Store
  Store
  Store
  Store
  Store
  Store

நிதி உதவி கிடைக்குமா...?


   குருஜி அவர்களுக்கு வணக்கம் நானும் எனது நண்பர்களும் சேர்ந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்ய ஒரு அறகட்டளை துவங்கி ஐந்து வருடமாக நடத்தி வருகிறோம். எங்களது சொந்த பணமும் பொது மக்களின் நன்கொடையும் மட்டுமே இப்போது எங்களது சேவைக்கு துணையாக இருக்கிறது. ஆனாலும் மனம் தளராது தொடர்ந்து எங்கள் பணியை செய்து வருகிறோம். தற்போது எங்கள் அறகட்டளைக்கு அரசாங்கம் மற்றும் அயல்நாட்டு நிதி உதவி பெற முயற்சித்து வருகிறோம். அந்த முயற்சி தாமதமின்றி நடைபெறுமா அல்லது காலதாமதம் ஆகுமா என்று தெரியவில்லை எங்கள் அறகட்டளையின் தலைவர் என்ற முறையில் எனது ஜாதகத்தை அனுப்பி உள்ளேன் அதன்படி நல்லது நடக்குமா என்பதை தயவு செய்து கணித்து சொல்லவும்.

துரைராஜ்,ஊத்துக்குளி


   பொது சேவையை சுயநலமில்லாமல் செய்துவரும் உங்களுக்கு எனது பாராட்டுகள் எப்போதுமே நல்ல காரியங்கள் செய்ய முதலில் தடை வரும் நாம் மனவுருதியோடும் விடா முயற்சியோடும் தொடர்ச்சியாக செயல்பட்டால் கண்டிப்பாக தடைகள் விலகி வெற்றி கிடைத்தே தீரும் எனவே தடைகளை நினைத்து வருத்தபடாமல் எடுத்துக்கொண்ட பணியில் முன்னேறி செல்லுமாறு உங்களை வாழ்த்துகிறேன்.

பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்திற்குறிய கிரகம் பத்தாம் இடத்து அதிபதியோடு சேரும் போதோ அல்லது பத்துக்குடையவனை பார்க்கும் போதும் அரசு மற்றும் வெளி நிறுவனங்களில் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்குமென்று சொல்வார்கள் உங்கள் ஜாதகத்திலும் வரும் டிசம்பர் மாதத்தில் ஒன்பதுக்குரிய கிரகம் பத்தாம் அதிபதியோடு சேர்கிறது எனவே நீங்கள் எதிர்பார்த்தபடி உதவி கிடைக்குமென்று உறுதியாக சொல்லலாம் உங்கள் மக்கள் பணிக்கு இறைவன் எப்போதுமே துணை செய்வான்.
Contact Form

Name

Email *

Message *