் குறுந்தகவல்களும் காரணமென்று அவைகளை தடை செய்ய மத்தியரசு தீர்மானித்திருப்பது சரியான அணுகுமுறை தானா?

    டகிழக்கு மாநிலங்களில் கலவரங்கள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணங்கள் இன்று நேற்று உருவானது அல்ல வங்காளதேசத்திலிருந்து சட்ட விரோதமாக பலர் வந்து இந்த மாநிலங்களில் குடியேறினார்கள் அவர்களை முறைப்படி திருப்பி அனுப்பாமல் அவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக வாக்கு வங்கியை கவனத்தில் வைத்து போடோ ஆதிவாசி மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்காமல் ஒருதலை பட்சமாக மத்திய மாநில காங்கிரஸ் அரசுகள் நடந்து கொண்டதே தற்போதைய கலவரங்களுக்கு மிக முக்கிய காரணமென்று துணிந்து சொல்லலாம்.

அசாம் கனபரிஷத் தலைவர் பிரபுல்ல குமார் மகந்தாவுக்கும் அப்போதைய பிரதமர் திரு ராஜிவு காந்திக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமே அசாமில் உள்ள அந்நியர்களை அவர்கள் நாட்டிற்கு உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்பது தான் ஆனால் ஒப்பந்தம் ஏற்பட்ட உடனேயே அதை ஒரு வெற்றி விழாவாக கொண்டாடுவதில் ராஜீவ் காட்டிய அக்கறை ஒப்பந்தத்தை செயல்படுத்தியதில் காட்டவில்லை பிரபுல குமார் மகந்தாவும் தனது போராட்ட வாழ்க்கையே முடிவுக்கு கொண்டு வந்து பதவியை பிடிப்பதில் காட்டிய அக்கறையை மக்கள் பிரச்சனையில் காட்டவில்லை

ஆக பலகாலமாக நீருபூத்த நெருப்பாக இருந்த பிரச்சனை இப்போது பற்றி எரிகிறது அசாமை ஆளுகின்ற காங்கிரஸ் அரசாங்கமும் நாட்டில் அமைதியை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு மிக்க மத்திய அரசாங்கமும் தன்னலத்தை மட்டுமே குறியாக கொண்டு செயல்படுவதனால் இப்போது நிலைமை கட்டுகடங்காமல் சென்று கொண்ருக்கிறது ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல இந்தியாவில் உள்ள சிறிய நெருப்பு துண்டையும் ஊதி பெருசாக்கி குளிர்காய நினைக்கிறது பாக்கிஸ்தான் நிர்வாகம்

இதில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள தயங்கிறோம் இந்தியாவிற்கு தீங்கு செய்ய வேண்டுமென்று பாக்கிஸ்தான் மட்டுமே நினைக்கிறது பங்களாதேஷ் தோழமை பாராட்ட நினைக்கிறது என்று தவறாக நம்பி கொண்டிருக்கிறோம் நம்மால் உருவானது தான் பங்களாதேஷ் என்ற நாடு என்றாலும் அந்த நாடு நம்மை எப்போதுமே தோழமையோடு அணுகியது இல்லை இஸ்லாமியர்களுக்கு விரோதமான நாடு இந்தியா என்ற நோக்கத்திலே தான் நம்மை பார்க்கிறது எனவே இந்த விஷயத்தில் பாக்கிஸ்தானை எந்த அளவு எச்சரிக்கையோடு அனுகவேண்டுமோ அதே அளவு எச்சரிக்கையோடு வங்காளதேசத்தையும் அணுக வேண்டும்

அந்நிய சக்திகளின் ஊதுகுழலாக சில இணையதளங்கள் செயல்பட்டது என்றால் அவைகளை தடை செய்வதில் யாருக்கம் மாற்று கருத்து இருக்காது அதற்காக இணையதளங்கள் அனைத்துமே வதந்திகளை பரப்புகிறது என்று பொதுவாக குற்றம் சாட்டி எல்லோரையும் முடக்குவதை ஜனநாயகத்தை விரும்பும் யாரும் ஏற்றுகொள்ள மாட்டார்கள்.


அப்படி என்றால் இணையதளங்களை முடக்குவது தவறு என்கிறீர்களா?

   ணையதளங்கள் என்பது இன்றைய சூழலில் தகவல்களை உடனுக்குடன் தருகின்ற மிக சக்தி வாய்ந்த ஊடகங்களாக இருந்து வருகிறது பொதுமக்களுக்கு சேவை செய்யும் சமூக ஊடகங்களுக்கு சில பொறுப்புகள் உண்டு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் எந்த ஒரு தகவலையும் வெளியிடுவது இல்லை என்ற சுய கட்டுப்பாடு அவைகளுக்கு மிகவும் அவசியம் அடங்காத பிள்ளையை அடித்து அடக்குவது போல தவறு செய்யும் தளங்களை தடை செய்வதில் தாமதம் கூடாது அதே நேரம் அரசின் செயல்களை ஜனநாய முறையில் விமர்சனம் செய்யும் தளங்களை கூட சுய நோக்கத்திற்காக தடை செய்வது மிகவும் தவறு

இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சியில் இணையதள குற்றங்கள் கண்டுபிடித்து அடக்குவது ஒன்றும் கடினமானது அல்ல பயிரில் உள்ள களையை பிடுங்கும் போது பயிருக்கு சேதாரம் வராமல் பாதுகாவல் செய்பவனே சிறந்த விவசாயி ஆனால் நம் அரசு பிரச்சனையின் உண்மை காரணத்தை தீர்ப்பதை விட்டு விட்டு இணையதள விஷயங்களை பெரிதுப் படுத்தி மக்களை திசை திருப்ப பார்க்கிறது. கிழக்குமாகான மக்கள் கும்பல் கும்பலாக இடமாருவதற்கு மிக முக்கிய காரணம் sms மற்றும் இன்டர்நெட் மட்டுமே காரணம் அல்ல அரசின் ஓட்டு வங்கி கணக்கே காரணமாகும் எனவே தடைசெய்ய வேண்டியது வலைதளங்களை அல்லாமல் அரசாங்கத்தின் தவறுதலான செயல்பாட்டை பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரமென்று பாரதி சொல்வான் இன்றைய அரசாங்கம் பேயாகவே இருப்பதனால் தான் வடகிழக்கு மாகாணங்கள் பற்றி எரிகின்றன.




Contact Form

Name

Email *

Message *